"ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்"
நண்பர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால், நாம் கஷ்டப்படும் காலங்களில் நமக்கு யார் உதவுகிறார்கள் என்பது தான் கேள்வி?
எங்கள் பள்ளியில் மயக்கம் போடும் ஆசிரியர், நான் ஒருத்தி மட்டும் தான். அதை எங்கள் பள்ளியில் அனைவரும் அறிவர். நேற்றும் அதைப்போல் தான். பள்ளியில் 40 ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால், எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதைப் பார்த்ததும், எனக்கு உதவி செய்ய மூன்று ஆசிரியர்கள் முன் வந்தார்கள்.
அவர்களுக்கு நன்றி சொல்லஅப்போது எனக்கு நேரம் இல்லை.. ஆனால், அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
கன்ஸலோ அனோன்ஸியா ஆசிரியர். என் உடன் பணியாற்றுகிறார். அவரை நான் எப்போதும் அம்மா என்றே அழைப்பேன். அழைப்பதற்கு ஏற்றார்போல் எனக்குத் தேவையான நேரத்தில், தேவையானஅறிவுரைகள் வழங்குவார். அவர் தான் நேற்று எனக்கு சாதம் ஊட்டிவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டார்.
கவிதா ஆசிரியர். இவர் தான் என் நெருங்கிய நண்பர் என்பது என் பள்ளியில் அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாய்த்தான் இருந்தோம். சில வேலைகள் காரணமாக இப்போது நாங்கள் இருவரும் சந்திப்பது சற்று குறைந்துவிட்டது. இருந்தும், எனக்கு ஏதாவது ஒன்று என்றால், இவள் துடிதுடித்துப் போய்விடுவாள். இவளை என் தோழியாகப் பெற்றது, நான் செய்த பாக்கியமே.
மூன்றாவது, எங்கள் பள்ளியின் நர்ஸ் மேம். எனக்கு எப்போது உடல் நிலை சரியில்லை என்றாலும், என் அருகில் இருந்து, என்னைப் பார்த்துக் கொள்பவர் அவர் மட்டும் தான். நான் எடுக்கும் வாந்தியைச் சுத்தம் செய்பவரும் இவர் தான். என் வீட்டிற்குத் தகவல் சொல்பவரும், இவர் தான்.
இந்த மூவரும் நேற்று என் வாழ்வில் என் கடவுளாகவேத் தெரிந்தார்கள்.
இதுவரை பைபிளிலும், படங்களிலும் மட்டுமே பார்த்த இயேசுவை நேற்று இவர்கள் மூலம் பார்த்தேன். இன்றும் நேற்று நடந்த ஒவ்வொரு விசயமும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
நண்பர்களுக்கு உதவுவது என்பது இறைவனுக்கே உதவிசெய்வது என்பதை நேற்று உணர்ந்து கொண்டேன்.
என் ஒவ்வொரு நண்பர்களுக்கும் நன்றி சொல்ல விழைகிறேன்.
நன்றி நண்பர்களே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக