'உனக்கெல்லாம் எதற்கு காதல்?'
என்று அவள் என்னைப் பார்த்துக் கேட்பதற்குள்
நானாக விலகிக் கொண்டேன்!!!
அவள் விரும்புவது என்னவோ
அழகான ஆடையணிந்த ஆடவனை...
அள்ளிக் கொடுக்கும் கைகளை...
அவளை என்னவென்று கேட்காத உதடுகளை...
அவள் தடங்களைப் பின்பற்றும் கால்களை...
கேள்வி கேட்காதவனை...
அவள் விரும்பும் அனைத்தையும் கொடுக்கும்
பல காதலர்கள் அவள் பின்னால் இருப்பதால்...
என் மனமும் அவளுக்கு விளங்கவில்லை...
என் ஏக்கங்களையும் அவள் உணரவில்லை...
இன்னும் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன் 'ஏழ்மையினால்'
என் ஏழ்மை என்றும் மாறலாம்...
ஆனால்,
அன்பை உணர முடியாத
அன்பை பகிர முடியாத
உன் ஏழ்மை என்று உனக்கு விளங்கப் போகிறதோ?
கண்டிப்பாக...
உனக்கு நான் கொடுப்பது சாபம் அல்ல....
என்னைப் போல்
அன்பால்
பண்பால்
பாசத்தால்
குணத்தால்
செல்வந்தனை வேண்டாமென்று ஒதுக்கிய உன் குழந்தை உள்ளத்தை நினைந்து
தினமும் அழுகிறேன்!!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக