புதன், 1 நவம்பர், 2017

கண்ணாடி இரகசியம்....

யாருக்கும் தெரியாமல் என்னை நானே இரசிப்பது
உன் முன்னால் மட்டுமே!
நான் அழுவதும் உனக்குத் தெரியும்!
சிரிப்பதும் தெரியும்!
போலியாகச் சிரிப்பது கூடத் தெரியும்!
என் தாயிடம் சொல்லாத சிலபல
இரகசியங்களை நீ அறிவாய்!
என் வாழ்வில்
உன்னைக் காணாமல் இருந்த நாட்களை
விரல் விட்டு எண்ணிவிடலாம்!
என் தொடக்கமும் முடிவும் நீயாகவே இருந்திருக்கின்றாய்
பல நேரங்களில்...
என் தோழியாய் என்னுடன் தோள்சாய்ந்து
என் கண்ணீரைக் கேட்டிருக்கிறாய்!
என் இரகசியம் அறிந்த என் அன்புத் தோழியே!
என்றும் என் வாழ்வின் இனிமையே!

இனியபாரதி..

கருத்துகள் இல்லை: