இன்றைய அற்புதம் : இயேசு, காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் அடக்குதல் (லூக்கா 8:22 -25)
ஒருநாள், இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், 'ஏரியின் அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்' என்று, அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும், படகைச் செலுத்தினார்கள்.படகு போய்க் கொண்டிருந்தபோது, அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது, ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் அவரிடம் வந்து, 'ஆண்டவரே, சாகப் போகிறோம்', என்று சொல்லி, அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து, காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்து கொண்டார். உடனே அவை ஓய்ந்தன. அமைதி உண்டாயிற்று. அவர் அவர்களிடம், 'உங்கள் நம்பிக்கை எங்கே?' என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், 'இவர் காற்றுக்கும் நீருக்கம் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?'என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
இன்று நாம் மேற்கண்ட அற்புதம், இன்றைய நம் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்துள்ளது. சென்னை மக்கள், மழையினால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இச்சூழலில் இந்த அற்புதத்தை வாசிக்கும் போது....
நாமும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து, அவரிடம் சென்னை மக்களுக்கு ஒருபுதிய நல்வாழ்வு மலர வேண்டுவோம்.
இறைவன் இயற்கையையும் அடக்கவல்லவர்.
இறைவன் நம்மை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!
அன்புடன்
இனியாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக