சாபம் - பெரும்பாலும் நாம் இந்தவார்த்தையை சண்டையிடும் போது கேட்டிருப்போம். அல்லது, வீட்டில் யாராவது பேசிக் கொண்டிருக்கும் போது 'அவன் இப்படிச் செய்தான்...அவன் செய்தது தான், இப்போது, இந்தக் குடும்பத்திற்குச் சாபமாய் வந்து நிற்கிறது' என்று பேசுவார்கள்.சாபம் கொடுப்பதைப் பற்றியோ அல்லது சாபம் பெறுவதைப் பற்றியோ எனக்கு எந்த ஒரு உடன்பாடும் இல்லை.
திடீரென எனக்கு இந்த வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. என் நண்பர் என்னிடம் சொன்ன ஒரு வரிதான் இது. 'எனக்குசாபம் கொடுக்காதே!!' அதை எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் சாபத்தைப் பற்றி இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அன்று அவன் அப்படி செய்ததால், நான் அவனைத் திட்டினேன். ஆனால், அது உண்மையாகும் என்று நினைக்கவில்லை. ஆனால் அது எப்படி நடந்தது?
பைபிளில் படித்த ஞாபகம். 'நான்கு தலைமுறைக்கு நாம் பெற்ற சாபம் நீடிக்குமென்று.'
எதனால் சாபம் பெறுகிறோம்?
எதனால் மற்றவரைச் சபிக்கிறோம்?
இதிலிருந்துவிடுதலை இல்லையா?
என் அம்மா அடிக்கடி கூறுவார் 'கிறிஸ்தவர்களுக்கெல்லாம் சாபம் பழிக்காது. இருந்தாலும் பெரியவர்கள் வாயில் விழக் கூடாது'
சாபத்தைப் பற்றிஅதிகம் தெரியாது. இருந்தாலும் இருவருக்கு மட்டும் ஒரு சிலவரிகள் கூற ஆசைப்படுகிறேன்.
ஒன்று சாபத்தைக் கொடுப்பவர்
யாரையும் சபிப்பதற்கு முன் 'அது தனக்கு வந்தால் எப்படி இருக்கும்? தன் குடும்பம் என்றால் நம்மால் தாங்கிக் கொள்ளமுடியுமா? தன் அன்பிற்குரியவருக்கு என்றால் நாம் பொறுத்துக் கொள்வோமா?' என்பதை யோசித்துப் பார்த்து, பின் மற்றவரைப் பற்றிப் பேசுவோம்.
இரண்டு சாபத்தைப் பெறுபவர்
நம்மை மற்றவர் சபிக்கிறார் என்று தெரிந்தும், வீண் பிடிவாதம் பிடித்தும், திமிர் கொண்டும் இருப்பது நல்லதல்ல. அவரைப் பொறுத்துப் போவோம். இல்லையென்றால், அந்த இடத்தில் இல்லாமல் இருத்தல் நல்லது.
மற்றவரின் சாபத்தால் நடந்த உண்மைகள் நிறையவே இருக்கின்றன. என் வாழ்விலும், நான் கண்கூடாக பார்த்த சம்பவங்கள் இருக்கின்றன.
அதனால் மற்றரைச் சபிக்காமலும், நாம் சாபம் பெறாமலும் இன்பவாழ்க்கை வாழ்வோம்.
இனிய காலைவணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக