அனைத்தையும் சாதித்துவிட்டதாய்
நினைத்துக் கொண்டு
இறுமாப்புடன் இருக்கும்
வேளையில் தான்
நான் ஒன்றையும்
சாதிக்கவில்லை என்பதை
உணர்த்துகின்றீர்!!!
எல்லா சொந்தங்களும்
என்னுடன் இருக்கின்றன
என்று அதீத மகிழ்ச்சியடையும்
தருணத்தில் தான்
என் சொந்தங்கள்
என்னை மதிக்கவில்லை என்பதை
உணர்த்துகின்றீர்!!!
என் நண்பர்கள்
என் மீது உயிருக்குயிராய்
இருக்கின்றனர் என்று
நான் பெருமிதப்படும் போதுதான்
அவர்களுக்கு நான் ஒரு பொருட்டே இல்லை என்பதை
உணர்த்துகின்றீர்!!!
இப்படி என் பல்வேறு சூழ்நிலைகளிலும்
என் நிலையை உணர்த்தி
நான் வெறுமையை உணராதபடி
என்னை வழிநடத்தும் உம்மையே
என்றும் அன்பு செய்து வாழ வரமருளும்!!!
இனியபாரதி.
நினைத்துக் கொண்டு
இறுமாப்புடன் இருக்கும்
வேளையில் தான்
நான் ஒன்றையும்
சாதிக்கவில்லை என்பதை
உணர்த்துகின்றீர்!!!
எல்லா சொந்தங்களும்
என்னுடன் இருக்கின்றன
என்று அதீத மகிழ்ச்சியடையும்
தருணத்தில் தான்
என் சொந்தங்கள்
என்னை மதிக்கவில்லை என்பதை
உணர்த்துகின்றீர்!!!
என் நண்பர்கள்
என் மீது உயிருக்குயிராய்
இருக்கின்றனர் என்று
நான் பெருமிதப்படும் போதுதான்
அவர்களுக்கு நான் ஒரு பொருட்டே இல்லை என்பதை
உணர்த்துகின்றீர்!!!
இப்படி என் பல்வேறு சூழ்நிலைகளிலும்
என் நிலையை உணர்த்தி
நான் வெறுமையை உணராதபடி
என்னை வழிநடத்தும் உம்மையே
என்றும் அன்பு செய்து வாழ வரமருளும்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக