உலகறிய உன்னை நான்
அன்பு செய்யும்
அந்த நாளுக்காய்
காத்திருப்பேன்
அமிர்தத்தை பெற்றுக்
கொள்ள விளைவது போல்!!
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உலகறிய உன்னை நான்
அன்பு செய்யும்
அந்த நாளுக்காய்
காத்திருப்பேன்
அமிர்தத்தை பெற்றுக்
கொள்ள விளைவது போல்!!
இனியபாரதி.
நான் காலையில் எழுந்து
உம்மைப் புகழ்வதும்...
அந்த நாள் இனிய நாளாய்
அமைய என்னை
ஊக்குவிப்பதும்...
அந்த நாளின்
எல்லா செயல்களையும்
செவ்வனே செய்ய
எனக்கு ஆற்றல்
அளிப்பதும்...
உம் கிருபை தான்.
இனியபாரதி.
அன்பாய் உன்னைப்
பார்த்துக் கொள்ள...
உன் நிழல் போல்
உன்னுடன் என்றும்...
உனக்கு எல்லாமுமாய்....
எந்நேரமும் கண்ணயராது
உன்னை மட்டுமே
நினைத்துக் கொண்டு...
உன் அடிமையாய்...
உன் அருகில்
என்றும் இருக்கும்...
உன் குட்டி தேவதை....
இனியபாரதி.
இனிய இளந்தென்றல்
இனிதாய் உலா வரும்
உன்னைக் கண்டு
கண் சிமிட்டும் நேரம்....
சூரியகாந்தி பூக்கள் எல்லாம்
உன் வழி நோக்கித்
தன் தலை சாய்த்துக்
காத்திருக்கும்
உன் வருகைக்காய்....
இனியபாரதி.
என்னை வென்றுவிட்டேன்
என்று பெருமிதம்
கொள்ளாதே!!!
கடைசியில் என் அன்பிற்கு முன்
நீ தான் தோற்று நிற்கப்
போகிறாய்....
இனியபாரதி.
நீ என் மீது கொண்டிருக்கும்
அன்பை
நான் உணரும் நேரம்...
நீ என் அருகில் இல்லை
என்றாலும்
நீ என்னுடன் இருப்பதாகவே
உணரச் செய்கிறது!!!
இனியபாரதி.
என் வாழ்வில்
நான் என்ன வேண்டினாலும்
எனக்குத் தருபவர்
நீர் ஒருவரே!!!
நானே அறியாமல்
எனக்குள் இருந்த
உமது அன்பு பரிசு....
என் குரல்.
என்றும் உமக்கே சொந்தம்.
இனியபாரதி.
அன்பு இருக்கு...
ஆள் இல்லை....
பாசம் இருக்கு...
பந்தம் இல்லை....
நேசம் இருக்கு...
நண்பர்கள் இல்லை....
இனியபாரதி.
சமுதாயத்தில் தம் நிலையை
உயர்த்துவதற்குப் பதில்
வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ்
எண்ணிக்கையை உயர்த்துவதிலேயே
முனைப்பாய் உள்ளனர்
நம் நாட்டு மக்கள்....
இனியபாரதி.
தன்னையே முழுமையாய் தந்து
நாளும் பிறர் நலம் மட்டும் நாடும் அவள்
தன்னைப் பற்றியும்
தன் பிறப்பைப் பற்றியும்
ஒருபோதும் சிந்தித்ததே இல்லை...
'நதி'
இனியபாரதி.
வார்த்தைகளால் வருணித்துவிடும் அளவிற்கு
உம் அன்பு ஒன்றும்
மிகக் குறுகியது இல்லை!!!
உம் அன்பை நினைக்கும் போது
வானம் ஒன்றும் தூரம் இல்லை!!!
உம் பாசத்தின் முன்
அந்தப் பரமனே மெய்சிலிர்த்துத் தான்
போய் விடுவான்!!!
உம் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
எம் வாழ்க்கையின் பிணிகளைக்
குணமாக்கும் சிறந்த மருந்துகள்!!!
உம் உடல் வலிகளினால்
எம் உள்ளக் கனவுகளை நனவாக்கும்
உம் பரந்த மனம்
வேறுயாருக்கு வரும்
உம்மைத் தவிர!!!
உம் உள்ள வலிகள் என்னவென்று
ஒருபோதும் விசாரித்ததில்லை நானும்!!!
இன்று உணர்கிறேன்...
தாய்மையின் இருமடங்கு பாசத்தை உம்மிடத்தில் கண்டு கண் கலங்குகிறேன்!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 'அப்பா'!!!
இன்று போல் என்றும், உம் சிறுபுன்னகையுடன்
இன்பமுற்று வாழ வாழ்த்துகள்!!!
இனியபாரதி.
நான் உன் உறவு என்பதால்
பெருமை அடைந்தேனே ஒழிய
கர்வம் அல்ல.
அப்படி நான் கர்வப்பட
அவசியமும் இல்லை...
உன்னைப் பிடிக்கும் என்பதற்காக
ஏதாவது பேசுவது முறையா???
இனியபாரதி.
நான் எதிர்பார்த்த என் பரிசு
கிடைக்கும் என்று ஏங்கிய தருணங்கள்
எல்லாம் எனக்குக் கிடைத்தது
என்னவோ... ஏமாற்றம் மட்டுமே...
ஆனால்... அதன் பிறகு எனக்குக்
கிடைத்தது... நான் எதிர் பார்க்காததை விட சிறந்த பரிசு....
இனியபாரதி.
அனைத்தையும் அறிந்து கொள்ள
ஆண்டவனாலும் முடியாது...
அதனால் தான் பிடித்தவர்கள்
நம் அன்பைப் புரிந்து கொள்ளாமல்
சீக்கிரம் பிரிந்து விடுகிறார்கள் போல...
இனியபாரதி.
எனக்கு நேரும் ஒவ்வொன்றிற்கும்
அவளை மட்டுமே குறை சொல்கிறேன்...
என்னை என் வாழ்க்கையை
வாழ விடாமல் தடுக்கிறாள்...
என்னைப் பாட விடாமல்
என் குரல்வளையைப் பிடித்துக்
கொள்கிறாள்...
என்னை ஆட விடாமல்
என் கால்களை முடக்குகிறாள்...
என்னைப் பேச விடாமல்
என் வாயை மூடச் சொல்கிறாள்...
என்னைச் சிந்திக்க விடாமல்
என் எண்ணங்களைச்
சிதறச் செய்கிறாள்...
என் விருப்பம் போல்
என்னை வாழ விடாமல்
கருத்தாய் காக்கிறாள்...
அவள்
என் ' பிரம்மையானவள்....'
இனியபாரதி.