ஞாயிறு, 11 மார்ச், 2018

இரசிக்கக் கூடியதாக...

 நான் விரும்பாத ஒவ்வொன்றையும்
விரும்ப ஒரு மனம் வேண்டுகிறேன்!!!
எனக்குப் பிடிக்காத காரியங்களைச்
செய்யும் ஒவ்வொருவரையும்
மன்னிக்கும் மனம் கேட்கிறேன்!!!
நான் விரும்பி எடுத்துக் கொண்ட ஒன்றை
வேறொருவர் விரும்பும் போது
அவருக்கு அதை விட்டுக் கொடுக்கும்
உள்ளம் கேட்கிறேன்!!!
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
இரசிக்கக் கூடியதாக மாற
நானே என்னை மாற்றிக் கொள்ள விழைகிறேன்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: