எந்நேரமும்
புத்தகத்தை படிப்பதும்
பாடங்களைப் புரிந்து கொள்வதும்
மட்டுமே அறிவுக் களஞ்சியம் இல்லை...
கேட்பவர்களின் மனதைப் புரிந்து கொள்வதும்
அவர்களின் ஆவலை நிறைவு செய்வதும் தான்...
'உண்மைக் களஞ்சியம்..'
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
எந்நேரமும்
புத்தகத்தை படிப்பதும்
பாடங்களைப் புரிந்து கொள்வதும்
மட்டுமே அறிவுக் களஞ்சியம் இல்லை...
கேட்பவர்களின் மனதைப் புரிந்து கொள்வதும்
அவர்களின் ஆவலை நிறைவு செய்வதும் தான்...
'உண்மைக் களஞ்சியம்..'
இனியபாரதி.
அழகு மயில் தோகையை விரித்து
ஆடினால் தான் அழகு....
அழகுப் பதுமையும் பிரச்சினைகளைத்
தைரியமாக எதிர்கொண்டால் தான் அழகு...
இனியபாரதி.
ஆச்சரியங்களை எதார்த்தமாகப்
பார்க்கும் சிலருக்கு...
பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் இருக்கும்!!!
இனியபாரதி.
அழகின் இலக்கணம் நான்...
அனைவரையும் கவரும் வசீகமும் எனக்குண்டு...
என்னைப் பிடிக்காதவர் என்றால் இனி பிறந்து தான் வர வேண்டும்...
என்ன தான் நான் என்னுள் இவற்றை எல்லாம் கொண்டிருந்தாலும்
என் ஆயுளை மட்டும் என்னால் தீர்மானிக்க முடியவில்லை!!
இருக்கும் சில நாட்களை நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதே என் இலட்சியம்....
என்னைப் பற்றி நீ கவலை கொள்ளாதே!!!
உன் வாழ்வையும் அழகாய் மாற்றிக் கொள்!!!
இனியபாரதி.
கண்டதும் காதல் கொண்டது
அவன் தவறாக இருந்தாலும்....
அவனை அலைக்களித்தது
அவள் தவறு தானே!!!
கடைசியில் நடுத்தெருவில் விடுவாள் என்பது
அவன் மனம் அறியவில்லை போலும்!!!
இனியபாரதி.
தொலைந்து விட்டதே எனக் கவலை கொள்வதால்
மீண்டும் அது கிடைக்கப் போவது இல்லை....
தொலைத்ததை விட மதிப்புள்ளதை
உழைத்துப் பெற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம்....
இனியபாரதி.
இலட்சியத்தை அடைய துணையைத்
தேடிக் கொண்டு இருந்தோம் என்றால்...
இலட்சியம் அதற்கு ஏற்ற துணையைத்
தேடி ஓடி விடும்...
வாழ்வில் வரும் ஒவ்வொரு சவாலையும்
உன்னை முன்னேற்ற வரும் படிக் கட்டிகளாக நினைத்து
ஏறிக் கொண்டே இரு!!!
நீயாக நிற்கும் வரை!!!
இனியபாரதி.
புரிந்து கொள்ளாத நட்பும்
நம்பிக்கை இல்லாத அன்பும்
இல்லாமல் இருப்பதே நல்லது!!!
இல்லாதவன் இருப்பதைத் தேடி அலைகிறான்...
இருப்பவன் கொடுக்க முடியாமல் தவிக்கிறான்....
இனியபாரதி.
எனக்கு ஒன்றின் மேல் அதிகாரம்
இருக்கிறது என்பதற்காக
அதைத் தவறாகப் பயன்படுத்துதல் தவறு!!!
அந்த அதிகாரம் இல்லாவிட்டால்
நீ எந்த இடத்தில் இருப்பாய் என்பதை
முதலில் சிந்தித்துப் பார்!!!
இனியபாரதி.
கேட்க வேண்டும் என்று நினைப்பது
கேட்க முடியாமல் போய்விடுகிறது!!!
கேட்க முடியாமல் தவிப்பது
நமக்குக் கிடைக்காமலே போய் விடுகிறது!!!
தவித்துக் கொண்டும்
தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டும் இருப்பது
கடைசியில் பைத்தியமாகி விடுகிறது!!!
இனியபாரதி.
யார் சொல்லியும் கேட்காத அவன்
அவள் சொன்ன ஒரு வார்த்தைக்காய்
இன்றும் உயிர் வாழ்கிறான்
' நான் இல்லை என்றாலும் நம் குழந்தையை நன்றாய் பார்த்துக் கொள்! '
- அவள் அன்பிற்கு அடிமையாகிப்போனவன்!!!
இனியபாரதி.
எவ்வளவு உயரம் ஏறுகிறோம்
என்பதில் அல்ல...
எவ்வளவு உயரம் ஏறினாலும்
மாறாமல் இருப்பது தான்...
' தலைக்கணம் இல்லா ' நிலை....
இனியபாரதி.
காரணம் இன்றி உணரப்படும் அன்பு
குடைக்குள்ளும் பெய்யும் மழை போன்றது....
ஒரு சிறு துளை கூட இல்லாமல் இருந்தாலும்
ஊடுருவிச் சென்று அன்பு செய்யும் தன்மையது....
இனியபாரதி.
அவளின் எண்ணம் என்றும்
என்னுள் தரும் ஏமாற்றம்
அவளைத் தொலைத்த பின்
விரக்தியாய் மாறி
என் இதய அறைகளைக்
கிழித்துக் கொள்ளச் செய்கின்றன!!!
இனியபாரதி.
களவாடிப் போனது
அவள் இதயத்தை என்று
அவள் சொன்னாள்..
ஆனால் அவள் நகைகளைத் தான் என்பது
விடிந்தபின் தான் தெரிந்தது....
இனியபாரதி.
கதை கதையாய்ச் சொல்லி அவளுக்குப் புரிய வைப்பதும் கடினம்...
எடுத்துச் சொல்லி அவளைச் சம்மதிக்க வைப்பதும் கடினம்...
அவள் கோபத்தைக் குறைக்க முயல்வதும் கடினம்...
அவள் அன்பை விளங்கிக் கொள்வதும் கடினம்...
இனியபாரதி.
நான் இல்லாமல் அவள் மனம் படும்பாடு நான் அறிந்ததே!!!
இருந்தும் என்னை ஏற்றுக் கொள்ள மறுக்கும்
அவள் பிடிவாதம் மட்டும் புரியாமலே
என் நாட்கள் முடிந்துவிடும் போல!!!!
இனியபாரதி.
அடுத்தடுத்து என்ன செய்யலாம்
என்று யோசித்துக் கொண்டே
உன் நாட்களை எல்லாம்
வீணடித்த பின்!!!
எல்லாம் செய்து முடித்து
ஓய்வு பெறும் வேளையில்
அவனைத் தஞ்சம் புகலாம் என்று
நீ நினைப்பது தவரல்லவோ!!!
இனியபாரதி.
ஆசையாய் அவன் காத்திருந்து
அவள் ஸ்பரிசம் உணர
துடித்துக் கொண்டிருந்த அந்த
அனுபவ நாட்கள்!!!
இனியபாரதி.
காலமெல்லாம் காத்திருந்து
காதல் செய்த அன்பு மனையாள்...
கடைசியில் தொடுத்து விட்டாள்
ஆராத அம்பினை...
எண்ணமெல்லாம் நீ என்றாள்...
சொல் எல்லாம் நீயே என்றாள்...
கடைசியில் நீயே வேண்டாம் என்றாள்!!!
எல்லாம் காலத்தின் கொடுமை!!!
இனியபாரதி.
அன்பு... சீக்கிரம் புரிந்தும் கொள்ளும்...
சீக்கிரம் கோபமும் படும்....
அதை அனுசரித்துப் போக நினைப்பவன் முட்டாள்....
தீர தேர்ந்து தெளிவதே ஞானம்....
இனியபாரதி.
உன்னை விட்டுச் சென்றுவிட்டாள் என்று தவிக்காதே....
உன் அருமையை அவள் உணரும் தருணம்
உன் மடியில் கிடப்பாள்!!!
இனியபாரதி.
நான் கலக்கமுற்று இருந்தாலும்....
கண்ணீர் சிந்தினாலும்....
கவலையில் தவித்தாலும் ...
எல்லாவற்றையும் தீர்த்து வைக்க வரும் கை.....
என் மீதுள்ள நம்பிக்கை....
இனியபாரதி.
நம் வாழ்வில் மறக்க முடியாத நாள்...
இன்று ஒரு முழுமையை உணர்கிறேன்...
தவழ்ந்து வரும் தென்றல் காற்று...
காதோரம் ஒரு மெல்லிய குரலாய்....
அந்தி மாலையின் மயக்கத்தில்...
இன்னும் மறக்கப் படாத முகம்
' உனது ' ....
இனியபாரதி.
எப்போதும் பேசிக் கொண்டே இருப்பாள்...
நிறுத்தச் சொன்னாலும் கேட்பதில்லை...
விரைவாக அவள் கூற விரும்புவதைச் சொல்லி விடுவாள்....
அதன் பிறகும் அவள் தான் பேசுவாள்...
நீ என்ன செய்தாய் என்று கேட்பாள்...
ஆனால் நான் சொல்வதைக் கேட்காமல்
அவள் விருப்பத்தின்படி தான் பேசுவாள்...
கடைசியில் நீ ஒன்றும் பேசவில்லை என்று கோபப்படுவாள்...
அவளாக அழைப்பைத் துண்டிப்பாள்...
அவளாக மீண்டும் அழைப்பாள்...
கடைசியில்...
சண்டை என்று சொல்லி மூன்று நாட்கள் பேசமாட்டாள்...
இனியபாரதி.