ஒன்றாகச் சேர்ந்து சென்ற தூரங்கள் குறைவு...
ஒன்றாகச் சேர்ந்து உண்ட நேரங்கள் குறைவு...
எல்லாம் குறைவாக இருந்தாலும்
நீ இருப்பதனால்
எல்லாம் நிறைவாக உணர்கிறேன்...
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
ஒன்றாகச் சேர்ந்து சென்ற தூரங்கள் குறைவு...
ஒன்றாகச் சேர்ந்து உண்ட நேரங்கள் குறைவு...
எல்லாம் குறைவாக இருந்தாலும்
நீ இருப்பதனால்
எல்லாம் நிறைவாக உணர்கிறேன்...
இனியபாரதி.
ஒரு கிராம் தங்கம் நீ என்றால்
கட்டித் தங்கம் நான்...
ஒரு கிலோ தக்காளி நீ என்றால்
ஒன்பது கிலோ ஆப்பிள் நான்...
ஒரு லிட்டர் மாதுளை ஜூஸ் நீ என்றால்
பத்து லிட்டர் நாட்டுச் சரக்கு நான்...
விளம்பரத்திற்காக மட்டுமே...
வேறு எந்த எண்ணமும் இல்லை ...
இனியபாரதி.
அவளுக்காக நான் கொட்டும் அன்பு
மடையில் திறந்து விடப்பட்ட
நீர் போல் பாய்கிறது...
இனியபாரதி.
உன் அழகில் மயங்கி
தடுமாறி விழுந்து
எழமுடியாமல் தவிக்கும்
என் உள்ளத்தைப்
பார்க்க வா...
என் அழகியே!
- மார்கழி மலர்
இனியபாரதி.
அவள் எதை நோக்கிப் பயணம் செய்தாலும்
என் நிழல் என்றும் அவளைத்
தொடர்ந்து கொண்டு இருக்கும்...
தொந்தரவாக அல்ல... துணையாக!!!
இனியபாரதி.
அவளின் இரும்புக் கரம்
என்னைக் கை பிடித்து
வழிநடத்தாமல் இருந்திருந்தால்
நான் என்றோ
ஒன்றும் இல்லாமல் ஆகி இருப்பேன்...
இனியபாரதி.
சாலையோரங்களில் பூக்கும்
காதலுக்குக் கிடைக்கும் மரியாதை
மனதில் பூக்கும்
காதலுக்குக் கிடைப்பதில்லை...
இனியபாரதி.
அவள் கேட்டது என் உள்ளத்தை...
நான் கொடுக்க நினைத்தது
என்னிடம் உள்ளதை...
இப்போது உணர்கிறேன்
அவள் பிரிவை விட
அவள் கேட்டதைக் கொடுத்திருந்தால்
என்னுடன் சில நாட்கள்
இருந்து சென்றிருப்பாளோ என்று!!!
இனியபாரதி.
நேரத்தைக் கேட்கும் போது
நினைவுகளைக் கொடுப்பதும்....
அன்பைக் கேட்கும் போது
அனுபவங்களைக் கொடுப்பதும்...
அறிவைக் கேட்கும் போது
அறிவுரைகளைக் கொடுப்பதும்...
அவளுக்கு மட்டுமே பொருந்தும்!!
இனிய பாரதி.
அடிக்கடி உன்னைப் பார்த்து
இரசித்த கணங்கள் உண்டு...
அடிக்கடி உன்னைப் பார்க்காமல்
சென்ற நேரங்களும் உண்டு...
அடிக்கடி உன்னைப் பற்றி
யோசித்த காலங்களும் உண்டு...
அடிக்கடி உன்னிடம் வந்து
பேசிய தருணங்கள் உண்டு...
அடிக்கடி இப்படி அப்படி
உன்னைப் பார்த்துப் பொறாமைப்படுகிறேன்
உன் அழகில்....
இனியபாரதி.
பாலையைக் கடந்து
அவன் சென்ற பயணங்கள்
நந்தவனம் போல் இருக்கும் என்று அவன் நினைத்தது தவறு தான்...
கடைசியில்
அடர்ந்த காட்டின் வழியே
அவன் பயணம் தொடர வேண்டும் என்பது
இறைவன் சித்தம் போல்...
இனியபாரதி.
கணக்குப் பார்க்கத் தெரியாத
அவளின் பிஞ்சு நெஞ்சம்
என்றும் என் மனதை விட்டு நீங்கவில்லை...
இனியபாரதி.
காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்....
உங்கள் சோர்வு...
களைப்பு...
வருத்தம்...
பயம்...
ஏக்கம்...
கவலை...
காத்திருப்பு...
எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும்!!!
இனியபாரதி.
கருவறையில் ஒரு வெளிச்சத்தை நோக்கிக் காத்திருந்தேன்...
மருத்துவமனையில் ஒரு அரவணைப்பைத் தேடிக் காத்திருந்தேன்...
வீட்டில் அன்னையின் அன்பை
எதிர்பார்த்துக் காத்திருந்தேன்...
சிறுவயதில் தந்தையின் பாசத்தை
பார்க்கக் காத்திருந்தேன்...
பள்ளியில் நண்பர்களின்
நேசத்திற்க்காய்க் காத்திருந்தேன்...
கல்லூரியில் கனா காலங்கள்
கிடைக்கக் காத்திருந்தேன்....
இளமையில் நல்ல வேலையை
எதிர்நோக்கிக் காத்திருந்தேன்...
திருமணத்தில் அழகிய மனைவி
அமைய ஆசையாய்க் காத்திருந்தேன்...
தந்தை ஆகும் தருணத்தில்
தவித்துக் காத்திருந்தேன்...
முதுமையில் என் அழகிய வாழ்க்கையை எண்ணி
உன் சரணடி சேரக் காத்திருக்கிறேன்...
இனியபாரதி.
என் தேடல் குறைய குறைய
உன் மீது எனக்கிருந்த ஆசையும்
குறையத் தொடங்குகிறது...
அதனால் தான் என்னவோ
நீ வர மறுக்கிறாய்!!!!
"தூக்கம்"
இனியபாரதி.
தேடிக் கிடைப்பதில்லை என்று
தெரிந்த ஒரு பொருளைத்
தேடிப் பார்ப்பதென்று
மெய் தேடல் தொடங்கியதே...
அழகான வரிகள்....
தண்ணீரில் மிதக்கும் காகிதக் கப்பல் போல்
அவன் காதலும் மிதந்து கொண்டிருக்கிறது....
நீரினின்று எடுத்தாலும் பயனில்லை...
நீருக்குள் விட்டாலும் மூழ்கிவிடும்....
தவிப்பது அவன் காதல் மட்டும் அல்ல...
மனமும் தான்...
கப்பல் சேதமாகாமல் பார்த்துக் கொள்வது
அவள் கையில் தான் உள்ளது!!!
இனியபாரதி.
எல்லாவற்றையும் அனுபவிக்கின்ற குழந்தைகளும் உண்டு...
எதையும் அனுபவிக்காத குழந்தைகளும் உண்டு...
பெற்றோர் உள்ள குழந்தைகளும் உண்டு...
பெற்றோர் இல்லாத குழந்தைகளும் உண்டு....
பள்ளி செல்லும் குழந்தைகளும் உண்டு...
பள்ளி செல்ல முடியாத குழந்தைகளும் உண்டு...
பத்திரமாக இருக்கும் குழந்தைகளும் உண்டு...
பாலியல் பலாத்காரம் செய்யப்படும் குழந்தைகளும் உண்டு....
இறைவா....
உன் படைப்பில் ஏன் இப்படி ஒரு அவலம்???
சமத்துவத்தைக் கொண்டுவர முடியாத
இந்தப் படைப்பில்
குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
இனியபாரதி.
எப்பருவம் மாறினாலும்
உன் மீதுள்ள
என் காதற் பருவம் மட்டும்
என்றும் மாறாது!!!
இனியபாரதி.
உன் செம்பாதத் தடங்கள்
பாதையை அழகு செய்துவிடும்
என்ற பயத்தில்
நான் செய்தது தான்
இந்தத் 'தங்கத் தேர்'
இனிய பாரதி.
அப்படி அவள் கண்ட கனவில்
நான் வரவில்லை என்றாலும்...
என் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பது அவள் முகம் மட்டுமே...
இனியபாரதி.
உன் சிவந்த மேனியை
கட்டி அணைத்து
முத்தமிட ஆசை...
நீ எப்போதும்
நான் தொட முடியா
தூரத்தில் நின்று கொண்டு
என்னைப் பிடி... பார்க்கலாம்!!!
என்று என்னுடன் விளையாடுகிறாய்!
இனியபாரதி.
ஏணிப்படியாய் நான் மாறி
உன்னை உயர்த்தாவிட்டாலும்
துரும்பாய் இருந்து
உன் கால்களை அரித்துக்கொண்டிருக்க மாட்டேன்...
இனியபாரதி.
நான்
என் அறிவையோ...
என் உடல் பலத்தையோ
செலவிட்டு ஈட்டாத
எந்த ஒரு பொருளோ பணமோ
என்னிடம் அதிக நாட்கள் நிலைப்பதற்கான வாய்ப்பில்லை.
இனியபாரதி.
அவளின் முரட்டுத்தனமும்
பிடிவாதமும்
சில நேரங்களில்
எரிச்சலைத் தூண்டினால் கூட
பல நேரங்களில்
அவளை இரசிக்கத் தான் தூண்டுகின்றன....
இனிய பாரதி.
நான் கேட்பது எல்லாம்
கிடைத்துவிட்டால்
உன்னை மறந்து விடுவேன்
என்பதால் தான் என்னவோ
எனக்கு எதையும் கொடுக்க முடியாமல்
நீயும் தவிக்கிறாய்!!!
இனியபாரதி.
இன்பங்கள்
இனிமைகள்
இஷ்டங்கள்
இனிப்புகள்
எல்லாம் நிறைந்த
அன்புத் தீபாவளி நல் வாழ்த்துக்கள்...
இனியபாரதி.
என்றும் அவள் செல்லும் வழி தான் என்னுடையது என்று நினைத்து
நானாகத் தனி வழியை உருவாக்கிக் கொள்ளவில்லை...
கடைசியில் என் பாதையை நானே தெரிவு செய்ய
தனியே விட்டுச் சென்றுவிட்டாள்....
இனியபாரதி.
காற்றில் கலந்துள்ள
சிலவற்றைப் பிரிக்க முடியாதது போல் தான்
நம் நட்பும் என்றென்றும் பிரிக்க முடியாதது....
இனியபாரதி.
என் முதலும் முடிவுமாய்
என்றும் என்னோடு இருந்து
என்னை வழிநடத்தும்
என் அன்பு இறைவா...
இந்த இனிய மாதத்திலும்
நீர் என்னோடு...
என் எல்லாமுமாய் இருந்து
என்னை வழிநடத்தும்....
இனியபாரதி.