திங்கள், 13 நவம்பர், 2017

குழந்தைகளை மகிழ்விக்கும் தினம்....

நான் பள்ளியில் படிக்கும் போதெல்லாம், எங்கள் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டதாக ஞாபகமே இல்லை. இப்போதெல்லாம், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, குழந்தைகள் தினத்தை மறப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஏனென்றால், குழந்தைகளை மகிழ்விக்க, ஆசிரியர்கள் நடனமாடுவது, பாடல் பாடுவது, நடிப்பது போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ஆசிரியர்களால் பள்ளிகளில் நடந்தேறுகின்றன. தனக்குப் பிடித்த ஆசிரியர் நடனமாடும் போதோ, பாடும் போதோ அதை இரசிக்கும் குழந்தை, தன் ஆயுளுக்கும் அத்தினத்தை மறப்பதில்லை.
இப்படித் தான் இந்தக் கால குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தினம் கொண்டாடுவதன் நோக்கம் தான் என்ன?
குழந்தைகள் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு, அவர்களுக்கு அன்பு, பணிவு, கடமை, கண்ணியம் போன்ற மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுப்பதற்காகத் தான், இந்த நாள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஆனால், நடைமுறையில் அப்படி ஒன்றும் நடப்பதில்லை என்றே கூறலாம்.
அதனால், இந்தக் குழந்தைகள் தினத்திலாவது, குழந்தைகளுக்குச் சில பயனுள்ள விசயங்களைக் கற்றுக் கொடுத்து, அவர்களை எதிர்காலத்தின் நல்ல தலைவர்களாக மாற்ற, நம்மால் இயன்ற முயற்சிகளை எடுப்போம்.

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளுடன்,
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: