கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
வியாழன், 30 நவம்பர், 2017
புதன், 29 நவம்பர், 2017
செவ்வாய், 28 நவம்பர், 2017
சில கிறுக்கல்கள்....
கருணையின் வடிவு...
கருணை உன் வடிவல்லவா என்று இறைவனை மட்டுமே
நாம் பாடுவதுண்டு!
கருணையின் வடிவம் அவன் மட்டுமல்ல
அவன் உருவில் உள்ள நாம் அனைவரும் தான்!
காவி...
கவிஞனுக்குப் பாட வரும்...
காவி உடை அணிந்தவனுக்கும் ஆசை வரும்...
விரலழகு...
உன் விரலழகை இரசித்துக்கொண்டே இருக்கத் தான்
உன் கைகோர்த்து நடக்க நாளும் ஆசைப்படுகிறேன்...
இனியபாரதி.
திங்கள், 27 நவம்பர், 2017
ஞாயிறு, 26 நவம்பர், 2017
காதலனின் முகம்...
அன்றாடம் பார்க்கும் முகம் என்றாலும்
அலுத்துப்போகாத ஒரு முகம் உன்னுடையது!
அதற்குக் காரணம் காண இயலவில்லையெனினும்
முயன்று கொண்டேயிருக்கிறேன்!
என் அன்பனின் முகம் என்று உன் முகத்தைத் தவிர
வேறு யாரைப் பற்றிக் கூறுவது?
உலகில் யாரைப் பார்க்கவும் நமக்கு உரிமை
இருக்கிறதென்றாலும்
காணக்கூடாதென்று என்னைக் கடிவாளத்திற்குள்
அடைத்து வைக்கும் சக்தி
உன் முகத்திற்கு மட்டுமே என்று தான் நினைக்கிறேன்!
நிலவிற்கு ஒப்பிட்டுப் பெண் முகத்தைக் கூறினாலும்
உன் முகத்தையும் நான் நிலவுடனே ஒப்பிடுவேன்!
ஏனெனில் உன்னில் என் தாயைப் பார்க்கிறேன்!
இனியபாரதி.
சனி, 25 நவம்பர், 2017
எங்கே எப்படி இருப்பினும்!
யாராக நீ இருந்தாலும்
எங்கே யாருடன் இருந்தாலும்
எப்படி இருந்தாலும்
எந்த அறையில் இருந்தாலும்
எத்தனை கண்டம் தாண்டி இருந்தாலும்
எத்தனை முகங்களுக்குத் தெரிந்திருந்தாலும்
நான் இல்லையென்றால் நீ ஒன்றும் இல்லை!
உயிர்!!!
இனியபாரதி.
வெள்ளி, 24 நவம்பர், 2017
படித்ததில் பிடித்தது...
*கேவலமான ஒப்பீடு கள் ... ஆனால் விசித்தி ரமான உண்மைகள்* !
1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40
லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!
2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின்
விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!
3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5
சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12
சதவிகிதம்..!!
4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு
வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும்,
தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!
5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில்
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட
கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும்
காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc
இவையெல்லாம் செயற்கையான
ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி
ன்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை
இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்)
தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!
8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும்
நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம்
விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று
கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து
வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9. கோதுமைக்கு வரி என்பது இல்லை. ஏனெனில் கோதுமை விளை பொருள் என்பதால். கோதுமையை
மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே
மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து
விற்றால் வரி உண்டு..!!
10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!
11. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு எஸ்கலேட்டரா கவும், சிலருக்கு லிஃப்ட்டா கவும் அமைகிறது..
12. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!
13. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை வாரி மடி சாய்க்க ஒருவர் இருந் தால் போதும், நமது வாழ்க் கையை ஜெயித்துவிடலாம்.
14. முதியோர் இல்லத் திற்கு பணம் கொடுங்கள்,
பொருள் கொடுங்கள்,
உணவு கொடுங்கள், உடை கொடுங்கள் ..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..
15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..
16. டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம் வைத்து இருக்கும் விசித்திரமான மாய உலகம் இது.!
17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!
18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.
19. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...
20 .கடவுளாக ஒரு மூலை யில் அமர்ந்திருப்பதற்கு கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக உட்கார்ந்து வாழத்தான் அதிக விவேகம் வேண்டியிருக்கிறது.!
21. மழையை நிறுத்த தமிழர் கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள். ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..
21. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..
22. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலை ஓரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.
23. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க
சரிதான்..
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?
*நண்பர்களே ... ! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை பிறருக்கு பகிர்ந்து கொள்வதில் தயக்கம் வேண்டாம்*.
வியாழன், 23 நவம்பர், 2017
யாரை நம்பி!
நான் யாரையும் நம்பி வாழத்தேவையில்லை
என்றிருக்கிறவர்கள்
சந்தர்ப்பம் வரும்போது யாரை நம்பலாம் என்று
குழம்பித்தவிக்கிறார்கள்!
என்னை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறதென்று
நினைக்கும் போது
நாம் அவர்களுக்குத் தேவைப்படுவதேயில்லை!
அவர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில்
நாமும் இருப்பதில்லை!
இப்படி யாரை நம்பி வாழ்வது என்ற குழப்பத்திலேயே
வாழ்க்கை முடிந்து விடும் போலும்!
இனியபாரதி.
புதன், 22 நவம்பர், 2017
கருத்து...
கருத்தைக் கூறுவதில் உள்ள உன் ஆர்வம்
அதைச் செயல்படுத்துவதிலும் இருந்தால் நலமாய் இருக்கும்...
கடமைக்காய் நீ கூறிய ஒரு வரி கூட மற்றவரில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்....
இனியபாரதி...
செவ்வாய், 21 நவம்பர், 2017
ஒருமுறை மட்டும்...
வாழ்க்கை ஒருமுறை மட்டும்...
வாழ்ந்து தான் பார்ப்போமே என்று சொல்கிறோம்....
வாழ்க்கையைத் தவிர மற்ற அனைத்தையும்
இரண்டாம் முறை கூட பெற்றுவிடலாம்!
ஆனால், பெறக்கூடிய ஒன்றிற்காகத் தான்
அனுதினமும் உழைக்கிறோமே தவிர
பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டிய
வாழ்க்கையை வாழ மறந்து விடுகிறோம்!
இனியபாரதி.
திங்கள், 20 நவம்பர், 2017
அன்பின் ஆழம்..
ஓர் சிற்றூரில், ஒரு தாயும் அவள் மகளும் வசித்துவந்தனர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த அந்தக் குழந்தையை, எப்படியாவது நன்றாக வளர்த்து கரைசேர்க்க வேண்டுமென அந்தத் தாய் நினைத்தாள். அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும் போதிலிருந்தே, உலக நடப்புகளைப் பற்றி, வீட்டில் நடப்பவற்றைப் பற்றி, செய்திகளில் வாசிப்பதைப் பற்றி... என்று பல்வேறு கருத்துகளை அவளுக்குக் கூறிக்கொண்டே இருப்பாள்.
அவளுக்கு வயது இரண்டான போது, ஓரளவு தன்னைச் சுற்றி நடப்பவற்றைப் புரிந்துகொண்டாள். அவளுக்கு இருந்த திறமையே, அவளின் கவனிப்புத் திறன் தான்... எதைப் பார்த்தாலும், அதைப் போலச் செய்து விடுவாள். தொலைக்காட்சியில் கண்பவற்றைப் போல நடித்துப் பார்ப்பாள்.
இப்படி அவளுக்குள்ளிருந்த பல்வேறு திறமைகளை, அவள் தாய் நோட்டமிட்டுக் கொண்டே இருந்தாள். அவளை இரண்டரை வயதிலேயே ஓவியப்பயிற்சிப்பள்ளியில் சேர்த்துவிட்டாள். கூடுதலாக அவளுக்கு நடனத்திலும் ஆர்வம் இருந்ததால், அதையும் அவளுக்கு முழுமையாக வழங்க அவள் தாய் தயங்கவில்லை.
தான் எவ்வளவு துன்பங்கள் அனுபவித்தாலும், தன் மகள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளை வகிக்க வேண்டுமென்று அயராது பாடுபட்டாள், அத்தாய்.
அதற்கு பலனும் கிடைத்தது.
அந்தக் குழந்தை படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டு, ஆடல், பாடல், நடிப்பு என அனைத்திலும் முன்னிலை வகித்தாள்.
இப்படி ஒரு உயர்ந்த இடம் கிடைக்கக் காரணம் தன் தாய் தான் என்றாலும், அவள் மனம் அதை வெகுவிரைவாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அதை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை, அவள் தாய்.
நாட்கள் உருண்டோடின...
அவளுக்குத் திருமணமும் அவள் விருப்பப்படியே நடந்தது.
நல்ல மனையாளனைப் பெற்றாள்.
அவளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு தான் கற்றறிந்தது போலவே, அனைத்தையும் திணித்துவிட நினைத்தாள். ஆனால், அக்குழந்தையின் ஆர்வம் எல்லாம் இசையைக் கற்பதில் மட்டும் தான் இருந்தது. அதனால், அக்குழந்தையை அடிப்பது, திட்டுவது என ஆரம்பித்தாள்.
குழந்தை மிகவும் வேதனையுற்றது. தன் தாயை வெறுக்கும் அளவிற்கு இருந்தது அவளின் நடவடிக்கைகள்...
அப்போது தான் அவளின் கண்களில் நீர் வடிந்தன...
'தன் தாய், அவள் விருப்பத்திற்காகத் தன் மொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்ததை நினைத்து அவளைத் தன் உள்ளத்தில் போற்றினாள். அவளின் அருமையை உணர்ந்தாள்.'
அவளின் அன்பின் ஆழத்தை அளக்க ஆழ்கடல் சென்றாலும் முடியாது.
அன்னையைப் போற்றுவோம். அவளை மதித்து வாழ்வோம்.
இனியபாரதி.
ஞாயிறு, 19 நவம்பர், 2017
தீராத உறவின் அன்பு....
வெகுநாட்களாகப் பார்க்காமல் இருந்திருக்கலாம்...
அலைபேசியில் உரையாடல்கள் கேட்காமல் இருந்திருக்கலாம்...
அடிக்கடி சண்டைகள் போடாமல் இருந்திருக்கலாம்..
நலம் விசாரிக்காமல் இருந்திருக்கலாம்...
அவரைப் பற்றி நினைக்காமல் இருந்திருக்கலாம்...
அவரின் பிறந்தநாளில் வாழ்த்து கூறாமல் இருந்திருக்கலாம்....
ஆனால்,
என்றாவது ஒருநாள் சந்திக்கும் போது
மேற்சொன்ன எல்லாம் நடந்தது போல்
பழகும் ஒரே ஒரு உறவு 'நட்பு'
இனியபாரதி.
படித்ததில் பிடித்தது...
பூமியில் விழுந்த விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து
முளைத்துக் காட்டுகிறது !
ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது !
பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன !
மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன !
ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !
சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !
தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன !
ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !
இப்படி பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
உன்னால்
வாழ முடியாதோ ? ! ?
எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய
வாழ்க்கை . . .
அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய்
வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுதுகொண்டு
வாழ்கின்றாய் !
சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !
எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !
என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !
எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !
எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !
என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !
என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !
என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !
மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !
என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !
ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !
பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !
ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய
என் இறைவனுக்கு மனதார நன்றி !
இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் !
இந்த வாழ்நாள் போதாது !
படித்ததில் பிடித்தது...
வெள்ளி, 17 நவம்பர், 2017
வியாழன், 16 நவம்பர், 2017
புதன், 15 நவம்பர், 2017
தன்னலம் அறியா...
அன்னை மட்டுமே தன்னலம் துறந்து
தன் குழந்தையின் நலனுக்காய் இருப்பாள்!
அவளுக்கு அடுத்து தந்தை என்று கூறலாம்!
இவ்விருவருக்கும் அடுத்து
நண்பர்களைத் தான் கூற வேண்டும்!
தன்னுடன் உயிருக்குயிராகப் பழகிய
எந்த நண்பனையும் எதற்காகவும்
சுலபமாக விட்டுக் கொடுக்காதது
நட்பு மட்டுமே!
உயிரைவிட மேலாகவும் சிலநேரங்களில்
நினைக்கத் தோன்றுவதும் நட்பே!
நல்ல நட்பு நமக்குக் கிடைப்பது
இறைவன் நம் நண்பனாய் இருப்பது போல!
இனியபாரதி.
செவ்வாய், 14 நவம்பர், 2017
மறக்க முடியா குழந்தைகள் தினம்...
குழந்தைகள் தினத்தன்று, குழந்தைகளுக்கு சில நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று நேற்றைய வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இன்று தான், அதற்குப் பின் ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டோமென்று உணர்ந்தேன்.
குழந்தைகளுக்கு ஒருசில நல்ல நெறிகளைச் சொல்லித் தருவதற்கு முன், நாம் அவற்றைக் கடைபிடிக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
நேற்றைய தினம் 'கண்ணியம்' என்ற ஒரு மதிப்பீட்டைக் குறிப்பிட்டிருந்தேன். தான் செய்யும் வேலைகளில், பணியிடங்களில் நேர்மையாக இருத்தலைக் குறிக்கின்றது.
இன்று மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். எப்போதும் helmet அணிந்து வரும் நான், இன்று ஏதோ ஒரு ஞாபகத்தில், helmet இல்லாமல் என் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். இடையில் வாட்டசாட்டமான இரு காவலர்கள் என்னை வழிமறித்து, helmet இல்லாமல் வந்ததற்காக 100 ரூபாய் அபராதம் கொடுக்கச் சொன்னார்கள். நான் வழக்கம் போல், பணம் எதுவும் என்னிடம் எப்போதும் வைத்துக் கொள்வதில்லை. என்னிடம் பணம் இல்லை என்பதை அவரிடம் கூறினேன். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. கடைசியில், என்னைப் பற்றி எல்லாம் விசாரித்துவிட்டு, பக்கத்தில் இருந்தவர்களிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அங்கு, அவர்கள் முன்பு எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தேன்.
அப்போது, அந்த வழியாக, ஒரு வெள்ளை வேட்டி ஆசாமி, தன் இருசக்கர வாகனத்தில் helmet அணியாமல் வந்து, அந்தக் காவலர் முன்பு தன் வண்டியை நிறுத்தி, 'என்ன சார்? நானும் helmet அணிந்திருக்க வேண்டுமா?' என்றார். அதற்கு அந்தக் காவலர், 'நீங்க போங்க சார்' என்றுத் தன் கண்களால் ஜாடை காட்டுகிறார். அவரும் தன் வண்டியில் பயணமாகிறார்.
நானும், என்னைப் போல் இரண்டு அப்பாவிக் கல்லூரி மாணவர்களும் அவர்களிடம் மாட்டிக் கொண்டு, விழித்துக் கொண்டு இருந்தோம். கடைசியில் என்னிடம் 'ஐநூறு ரூபாய் வாங்கணும். நீ ஒரு ஐம்பது ரூபாய் மட்டும் குடுத்துட்டுப்போமா!' என்றார்.
என்னிடம் உண்மையிலேயே பணம் இல்லை... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கொஞ்சினேன். ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு என்னைக் கிளம்பச் சொன்னார். அதுவும் சில நிபந்தனைகளுடன்...
இனி எங்காவது உன்னை helmet இல்லாமல் பார்த்தால், இதற்கும் சேர்த்து அன்று நீ பணம் கட்ட வேண்டுமென்றார்... சரி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றேன்....
நான் helmet அணியாமல் வந்தது என் தவறு தான் என்றாலும், அவர் செய்ததும் தவறாகவே எனக்குத் தோன்றுகிறது. அவருக்கு வேண்டியவரென்றால் தவறு செய்து கொள்ளலாம். தெரியாதவர்கள் தவற்றிற்கு இலஞ்சம் கொடுக்க வேண்டுமா?
படித்த, பெரிய பதவிகளில் இருப்பவர்களே இப்படிச் செய்யும் போது, நம் குழந்தைகள் நல்லவர்களாக இருக்க வேண்டுமென்று, நாம் எதிர்பார்ப்பது, நமக்கே அடுக்குமா????
இது போன்ற நேரங்களில் அவர்களைத் தட்டிக் கேட்க வேண்டுமென்று தோன்றினாலும், அவர்களின் பதவி மற்றும் நமது இயலாமை, நம்மை ஒன்றும் செய்ய விடாமல் தடுத்துவிடுகிறது.
தவறுகளைத் தட்டிக் கேட்கும் உள்ளங்களும்...
தவறு செய்யத் தயங்கும் உள்ளங்களும் கிடைக்கும் வரை
நம் தேசம் 'இலஞ்சங்களின் நாடு தான்'
இலட்சியங்களின் நாடாக எப்பாேது மாறுமாே?
இனியபாரதி.
திங்கள், 13 நவம்பர், 2017
குழந்தைகளை மகிழ்விக்கும் தினம்....
நான் பள்ளியில் படிக்கும் போதெல்லாம், எங்கள் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டதாக ஞாபகமே இல்லை. இப்போதெல்லாம், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, குழந்தைகள் தினத்தை மறப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஏனென்றால், குழந்தைகளை மகிழ்விக்க, ஆசிரியர்கள் நடனமாடுவது, பாடல் பாடுவது, நடிப்பது போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ஆசிரியர்களால் பள்ளிகளில் நடந்தேறுகின்றன. தனக்குப் பிடித்த ஆசிரியர் நடனமாடும் போதோ, பாடும் போதோ அதை இரசிக்கும் குழந்தை, தன் ஆயுளுக்கும் அத்தினத்தை மறப்பதில்லை.
இப்படித் தான் இந்தக் கால குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தினம் கொண்டாடுவதன் நோக்கம் தான் என்ன?
குழந்தைகள் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு, அவர்களுக்கு அன்பு, பணிவு, கடமை, கண்ணியம் போன்ற மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுப்பதற்காகத் தான், இந்த நாள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஆனால், நடைமுறையில் அப்படி ஒன்றும் நடப்பதில்லை என்றே கூறலாம்.
அதனால், இந்தக் குழந்தைகள் தினத்திலாவது, குழந்தைகளுக்குச் சில பயனுள்ள விசயங்களைக் கற்றுக் கொடுத்து, அவர்களை எதிர்காலத்தின் நல்ல தலைவர்களாக மாற்ற, நம்மால் இயன்ற முயற்சிகளை எடுப்போம்.
இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளுடன்,
இனியபாரதி.
ஞாயிறு, 12 நவம்பர், 2017
சனி, 11 நவம்பர், 2017
வெள்ளி, 10 நவம்பர், 2017
அடங்க மறுக்கும் ஆசைகள்!
காலைக் கதிரவனுக்கு முன்
சீக்கிரம் எழ ஆசை!
நடுச்ஜாமத்தில் தனியாகத் தெருவில்
நடக்க ஆசை!
ஆண்களை விஞ்சும் அளவுக்குப்
பலம் கிடைக்க ஆசை!
இயற்கை எழில் கொஞ்சும்
புத்துலகைக் காண ஆசை!
கடற்கன்னியுடன் ஒரு நாள்
செலவிட ஆசை!
விண்மீன்களுக்கு இடையில் நின்று
புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசை!
இவற்றையெல்லாம் எழுதும் எனக்கு
இன்னும் கற்பனைத் திறன் வளர ஆசை!
இனியபாரதி.
வியாழன், 9 நவம்பர், 2017
குட்டி கவிதை...
குடும்பம் என்ற நரகத்தில்
வேதனைப்படுவதை விட
தனிமை என்ற சொர்கத்தில்
என்றும் மகிழ்ச்சியாய் வாழலாம்.....
இனியபாரதி.
புதன், 8 நவம்பர், 2017
திகைத்து நிற்கும் கண்ணீர்த் திவளைகள்...
நம் பிறந்த நாளை மற்றவர் ஞாபகம் வைத்து
இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அந்த சில நிமிடங்கள்...
நாம் வெகுநாட்களாகத் தந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தது
திடீரென நம் அறையில் இருப்பதைப் பார்க்கும் அந்த நிமிடம்...
சகோதரனே இல்லையென்று புலம்பிக் கொண்டிருக்கும் போது
எங்கிருந்தோ வரும் சகோதர உறவு....
சரியாகப் பார்க்காமலும் பேசாமலும் இருந்து தன் அன்பை
மற்றவர்க்கு வெளிப்படுத்தும் உறவுகள்...
இந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமென்று வெகுநாட்கள் நினைத்தும்
காணமுடியாமல் முதிர்வயதில் அந்த இடத்தில் நம் துணையுடன்
நின்று பேசிக் கொண்டிருக்கும் போது....
நம் தேவைகளை இறைவனிடம் கொட்டிவிட்டு 'அவன் பார்த்துக் கொள்வான்' என்று
நிம்மதிப்பெருமூச்சு விடும் சமயத்தில் நமக்குக் கிடைக்கும்
அந்த உதவி...
இனியபாரதி.