வியாழன், 16 ஜனவரி, 2020

காணும் பொங்கல்....

வருந்தி உழைத்து
பொருள் சேர்த்து
பணம் சேர்த்து
வீடு கட்டி
எல்லா வளமும் பெருக்கி

நாம் வாழ நினைப்பது

'நிம்மதி தேடியே.....'


அந்நிம்மதி

நாம்
பிறருடன் உறவாடும் போது
பிறருக்கு உதவும் போது
பிறருடன் நேரம் செலவிடும் போது
பிறருக்காய் வாழும் போது
பிறர் அன்பைப் பெறும் போது

உணர்கிறோம்.....

அதற்கு ஒரு வழிமுறை தான்
"காணும் பொங்கல்"

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

உறவுகளின் உன்னதத்தையும் அந்த உன்னதமான திருநாள் தமிழர் திருநாளான மூன்றாம் நாளான காணும் பொங்கல் நிகழ்வில் வருவதை யாரும் இவ்வளவு உன்னாதமான கவிதை வரியில் கூறியாது இல்லை...