செவ்வாய், 3 அக்டோபர், 2017

அன்பின் உருவாய்...

அன்பைத் தேடி அலைந்த நாட்களை
உன்னுடன் செலவிட்டிருந்தால்
நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை
அன்றே உணர்ந்திருப்பேன்!
உன்னைக் கண்டுகொள்ளாமல்
நானிருந்த நாட்களிலும்
என்னைக் கண்டுகொள்ளாமல்
நீ இல்லை!
உன்னைக் கேள்வி கேட்கத் துணிந்த என்னை
ஒருநாளும் கேள்வி கேட்டதேயில்லை!
வார்த்தைகளால் உன் மனதைக் காயப்படுத்திய எனக்கு
என்றும் என் காயங்களின் மருந்தாய் மட்டுமே இருந்திருக்கிறாய்!
இனி உன் அன்பை விட்டுத் தூரச் செல்ல மாட்டேன் 'அம்மா'!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: