செவ்வாய், 7 ஜனவரி, 2020

கரைசல்...

காணவில்லை என்று தேடும் போது
தென்படமாட்டாள்...

கேட்கவில்லை என்று நினைக்கும் போது
குரல் எழுப்ப மாட்டாள்...

உணர முடியவில்லை என்று இருக்கும் போது
தொடுகையால் உயிர் கொடுப்பாள்...

எல்லாம் செய்யும் அவள்
ஒரு கரைசலாய் மாறி
என் உடலோடு உயிராய் கலந்திடுவாள்.

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

கரைசல் என்ற அறிவியலை பள்ளியில் அறிவியல் பாடபுத்தகத்தில் காண்டது உண்டு ஆனால் அதன் மகத்தான செய்தியை இப்பொழுது கவிதை வரிசையில் காண்கிறேன் இரவு மடியில்