நீ பெண் என்பதால்
உன்னை நடத்தும் விதம் மாறும் இடத்திற்கு
நீ எதற்காகவும் செல்லாதே...
உன் மனம் விரும்புவதை செய்யத் துடிக்கும் போது
உன்னைத் தடுக்கத் துடிக்கும்
ஆண் வர்கத்திடம்
உன் உறவைத் தொடராதே...
உன் இனம், மதம், நிறம் பற்றி
யோசிக்காதே...
உனக்கு எல்லாம் ஒன்று தான்...
நீ ஒரு பெண்....
உலகை ஆட்டிப் படைக்கப் பிறந்தவள்...
உன்னால் முடியாதென்று ஒன்றுண்டோ??
இனியபாரதி.
1 கருத்து:
பாரதி கண்ட எழுச்சி பெண் இனியபாரதி
கவிதை வரிகள் மிகவும் கார சாரமாக உள்ளது
கருத்துரையிடுக