'அன்பே கடவுள் என்றால் அன்பிற்கு ஈடேது சொல்'
அன்பு கடவுளா?
அன்பு செய்தலில் கடவுள் இருக்கிறாரா?
கடவுள் அன்பாய் இருக்கிறாய் என்றால்,
அன்பு செய்தலுக்கு ஈடானது எதுவும் இல்லை.
ஆதலால், அன்பு செய்தலின் மூலம், நாம் இறைவனைஅறிந்து கொள்ளலாம். இறைவனை நம் மூலமாக மற்றவரும் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் அன்பு செய்வதற்கு எங்குநேரம் இருக்கிறது?
நாம் அனுப்பும் ஒவ்வொரு குறுஞ்செய்தியிலும், மின்னஞ்சலிலும் மட்டும் அன்பு என்ற வார்த்தையைக் குறிப்பிட்டால் போதுமா?
நாம் அவரை அன்பு செய்கிறோம் என்று அர்த்தமாகிவிடுமா?
கண்ணெதிரேக் காதல் எல்லாம் மறைந்து
கணினிக்காதல் பெருகிவிட்ட காலம்..
அன்பு என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்பவர்கள் தான் அனேகம். கணவன்-மனைவி, அம்மா-மகள்(ன்), காதலன்-காதலி இவர்களுக்கு இடையில் இருப்பது மட்டும் அன்பு அல்ல.
அன்பிற்குப் பலமுகங்கள் உண்டு...
விட்டுக்கொடுத்தல்...
பகிர்ந்தளித்தல்...
உரையாடுதல்...
புன்சிரிப்பு...
நல்லஉறவு...
நல்லெண்ணம்...
பொறுமையோடிருத்தல்...
ஏற்றுக்கொள்ளுதல்...
இவை அனைத்தும் அன்பின் வெளிப்பாடு தான்.
நான் அன்பாய் இருக்கிறேன் என்று வெளியில் பீற்றிக் கொண்டிருப்பதால், ஒன்றும் பயனில்லை. உண்மையில், நாம் அன்பானவர் தானா என்று சுயபரிசோதனை செய்து பார்ப்போம்.
அன்பு செய்வது எவ்வளவு உயர்வானதோ
அதே அளவு உயர்வானது
அன்பு செய்பவரைக் கடைசிவரையில் ஒரே மாதிரியாக அன்பு செய்வது.
இன்ப இனிய இயேசுவே...
புனித அசிசியாரின் 'அன்பைப் பெற விரும்புவதை விட, பிறருக்கு அன்பை அளிக்கவும் எனக்குஅருள்வீராக!' என்ற ஜெபத்தைப் போல், நானும் பிறருக்கு அன்பை அளிக்கவும், அந்த அன்பில் நிலைத்திருக்கவும் எனக்கு அருள்தாரும்.
இந்தநாள் என் வாழ்வின் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நாளாய் அமையட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக