வெள்ளி, 31 ஜனவரி, 2020

காலம் மாறலாம்....

காலம் மாறலாம்...
கனவுகள் மாறலாம்....
கண்ணீர் மாறலாம்....
கவலைகள் மாறலாம்....
இன்பம் மாறலாம்....
துன்பம் மாறலாம்....

என்றும் மாறாதது...
உம் அன்பு மட்டுமே....


இனியபாரதி.  

வியாழன், 30 ஜனவரி, 2020

கொடுக்க மறுக்கும்....

கொடுக்க மறுக்கும்
அன்பைப் பெற விரும்பாதே...

உன் அன்பு உண்மையாய் இருந்தால்
அது உன்னைத் தேடி வரும்...

இனியபாரதி. 

புதன், 29 ஜனவரி, 2020

கருப்பையில் இருந்து...

அவள் கருவறையில்
நான் இருக்கும் போது 
அன்னை என்னுடன் உரையாடியது தான் 
ஞாபகம் இருக்கின்றது...

இப்போதெல்லாம் அவள் உரையாடல்கள் அனைத்தும்
அலைபேசியில் தான்...

என்றாவது ஒரு 'Visiters Day' அன்று என்னைப் பார்க்க வர மாட்டாளா என்ற ஏக்கம் மட்டும் தான்!!!

இனியபாரதி.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

என் மெய் சிலிர்க்க...

அவள் பார்வை பட்ட இடம் எல்லாம்
என் மெய் சிலிர்க்கிறது... 

மலர்!!!




இனியபாரதி. 

திங்கள், 27 ஜனவரி, 2020

எனக்காக என்று...

அடிக்கடி வரும் அவள் நினைப்பு
என்றாவது நின்று விட்டால்
அவன் என்ன ஆவான்?

எனக்காக அவள் என்று
அவன் அன்று கண்ட கனவு
பொய்யாகி விடுமோ?

காதலின் இம்சையினால் அல்ல...
மற்றவர்களின் தூற்றுதலால்!!!


இனியபாரதி. 

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

தூரமாய் நீ இருந்தும்...

தூரமாய் நீ இருந்தும்
உன் நினைவுகள் என் அருகில்...

என்றும் நீங்காமல்
நிஜமான நிழலாக
என் மனதைத் தூண்டி எழுப்பும் தூண்டில் நீ!!!


இனியபாரதி. 

சனி, 25 ஜனவரி, 2020

துரத்தாமல்...

கண்ட நேரம் எல்லாம் கனவு வேண்டும் என்றால் என்ன செய்வது?


இனிப்பு
புளிப்பு
துவர்ப்பு
கார்ப்பு
உப்பு

இவை அனைத்தும் அதனதன் நேரத்திற்கு ஏற்ப மாறுகின்றன....

இனிப்பு மகிழ்ச்சியை மட்டும் யோசிக்காமல்
மற்ற சுவைகளையும் உணரக் கற்றுக் கொள்ள வேண்டும்!!!

அவளைத் துரத்தாமல்...


இனியபாரதி. 

வெள்ளி, 24 ஜனவரி, 2020

அறியாத மனம்...

கள்ளம்
கபடம்
என்று எல்லாம் அறிந்து வைத்துக் கொண்டு
பாடு படுத்தும் இந்த அன்பு
இல்லாமல் இருந்திருந்தால்
எவ்வளவோ நலம்!!!

இனியபாரதி.

வியாழன், 23 ஜனவரி, 2020

துணையாக வரும்...

வேண்டினாலும்
வேண்டாவிட்டாலும்

தூக்கி வைத்துப் பேசினாலும்
தூற்றினாலும்

சென்று பார்த்தாலும்
சென்று பார்க்காவிட்டாலும்

காணிக்கை கொடுத்தாலும்
காணிக்கை கொடுக்காவிட்டாலும்

அன்பு செய்தாலும்
அன்பு செய்யாவிட்டாலும்

என்னை முழுமையாக
ஏற்றுக் கொள்வது

நீர் ஒருவரே!!!

இனியபாரதி. 

புதன், 22 ஜனவரி, 2020

கரை ஓரம்...

கரை ஓரமாய் படிந்து இருக்கும்
மணலாய் நீ இருந்தாலும்...

நீந்தி வரும் படகுகள்
இளைப்பாறும் இடமாய் நீ தான் இருப்பாய்!!!!


இனியபாரதி. 

செவ்வாய், 21 ஜனவரி, 2020

கண்ணின் மணியே...

கொஞ்சிடனும்
அணைத்திடனும்
அரவணைத் திடனும்
பாசம் காட்டணும்
அன்பு செய்யணும்
அள்ளி அணைத்து முத்தமிடணும்

என் கண்மணியாய்
உன்னை வைத்துக் காக்கணும்!!!

இனியபாரதி. 

திங்கள், 20 ஜனவரி, 2020

என் உணர்வை...

என்னைப் புரிந்து கொள்ள
யாராலும் முடியாது என்ற
அந்தத் தருணம் தான்

என்னைப் புரிந்து கொண்ட
ஒரு உயிரின்
உணர்வுகளைப் புரிந்து கொண்ட நாள்!!!

இனியபாரதி. 



ஞாயிறு, 19 ஜனவரி, 2020

காக்கைச் சிறகினிலே...

காகம் தன் குஞ்சுகளை
அரவணைத்துக் காப்பது
சிலருக்கு வேடிக்கையாக இருக்கும்...

சிலருக்கு அதைப் பற்றி யோசிக்கக் கூடத் தெரியாது....

கருமை நிறத்தால்
ஒருபோதும் துவண்டதில்லை காகம்...
அதன் நோக்கம் எல்லாம்
அதன் குஞ்சுகள் காக்கப்படுவது தான்!!!

அது நிறைவேற, அதன் மனமும் குளிரும்...

இனியபாரதி. 

சனி, 18 ஜனவரி, 2020

என் அன்பு...

காவல் செய்ய 
என் அன்பு திருடன் அல்ல...

கண் இமைக்குள் வைத்துக் காக்க
என் பிள்ளையும் அல்ல...

இதயத்தில் சுமந்து கொண்டு இருக்க
என் நெருக்கமும் அல்ல...

கிடைக்கும் போது
அனுபவித்து விடும் 
உணவைப் போன்றது....


இனியபாரதி. 

வெள்ளி, 17 ஜனவரி, 2020

தனி உலகம்...

தனி உலகில் 

அவன் எழுப்பும் ஒவ்வொரு ஒலியும்
அவளுக்கு இசை தான்!!!


அவன் செய்யும் ஒவ்வொரு செயலும்
அவளுக்கு அதிசயம் தான்!!!

அவன் ஆணையிடும் எல்லாம்
அவளுக்கு வேத வாக்கு தான்!!!

அவன் ஒரு அற்புதம்!!!

அவளின் தனி உலகில்!!!

இனியபாரதி. 

வியாழன், 16 ஜனவரி, 2020

காணும் பொங்கல்....

வருந்தி உழைத்து
பொருள் சேர்த்து
பணம் சேர்த்து
வீடு கட்டி
எல்லா வளமும் பெருக்கி

நாம் வாழ நினைப்பது

'நிம்மதி தேடியே.....'


அந்நிம்மதி

நாம்
பிறருடன் உறவாடும் போது
பிறருக்கு உதவும் போது
பிறருடன் நேரம் செலவிடும் போது
பிறருக்காய் வாழும் போது
பிறர் அன்பைப் பெறும் போது

உணர்கிறோம்.....

அதற்கு ஒரு வழிமுறை தான்
"காணும் பொங்கல்"

இனியபாரதி.

புதன், 15 ஜனவரி, 2020

இனிப்புப் பொங்கல்...

நாம் நல்லவற்றை எண்ணும் போது
நம் வாழ்வும் நல்லதாக மாறிவிடும்...


நான் நல்லவர்களுடன்
உறவாடும் போது
நம் உறவுகளும் நல்லவையாக அமைகின்றன....


உறவுகளும்
எண்ணங்களும்
ஒரு சேரும் இந்த நன்நாளில் 
அனைவருக்கும்
"பொங்கல் நல்வாழ்த்துக்கள்"


இனியபாரதி. 

செவ்வாய், 14 ஜனவரி, 2020

போகிக் பொங்கல்...

பழையவற்றைக் கழிக்கும்
இந்நாளில்
நம் வாழ்வில்
இருக்கும்...

சோகம்
கஷ்டம்
துன்பம்
ஏமாற்றம்
வெறுப்பு
கோபம்
கண்ணீர்
கவலை

'மறைந்து'

இன்பம்
அன்பு
அமைதி
அருள்
மகிழ்ச்சி
பணம்
குணம்

"பெருக"

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!


இனியபாரதி. 


திங்கள், 13 ஜனவரி, 2020

அன்பு ஒன்றே....

சற்றும் எதிர்பாராமல்
நம் வாழ்வில்
நடக்கும் பல நிகழ்வுகள்
நம் அன்பின் அடையாளமாய்
என்றும் அழியாமல்!!!!


இனியபாரதி. 

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

இளைஞர் தினம்...

இன்று விவேகானந்தரின் பிறந்த நாள்...
இந்தியாவில் இளைஞர் நாளாகக் கொணடாடப்படுகிறது.

இளமைத் துடிப்புடன்
விவேகமும் கொண்டு
தன்னையும்
தன் ஆசைகளையும்
அடக்கி ஆள
கற்றுக் கொள்பவனே
உண்மையான இளைஞன்!!!


இனியபாரதி. 


சனி, 11 ஜனவரி, 2020

கவலை இல்லை...

அவளுக்கு யார் பேச்சைக் கேட்டும்
கவலை இல்லை...

அவளைப் பற்றி கவலை கொள்ளும்
ஒரு உயிரின் பேச்சு மட்டுமே 
அவளைத் திடப்படுத்தும்.

இனியபாரதி. 

வெள்ளி, 10 ஜனவரி, 2020

கலைநயம்...

அவனின் கலைநயம்
அவளுக்காக என்று
எல்லாம் சேர்த்து வைத்து
கடைசியில் கருவறையில் கொடுத்தான்
' ஒரு குழந்தையாக '

இனியபாரதி.

வியாழன், 9 ஜனவரி, 2020

அவளின்...

அவளின் கோபங்களும்
கொஞ்சல்களும்
எனக்கு சகிக்காத நாளென்று
ஒன்று இருந்தால்
அது 
நான் இவ்வுலகில் இல்லாத நாளாகத் தான் இருக்கும்....

இனியபாரதி. 

புதன், 8 ஜனவரி, 2020

பித்துப் பிடித்து...

அவன் நினைப்பு முழுவதும்
அவளாக இருக்கும் போது
அவனால் எப்படி இன்னொருத்தியை
எண்ணிப் பார்க்க முடியும்?

அவன் அவளை நினைக்காத
நாள் என்ற ஒன்று
அவன் இறப்பிற்குப் பின் தான்!!!

அவன் எதைத் தேடினாலும் சரி...
அவளைத் தேடாத பொழுதில்லை...

அவள் வரும் வரை காத்திருப்பு
அவனுக்கு ஒன்றும் புதிதில்லை...

இனியபாரதி. 


செவ்வாய், 7 ஜனவரி, 2020

கரைசல்...

காணவில்லை என்று தேடும் போது
தென்படமாட்டாள்...

கேட்கவில்லை என்று நினைக்கும் போது
குரல் எழுப்ப மாட்டாள்...

உணர முடியவில்லை என்று இருக்கும் போது
தொடுகையால் உயிர் கொடுப்பாள்...

எல்லாம் செய்யும் அவள்
ஒரு கரைசலாய் மாறி
என் உடலோடு உயிராய் கலந்திடுவாள்.

இனியபாரதி.

திங்கள், 6 ஜனவரி, 2020

அந்த ஒரு நிமிடம்...

இதுவரை உணராத ஒரு பதற்றம் இன்று...
ஏன் வந்தது?

எதுவும் நிரந்தரம் இல்லா இவ்வுலகில்
ஏதாவது ஒன்றை இழந்து விடுவோம் என்று
வரும் அந்த ஒரு நிமிடம்...

கண்மூடித்தனமாக சிலர் எடுக்கும்
தவறான முடிவுகள்
பலரின் வாழ்வில் பற்பல
திருப்பங்களை ஏற்படுத்தி விடும்...


இழக்கக் கூடாது என்று நினைப்பது
அவ்வுயிரை அல்ல...
அதன் அன்பை!!!


இனியபாரதி.

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

தேடாத வரம் வேண்டும்...

அவளுக்குத் தெரியும்
அவன் அவளைத் தேடாத நாள் இல்லை என்று...
இருந்தும் அவன் குரல் கேட்காதது போல்
அவள் நடிப்பது தான் அவளுக்குப் புரியவில்லை...
அவளை விடாமல் துரத்தும் அவனுக்கு
மிஞ்சுவது என்னவோ கண்ணீர் மட்டும் தான்...
அவள் வருவாள் என்று தேடிக் கொண்டு இருக்கிறான்...
அவனின் முழுக் காதலை சுமந்து கொண்டு...

ஒரு நாள்... இருநாள் அல்ல...

அவன் மூச்சு நிற்கும் வரை!!!

இனியபாரதி.


சனி, 4 ஜனவரி, 2020

ஏற்றுக் கொண்ட...

என்னை ஏற்றுக் கொண்ட அவள்...
என் செயல்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்...

அவளின் இந்த மெளனம்...
ஆறாத காயமாய்...
நெஞ்சை அரித்துக் கொண்டே இருக்கின்றது.. 

இனியபாரதி.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

தனியாய் இருந்து...

அவள் மட்டும் இருந்து செய்ய வேண்டிய
காரியத்தைக் கூட
அவன் அருகில் இருந்தால் தான்
செய்ய நினைக்கிறாள்....

தான் மட்டும் இரசித்தால் போதாது சென்று
அவனையும் இரசிக்கச் சொல்கிறாள்.

இனியபாரதி.


வியாழன், 2 ஜனவரி, 2020

அன்பே சிறந்தது...

அன்பு என்ற ஒற்றைச் சொல்
எல்லாப் பிறப்புகளுக்கும்
உயிர் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. 

அந்த ஒற்றைச் சொல் தான்
ஆணிவேரும்
அடித்தளமுமாய் இருக்கின்றது..

அன்பு செய்!!

உன்னை நீயே அன்பு செய்!!

இனியபாரதி. 

புதன், 1 ஜனவரி, 2020

காந்தக் கண்கள்...

பார்வை ஒன்றே ஆயிரம் பேசும்...
வார்த்தைகள் தேவை இல்லை...
உன் அழகை இரசிக்க...
அனு தினமும் உன்னைப் பார்த்து வியக்கிறேன்.

இனியபாரதி. 

ஒருமுறை என்னைப் பார்த்து...

அவள் பார்க்காமல் இருக்கும்
இந்த நேரமும்
என்னைப் பார்ப்பதாகவே
எண்ணி சிரித்துக் கொண்டு
வெட்கத்தில் தலை சாய்கிறேன்...

அவள் பார்த்துவிட்டால்
இன்னும்
என்னென்ன நடக்கும்
என் மனதில்???

என் எல்லா மாற்றங்களுக்கும் காரணமானவள்!!!!!

என் செல்லம்மா!

இனியபாரதி. 

தெளிந்து கொண்டு...

யாரையும் நம்பி பயன் இல்லை என்பதை மட்டும்
என்றும் மனதில் நிறுத்தி
அறிவுத் தெளிவோடு செயல்படும் போது
வெற்றித் தென்றல் உன் பக்கமும் வீசும்!!!!

இனியபாரதி.