செவ்வாய், 5 மார்ச், 2019

கருணையின் வடிவு...

அவளின் கலங்கமில்லாத் தன்மை
என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது...

உண்மைக்கும்
பொய்க்கும்
ஒரே முகத்தைக் காட்டுகிறாள்...

நன்மையோ
தீமையோ
புன்முறுவலுடன் இருக்கிறாள்...

அவளின் பால் மனது தான்
அவளின் இத்தகைய தன்மைகளுக்குக் காரணம்...

நானும் உன்னைப் போல...
மாற வேண்டும் என் இனிய சந்திரனே!!!

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

சங்க கால புலவன் கணியன் பூங்குன்றனுக்கு இனையனவர்
நடக்கும் நன்மை தீமை இரண்டிற்கும் தாமே பொறுப்பு ஏற்கிறார்.
சந்திரன் போன்று அனைவாராலும் மாற இயலாத அதற்கும் உண்டு ஓரு இருள் சுழ்ந்த அமாவாசை....