யாம் பெற்ற இன்பத்தை மற்றவர்
அனுபவிப்பதில்
நமக்குள்ள வருத்தம் தான் என்னவோ?
அடிக்கடி நாம் படும் துன்பத்தை
மற்றவர் அனுபவிப்பதில் மட்டும்
ஒரு இன்பம் நமக்கு!!!
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
யாம் பெற்ற இன்பத்தை மற்றவர்
அனுபவிப்பதில்
நமக்குள்ள வருத்தம் தான் என்னவோ?
அடிக்கடி நாம் படும் துன்பத்தை
மற்றவர் அனுபவிப்பதில் மட்டும்
ஒரு இன்பம் நமக்கு!!!
இனியபாரதி.
நீங்கள் தரும் ஒருபிடி உணவு
என் வயிற்றை நிரப்புமோ என்னவோ???
என் உறவுகள் என்னை ஒருபோதும்
விட்டுக் கொடுத்ததே இல்லை...
அன்றாடம் கிடைக்கும் உணவை
என்னுடன் பகிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன...
நீங்கள் நடும் வலையமைப்பு கோபுரங்களால்
எங்கள் வாழ்வு அழிந்து கொண்டு வருவது மட்டும் தான்
நீங்கள் எங்களுக்குக் கொடுத்தது... கொஞ்சம் உணவோடு சேர்த்து!!!
சிட்டுக்குருவி...
இனியபாரதி.
அவளின் பேச்சும் சர்க்கரை..
அவளின் மௌனமும் சர்க்கரை..
அவளின் அழுகை சர்க்கரை..
அவளின் ஆனந்தமும் சர்க்கரை..
அவளின் பிடிவாதம் சர்க்கரை..
அவளின் பிடிப்பும் சர்க்கரை..
அவளின் கோபம் சர்க்கரை..
அவளின் குணமும் சர்க்கரை..
இப்படி அவளை அணுவணுவாய் இரசிக்கும் நான் தான் அவளின் சர்க்கரைக்கட்டி...
இனியபாரதி.
நான் தெரிந்து கொண்ட பாதை
என் வாழ்வை
சரியான பாதையில் நடத்துமோ
தவறான பாதையில் நடத்து மோ
என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரம்
என் மனகண்முன் வரும்
சில நபர்களை மறக்காமல்
மறந்துவிட்டால் எல்லாம் நலமாய் அமையும்.
இனியபாரதி.
புரிந்து கொள்ள பல மாதங்கள் ஆகலாம்...
புரிந்த பின் ஒரு நொடி கூடத் தேவை இல்லை
அவள் புன்னகையின் காரணம் அறிய...
மனமும் முகமும் ஒன்றாய்ப் பொருந்திப் போன அவளையும்...
அவள் அன்பின் ஆழத்தையும் அகலத்தையும் உணராமல் போவேனோ?
இனியபாரதி.
நான் பேச நினைப்பதை எல்லாம்
நீ பேசி நான் கேட்க
நான் வரம் கேட்கிறேன்...
அப்படி ஒரு வரம் இருந்தால்
நானும் காதலித்திருப்பேன் என்று
புன்முறுவல் செய்கிறாயே இறைவா!
இனியபாரதி.
அன்பு என்னும் ஒரு வார்த்தை
பல நேங்களில் பலரின் மனங்களைக்
காயமடையச் செய்கின்றது...
அதன் காயம் ஆற பல நாட்கள் ஆனாலும்
அந்த வலி தந்த வேதனை என்றும் மறையாது...
இனியபாரதி.
அவள் குரல் ஒன்றும் கடினமானது அல்ல...
அவள் மனதைப் போன்று மென்மையானது...
இரும்பின் தன்மையதும் அல்ல...
இதழ் போல் மென்மையானது...
அவள் கெஞ்சும் குரலைக் கேட்பதற்காகவே
அவளிடம் சண்டை போடத் தோன்றும்...
இனியபாரதி.
கணிக்கப்படா நிலையில் நானும்
கணிக்க முடியா நிலையில் நீயும்...
உன் அழகு இவ்வளவு தானா?
நான் இவ்வளவு அழகா?
இனியபாரதி.
உன் பாசமும் அன்பும்
உனக்கு நிறைய சுற்றத்தை
ஏற்படுத்தித் தரும் என்று
நீ நினைப்பது தவறு...
உன் பொருளும் செல்வமும்
அழியும் வரை மட்டுமே
அவர்கள் உன்னுடன் வருவார்கள்...
நீ இருக்கும் இடம் தேடித் தேடி
அன்பும் பாசமும் வந்து குவியும்...
உன்னிடம் எதுவும் இல்லாத போது கூட
உன்னை அன்பு செய்வது
உன் பெற்றோர் மட்டுமே!!!
இனியபாரதி.
கல்வியில் கற்றுக் கொண்ட சிலவற்றை
வாழ்க்கையாகக் கொள்ளவில்லை எனினும்
தன் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட
அறத்தை கடைபிடித்து வாழ்தல் நலம்!!!
இனியபாரதி.
நம்பி வந்த யாரையும் ஏமாற்றாமல்
அள்ளிக் கொடுக்கும்
அன்பு மனம் அனைவருக்கும் அமைவதில்லை...
அப்படி ஒரு இதயத்தை அருள இறைவனை வேண்டுவோம்...
இனியபாரதி.
தரணி எல்லாம் தவம் இருந்தும்
உன் அடைக்கலத்தை மட்டும்
தேடிக் கண்டு கொண்ட யாவருக்கும்
நீரே என்றும் தஞ்சம்!!!
இனியபாரதி.
அந்த ஒலி ஒருவித விநோத எண்ணத்தை
என் மனதில் ஏற்படுத்தினாலும்
அதனால் என் உடலும் உயிரும்
ஒடுங்கி இருப்பதை
அவளின் மனம் அறிந்து தான்
என்முன் இப்படி அழகுக் கூச்சல் இடுகிறாள்!!!
இனியபாரதி.
கண்ணுக்கு விருந்தாய்
அவள் புரியுமழகு நடனம்...
ஆளை மயக்கும் நளினம்...
அசைத்துவிட்டுப் போகும்
"என் இதயக் கதவை"
இனியபாரதி.
அறிவுத் தெளிவோடு
அவள் பேசும் சில வார்த்தைகள்
என் காதுகளுக்கு எட்டினாலும்
என் மனதில் ஏறுவதே இல்லை...
காரணம்...
நான் இரசிப்பது அவளை...
அவள் வார்த்தைகளை அல்ல...
இனியபாரதி.
அவள் இடும் சத்தம்
என்னுள் சாந்தத்தைக் கொண்டு வந்து
கடைசியில் என்னை ஊமையாய் ஆக்கிவிட்டது...
இனியபாரதி.
அன்பு செய்யும் மனம்
அன்பை என்றும் எதிர்பார்க்காது...
அழகிய அன்பிற்கு அழகு ஒரு நிறையும் இல்லை ... குறையும் இல்லை...
அழகை எதிர்பார்க்காத அன்பு ஆழமாய் வேரூன்றி நிற்கும்...
ஆக அன்பு, அழகு முரண்பாட்டு நம் வாழ்வில் ஒரு முக்கியப் பங்கு ஆற்றுகின்றன...
இந்த அழகின் மனம் தான் 'அன்பு'
இனியபாரதி.
பனிவிழும் மலர்வனத்தில்
நான் கண்ட காட்சிகள்
மனதை நெருடினாலும்
அவள் விட்டுச் சென்ற வார்த்தைகள்
என் மனதை லேசாக்கி
நான் என் பணியைச் செய்ய
என் துணை நின்றாள்!!!
- தோழி
இனியபாரதி.
ஆயிரம் முறை கோபப்பட்டாலும்
அவளின் இதயத்தில் முதலிடம் பிடிக்கும் வித்தையை
எங்கிருந்து கற்றாய் என்று
நீ கேட்கும் கேள்விக்கு பதில் 'அன்பு'
இனியபாரதி.
சில நேரங்களில்
தவறானவர் என்று
நாம் நினைக்கும் சிலர்
பல நேரங்களில்
நல்லவர்களாகவே இருந்திருப்பார்கள்...
அவசரப்பட்டு சண்டையிடுவதும்
அதன் பின்
கண்ணீர் விடுவதும்
மனிதர்களின் வழக்கம் போல!!!
தன் பொருளைக் கூட விட்டுக் கொடுக்கும் பெண்...
எதற்காகவும் தன் கணவனை மட்டும் விட்டுக் கொடுப்பதில்லை...
காலம் தான் எல்லாவற்றிற்கும் மருந்து என்பார்கள்...
காலம் கடந்த பின் மருந்து வேலை செய்யாது...
எதையும் தள்ளிப் போடாமல் அப்போதே செய்து விடுவது நல்லது!!!
காத்திருப்பு காதலில் அவசியம்...
அது அந்தக் காலம்...
இந்தக் காலத்தில் காத்திருக்கிறேன் என்று நீ இருந்தால்...
நாளை அவள் / அவன் உன்னுடன் இல்லை!!!
இனியபாரதி.
அழகழகாய் உன்னைப் படைத்து
அழகே ஆச்சரியப்படும் அளவிற்கு
அமைத்த இறைவனின் அழகு தான் என்னவோ???
இனியபாரதி.
ஒருவரின் மலர்ந்த முகம்
பார்ப்பவரின் கவலைகள் அனைத்தையும் மறக்கச் செய்து விடும்...
மலர்ந்த முகம்
எல்லோருக்கும் கிடைத்து விடுவது இல்லை...
அப்படிக் கிடைப்பவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்துவது இல்லை...
கிடைத்த முகத்தை மலர் போல் வைத்துக் கொள்ளவும்...
மலர் போன்ற முகத்தால்
மற்றவர் மனத்தை மகிழ்விக்கவும் வரம் தா இறைவா!!!
இனியபாரதி.
என் உள்ளத்து விருப்பங்கள் அனைத்தையும்
என்னை ஆளும் என் அன்பு ஆண்டவா....
நிறைவேற்றி அருள்பாவிக்க வேண்டுகிறேன்....
இனியபாரதி.
கண்கட்டி வித்தையாய்
அவள் காட்டிய வித்தைகள் அனைத்தும்
என்னைத் தடுமாற வைத்தன...
எழுந்து பார்ப்பதற்க்குள்
சிறகடித்துப் பறந்து விட்டாள்...
என் ஞாபகங்களை சுமந்து கொண்டு அல்ல...
அவள் ஞாபகங்களை விட்டுவிட்டு...
இப்படியும் தொல்லை வரும் என்று
அப்போது நான் நினைக்கவில்லை....
இனியபாரதி.
என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும்... பிறந்த நாள் அன்று நேரில் சென்று வாழ்த்துவது என்பது இந்தக் காலத்தில் அரிது...
இருந்தாலும்....
அலைபேசி இல்லாமல் இந்த நாளை செலவிடலாம் என்று எண்ணி, நேற்று இரவு 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை என் அலைபேசியை அணைத்து வைத்திருந்தேன்...
இதுவரை கொண்டாடின பிறந்த நாட்களை விட... இந்த நாள் இனிமையாய் இருந்தது...
எனக்காக... என் வீட்டிற்க்கு வந்து வாழ்த்திய ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...
வர முடியாமல்... அலைபேசியின் வழியாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்த என் நட்பு இளவல்களுக்கும் நன்றிகள் பல!!!
இந்த வருடம் இனிய வருடமாய் அமைய இறைவனைப் பிரார்த்திப்போம்...
இனியபாரதி.
என் சகோதரன் தங்கம்திரு அவர்களின் அருமையான வரிகள்...
அக்காவின் பிறந்த நாள் அன்று....
உன் கவிதைக்கு கருமேகம் கூட மழை பொழிவும்.
தேனீ எவ்வளவு துன்பம் வந்தாலும்
அனைவருக்கும் இனிப்பான தேன் மட்டும் தரும்...
அது போலத் தான் உன் குணமும்...
குழந்தை போல் மனமும்....
தாய் போல் அன்பு கொண்ட அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இருள் சூழ்ந்த வானில் மின்னி கொண்டு இருக்கும் நட்சத்திரம் போல...
அதிகாலை வேளையில் புல்வெளியின் மேல் காணும் பனி நீர் போல....
மதிய வேளையில் சுட்டு எரிக்கும் சூரியனை மறைத்த மேகம் போல...
மேகம் தந்த மழை போல...
மழை தந்த மண் வாசம் போல...
மண் தந்த உணவு போல...
இது போல அன்பை அள்ளிக்கொடுத்த அன்பு உள்ளம் கொண்ட அக்காவிற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
திரு.
வழியில் எதையோ கண்டு
அதை எடுத்து
என்ன தான் நமதாக்கிக் கொண்டாலும்
அது ஒருநாள் தன் இயல்பை நம் மீது காட்டி விடும்...
அதை மனதுள் கொண்டு செல்லாமல்
அதன் இயல்பு இது தான் என்பதை உணர்ந்து
என்றும் அதை விட்டு விலகியே இருப்பது நல்லது!!!
இனியபாரதி.
இந்த ஆண்டு சிறப்பாய் ஆரம்பிக்க
எங்களுடன் உறுதுணையாய் இருந்து
எங்கள் அன்புப் பணியில்
என்னோடு இணைந்து உழைக்கும்
என் அன்பு உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!
இந்தப் புதிய ஆண்டு எல்லாருக்கும் எல்லா வளமும் நலமும் தந்து வழிநடத்துவதாக!!!
இனியபாரதி.