இந்தச் சொல், என் தோழியின் கணவர் அடிக்கடி அவளைப் பார்த்து சொல்லும் ஒருவார்த்தை. இன்று இந்த வார்த்தையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் போல் தோன்றியது. உடனே அகராதியை எடுத்து, அதன் தூய மொழிபெயர்ப்பு என்ன என்று பார்த்தேன். 'தற்புகழ்ச்சி அல்லது தற்பெருமை'. அதாவது, தான், தனது என்று தான் செய்வது மட்டுமே சரி என்று நினைப்பவர்கள். அகம்பாவம் பிடித்தவர்கள் என்று கூட சொல்லலாம்.
காதலர்களுக்கு இடையில் அடிக்கடி வருவது. ஆனால், சமரசம் செய்து கொள்வது தான் எப்படி என்றுத் தெரியாமல் பிரிந்து விடுகிறார்கள்.
பெரும்பாலான பிரச்சனைகளைப் பேசி மட்டுமே தீர்க்க முடியும் என்று என் நண்பர் அடிக்கடி சொல்லுவார். ஆனால், பேசுவதற்குக் கூட இடம் கொடுக்காமல் தடுப்பது தான் இந்தஈகோ.
ஈகோ–நமது மகிழ்ச்சியை நம்மிடம் இருந்து எடுத்து விடும்
ஈகோ–சிலநேரம் நம்மையே அழித்துவிடும்
ஈகோ–நம் இனியவர்களை நம்மிடமிருந்து பிரித்துவிடும்
ஈகோ–இருப்பது தவறல்ல. ஆனால், அதற்கு இடம் பொருள் ஏவல் அவசியம்.நம் குடும்பத்தினருடன், நம் நண்பர்களிடம், நம்மை அன்பு செய்வர்களிடம், நம் அண்டை வீட்டாரிடம், நம் உறவினர்களிடம் ஈகோவைத் தள்ளி வைத்துவிட்டுப் பழகுவோம். என்றும் உன் அருகில் தேவதைக் கூட்டம் நிரம்பி வழியும்.
நாமும் ஈகோ இல்லாமல் வாழ இன்று சிறப்பாக ஒரு முயற்சி எடுப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக