வெள்ளி, 16 மார்ச், 2018

பன்னீர்த் துளிகள்..

ஓரமாய் நான் ஒதுங்க ஆசைப்பட்ட அந்த நொடி

என் காலடிகளில் தெறித்து விழுந்த

உன் அழகிய முத்துத் துளிகள் தான்

நான் இப்படி முத்துக் குளிக்கக் காரணமாகின!!!

உன்னால் எழுந்த மண்வாசம்

என் மன வாசத்தைத் தூண்டி எழுப்புகின்றன!!!

உன்னுடன் சேர்ந்து நடனமாடுகிறேன்!!

உன்னுடன் சேர்ந்து பாடுகிறேன்!!

உன்னுடன் சேர்ந்து ஓடுகிறேன்!!

நீ சேரும் இடத்தைப் பார்த்துக் கொண்டே
கரை ஒதுங்கி நிற்கிறேன்!!!

உன் அடுத்த வருகைக்காய்...

இனியபாரதி.


கருத்துகள் இல்லை: