எப்போதும் அன்பைப் பொழிந்து கொண்டே இருப்பேனென்று
சந்தேகமில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தவனை
சந்தேகப்பட வைத்ததும் அவள் தான்!
எனக்கு நீ மட்டும் தான் வேறு எந்த உறவும் இல்லையென்று
சொல்லிக் கொண்டிருந்தவனை
உன் உறவே வேண்டாமென்று சொல்ல வைத்தவளும்
நீ தான்!
உன்னிடம் பேசிக் கொண்டிருந்தாலே போதும் என்றிருந்தவனை
உன் பேச்சை இனி கேட்கவே கூடாது என்று முடிவெடுக்க
வைத்தவளும் நீ தான்!
உன் அழைப்புகளுக்காய் காத்திருந்தவனை
உன்னை அழைக்கவே கூடாது என்று நினைக்க
வைத்தவளும் நீ தான்!
எல்லாவற்றிற்கும் காரணமாய் 'நீ' தான்!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக