சனி, 2 செப்டம்பர், 2017

செப்டம்பர் 2

காலைக் கதிரவனின் ஒளி
ஜன்னல் வழியே அறையினுள்
நுழையும் வரையான
நல்ல தூக்கம் சிலருக்கு மட்டும் தான்!
அறைக்கதவு தட்டப்படும் ஓசை!
என் அழகிக் குட்டி
'அம்மா... அம்மா' என்று தட்டுகிறாள்...
கதவைத்திறந்து அவளை அள்ளி அணைத்து
என் போர்வைக்குள் ஒளித்துக் கொண்டு கொஞ்சினேன்!
சிறிது நேர ஓய்விற்குப் பின்
அன்றாட வேலைகள் நடந்தேறின!
கடைத் தெருவிற்குப் பயணம்
வீட்டின் செல்லப் பிள்ளையுடன்...
நண்பர்களின் முக்கிய நிகழ்வுகளில்
பங்கெடுப்பதும் ஒரு பொறுப்பு தானே?
சிறிது நேர ஓய்விற்குப் பின்
மாலை நேர ஓட்டம்...
சில நிகழ்வுகளை நோக்கி...
எல்லாம் முடிந்து அனைவரும் கூடும்
சந்தைக் கூடம்...
பார்க்கவே அழகாய் காட்சியளித்தது...
எல்லாம் முடிந்து வீட்டினுள் நுழையும் போது
ஏதோ ஒரு வெறுமை..
அப்படியே தூங்கச் செல்கிறேன்...
காலை விடிகின்றது...
இது தான் என் வாழ்க்கைச் சக்கரம்..

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: