ஞாயிறு, 5 நவம்பர், 2017

அவளின் நாணம்...

பார்க்க ஆரம்பித்த நாள்களில் அவளின் நாணம் என்னவோ
என்னை நோக்கி இல்லை!
சில நாட்களில் என் கண்களின் வழியாக அதைப்
பெற்றுக் கொண்டாள் அவள்!
அவளின் நாணல் என்னுள் ஏற்படுத்திய சலனம் தான்
என்னுள் காதலாய் மாறி
அவளைத் தவிர வேறு யாரையும் என்னவளாக
எண்ணிப்பார்க்க முடியாத நிலையை
என்னுள் ஏற்படுத்தியது!
அவளிடம் நான் சொன்ன காதல் தான்
இன்று என்னை அவளுடன் சேர்த்து வைத்துள்ளது!
இப்போது என்னால் அவளுக்கு ஏற்படும் நாணம்
அவளின் பெண்மையை நான் உணரச் செய்கிறது!
அவளின் நாணம் 'என்றும் அழகே!'

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: