அவளைப் பற்றி
நான் பேசும் வார்த்தைகள்
அவள் காதை எட்டும் வரைப் பேசுவேன் என்று
நான்னினைத்தது தவறு என்பதே
இப்போது தான் புரிகிறது....
நான் பேசியது அவளைப் பற்றி அல்ல...
என்னுடைய வளர்ப்பைப் பற்றி என்று!!!
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளைப் பற்றி
நான் பேசும் வார்த்தைகள்
அவள் காதை எட்டும் வரைப் பேசுவேன் என்று
நான்னினைத்தது தவறு என்பதே
இப்போது தான் புரிகிறது....
நான் பேசியது அவளைப் பற்றி அல்ல...
என்னுடைய வளர்ப்பைப் பற்றி என்று!!!
இனியபாரதி.
ஐஸ்க்ரீம்...
சாக்லேட்...
ஆடைகள்...
ஆபரணங்கள்....
இப்படிப் பலவற்றை
பல்வேறு காலங்களில்
நாம் இரசித்ததுண்டு....
எப்போதும் இரசிக்க வைப்பது
மழலையின் சிரிப்பு மட்டுமே!!!
இனியபாரதி.
மற்றவரின் காயத்திற்கு
நான் மருந்தாய் இருக்க நினைப்பதில் என்ன தவறு?
மருந்தும்
மருத்துவமும்
காயத்தின் இரணத்தைப் பொறுத்தது!!!
இனியபாரதி.
உலகில் எதையும் அழித்து விடுவது சுலபம்...
ஆனால் ஆக்குவது கடினம்...
யோசிப்போம்....
நான் அநேக நேரங்களில்
ஆக்குதலுக்குத் துணையாய் இருந்திருக்கிறேனா?
அழித்தலுக்குத் துணையாய் இருந்திருக்கிறேனா?
ஆக்குதலுக்குத் துணையாய் இருந்தால் நலம்...
ஒருவேளை....
அழித்தலுக்குத் துணை போவதாகத் தெரிந்தால்
அதை நிறுத்திக் கொள்வது நல்லது!!!
நமக்கு ஆக்குதலுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது...
அழித்தலுக்கு அல்ல...
இனியபாரதி.
உண்மையில் அவள் நினைப்பது
என்னவென்று எனக்குத் தெரியவில்லை ...
ஆனால்...
அவள் காட்டும் காரணங்கள்!!
எனக்குள் எழும்பும் கேள்விகள்!!
அவளின் வெறுப்பை
நான் உணரச் செய்கின்றன...
இனியபாரதி.
எதையும் கிடைக்கும் பொழுது
அனுபவிப்பதே புத்திசாலித்தனம்...
அன்பும் அப்படித் தான்...
ஒருமுறை நாம் அதை உதாசீனப்படுத்திவிட்டால்
மீண்டும்
அது நம்மை வந்தடைவது கடினம்!!!
இனியபாரதி.
எனக்குப் பிடித்த எதுவும்
உனக்குப் பிடிக்காததும்...
உனக்குப் பிடித்த எதையும்
நான் இரசிக்காததும்...
எதிர்மறையாய் இருந்தாலும்
நம் மீதான
நம் அன்பு
என்றும் நேர் மறையானது ....
இனியபாரதி.
என்ன தான்
கனி தரக்கூடிய மரமாக இருந்தாலும்
கனி இனிக்காவிட்டால்
யாரும் அந்த மரத்தை இரசிக்க மாட்டார்கள் ...
இனிய பாரதி.
பலமுறை ஆசைப்பட்டும்
அவளால்
உனக்கு அடிமையாய் இருக்க முடியவில்லை....
ஆனால்....
அவள்
என்றும் உன் அன்பிற்கு அடிமை.....
இனியபாரதி.
அவளின் பிரார்த்தனை மட்டுமே
என்னைக் காக்கும் என்பது
என்
அசைக்க முடியாத நம்பிக்கை!!!
இனியபாரதி.
அப்படியும் அன்பைப் பெறலாம் என்றால்
அது அவளுக்காகத் தான் போல...
அப்படியும் அன்பு செய்யலாம் என்றால்
அது அவனுக்குத் தான் போல...
இரண்டின் கலத்தலிலும்
ஒரு கோடி மின்னல் ஒளி!!
இனியபாரதி.
ஒவ்வொருவர் வாழ்விலும்
ஏதாவது ஒரு குறிக்கோள்
கண்டிப்பாக இருக்க வேண்டும்!!!
குறிக்கோள் அற்ற வாழ்க்கை
"கண்ணை மூடிக் கொண்டு
எல்லாம் இருட்டாய் இருக்கிறது
என்பது போலாகும்..."
கண்களைத் திறந்தால் தான்
செல்வதற்கான வழி தெரியும்...
கண்களைத் திறப்பது என்பது
குறிக்கோள்களை கொண்டிருத்தல் ஆகும் ....
இனியபாரதி.
ஒரு வேளை இப்படி இருக்குமோ???
ஒரு வேளை அப்படி இருக்குமோ???
என்ற
இந்த இரண்டு கேள்விகளைத்
தனக்குள்ளாவது
கேட்டுக் கொள்ளாதவர்கள்
யாரும் இருக்க முடியாது!!!
எது எப்படி இருந்தால் என்ன???
நான் ஒழுங்காக இருக்கிறேனா
என்பது தான் கேள்வி!!!
இனியபாரதி.
எதையும் கிடைக்கும் என்று
முழு முயற்சி செய்யும் போது
அது என்றாவது ஒருநாள்
உன்னை வந்தடையும்....
வந்தடைவது மட்டும் அல்ல
உன்னுடன் நிரந்தரமாகத் தங்கி விடும்...
இனியபாரதி.
கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும்
பயன்படுத்திக் கொள்ளாமல்
அவற்றைத் தவற விட்டு
வாய்ப்பைத்தேடி
நாம் அலைவதால்
பயன் என்ன?
இனியபாரதி.
பல எதிர்பார்ப்புகள்
பல ஆசைகள்
பல கனவுகள்
பல எண்ணங்கள்
பல ஏக்கங்கள்
நிறைந்த ஒரு ஊர்
என்றும் அழகானது....
இனியபாரதி.
பயணங்களின் இரைச்சல்
சில நேரங்களில்
மெல்லிசையாய்த் தோன்றுகின்றன...
அவள் அருகில் இருப்பதால்!!!
இனியபாரதி.
நம் தகுதியை அறிந்து
அதற்கேற்ப ஆசைப்படுவது தான்
எப்போதும் சிறந்தது....
அப்படி நம் தகுதியை மீறி
ஆசைப்படும் போது
நமக்கு மிஞ்சுவது
மனவருத்தமே....
இனியபாரதி.
எங்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாய்
நாளும் இருந்தீர்!!!
புகழைக் கண்டு தற்பெருமை கொள்ளாமல்
அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தீர்!!!
அறிவின் முதிர்ச்சியிலும்
அன்பின் வளர்ச்சியிலும்
அனைவரின் மதிப்பையும் பெற்றீர்!!!
உம் சிந்தனை பெரிது!!!
உம் கனவுகள் அதை விடப் பெரிது!!!
உம் வழிகளைப் பின்பற்றி
உம்மைப் போல் நாங்களும் வாழ
ஒளி விளக்காய் இந்த மண்ணில்
உதிர்த்து
எங்கள் வாழ்வில் ஒளி வீச
என்றும் நீர் ஒரு முன் மாதிரி!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!
இனியபாரதி.
உறவினர்கள்
நண்பர்கள்
சகோதரர்கள்
சகோதரிகள்
தெரிந்தவர்
தெரியாதவள்
நல்லவர்
கெட்டவர்
இப்படி யாருக்கு நீ என்ன செய்திருந்தாலும்.......
உன் பெற்றோரின் ஏதாவது ஒரு தேவையை
பூர்த்தி செய்து பார்!!!
உன் மனம் குளிர்வதை
நீயே உணர்வாய்!!!
இனியபாரதி.
இவ்வுலகில் மீள முடியாத
துன்பம் என்று எதுவும் இல்லை...
துன்பத்தைப் பார்த்து
துவண்டு விடாமல்
அதனுடன் இரண்டு நிமிடம் பேசி
நாமே அதைத் துரத்தி விடலாம்...
அதற்குத் தேவை
' தன்னம்பிக்கை ' மட்டுமே!!!
இனியபாரதி.
சுழன்று கொண்டிருக்கும் சக்கரம்
என்றாவது ஒருநாள்
நின்றாகத் தான் வேண்டும்....
அதற்காக
நாமே அதை நிறுத்த
முயற்சிப்பது தவறு!!!
குட்டி வாழ்க்கை...
குஷியான வாழ்க்கை...
நான் என்ன தவறு செய்தேன்?
உன்னைக் கண்டு பயப்படுவதற்கு???
என் வாழ்க்கையை வாழ
எனக்கு முழு உரிமை உண்டு....
இனியபாரதி.
இனிமை என்றெண்ணி
தன் வாழ்க்கையைத் தொலைத்தவன் தான்
மற்றவர் வாழ்வின் இனிமையைத்
தொலைக்கத் தேடுவான்!!!
இனியபாரதி.
கண்களால் பேசி
தூரத்தில் நின்று
காதல் செய்த
காலம் மாறி...
அவளின் அலைபேசிக்கு
Recharge செய்து...
அவள் தங்கைக்கு
சோப்பு போட்டால் தான்
காதலையே அனுமதிக்கிறார்கள்....
இனியபாரதி.
சில நேரம் நாம் நடந்து கொள்ளும் விதம்
நம்மை நாமே சந்தேகப்படும்படியாய்
அமையும் போது
நம் உறவுகளிடம் இருந்து
சற்று தொலைவில் இருப்பது நல்லது
அவர்கள் வார்த்தைகளே
நாம் தவறான வழியில் நடக்கத் தூண்டும்!!!
இனியபாரதி.
உயர்வான எண்ணங்கள்
மனதில் மட்டும் அல்ல
வாழ்க்கையிலும்
ஒரு நல்ல முன்னேற்றத்தைக்
காணச் செய்யும்!!!
இனியபாரதி.
கொஞ்ச நேர மருதாணி கூட
சிவந்து
நமக்கு இன்பம் தருகிறது!!!
வெகுநாளான நட்புகள்
காயப்படுத்தி
மனதைச் சிவக்க வைக்கின்றன!!!
இனியபாரதி.
எல்லாம் சில காலம் தான்!!!
மாற்றம் ஒன்றே மாறாதது!!!
சற்று பொறுமையாக அமர்ந்து
யோசிக்கும் போது
நிறைய விசயங்கள்
மனதைக் குழப்பும்!!!
சில நேரங்களில்
தெளிவான முடிவுகள் கூட எடுக்கப்படும்....
ஆனால்...
அந்தப் பொறுமை வருவதற்குத் தான்
கொஞ்ச நேரம் கூட நாம் செலவிடுவது இல்லை!!!
இனியபாரதி.
தெவிட்டாத அளவு அன்பு என்றும் நல்லது...
அளவான உப்பு உணவிற்கு நல்லது...
மிதமான சூடு உடலுக்கு நல்லது...
இனிமையான பேச்சு மனதுக்கு நல்லது...
மிதமான வேகம் வாழ்க்கைக்கு நல்லது...
இனியபாரதி.
நாளைய தினம், புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்....
அவரின் பெயரைக் கேட்டாலே எனக்கு ஞாபகம் வருவது, அவரின் இந்தச் சின்ன ஜெபம் தான்...
ஒரு சில வரிகளில் முழு வேதமே அடங்கி இருப்பது போன்ற ஒரு உணர்வு...
இதோ உங்களுக்காக!!!!
ஆண்டவரே!!! என்னை அமைதியின் கருவியாக்கியருளும்.
பகை உள்ள இடத்தில் பாசத்தையும்...
மனவேதனை உள்ள இடத்தில் மன்னிப்பையும் ...
ஐயச் சூழலில் விசுவாசத்தையும்...
அவநம்பிக்கை எழுந்த இடத்தில் நம்பிக்கையையும்...
இருள்சூழும் வேளையில் ஒளியையும்...
துயரம் நிறைந்த உள்ளத்தில் மகிழ்ச்சியையும்
வழங்கிட எனக்கு அருள் தரும்.
ஓ!!! தெய்வீகக் குருவே!!!
ஆறுதல் பெறுவதை விட ஆறுதல் அளிக்கவும்...
பிறர் என்னைப் புரிந்து கொள்ள விரும்புவதை விட, பிறரைப் புரிந்து கொள்ளவும்...
அன்பைப் பெற விரும்புவதை விட, பிறருக்கு அன்பை அளிக்கவும் எனக்கு அருள்வீராக!
ஏனெனில்...
கொடுக்கும் பொழுது மிகுதியாகப் பெறுகிறோம்...
மன்னிக்கும் போதுதான் மன்னிப்பை அடைகிறோம்...
இறக்கும் போது தான் முடிவில்லா வாழ்வுக்குப் பிறக்கிறோம்...
எனவே...
சுயநலமற்ற வாழ்வில் அமைதி அடைகிறோம்...
ஆமென்.
புனித பிரான்சிஸ் அசிசியார்.
நான் நினைப்பதெல்லாம்
எந்நேரமும் கிடைக்க வேண்டிய
அவசியம் இல்லை...
அப்படிக் கிடைத்தாலும்
அதிலொன்றும் தவறு இல்லை...
கிடைக்காமல் போனாலும்
மனம் வருந்தி பயனில்லை...
கிடைப்பதை ஏற்றுக் கொண்டு
அதில் இன்பம் காண்பதே நலம்!!
இனியபாரதி.
அதிக நேரம் வேலை செய்ய ஆசை...
அதிகமாக வேலை செய்ய ஆசை...
ஆசை மட்டும் இருந்தால் போதாது!!!
உடலில் வலு வேண்டும்!
வேலை செய்வதற்கு முன்னால்,
என்னால் இது முடியுமா என்று யோசித்திருக்க வேண்டும்!!!
இனியபாரதி.