தேவைக்கு அதிகமாகும் போது
உப்பும் தன் மதிப்பை இழக்கிறது...
சர்க்கரையும் அப்படித் தான்...
நமக்கு அத்தியாவசியம் என்றாலும்
அதிகமான நிலையில்
உதறித் தள்ளப்படும் நிலை தான்
இந்த அன்பிற்கும்...
அதிகமாய் கொடுத்துவிடும் போது
திகட்டிவிடுகிறது...
திகட்டக் கொடுப்பது நம் பழக்கம் என்றாலும்
அதைப் பெறத் தகுதி இல்லாதவர்கள்
வாழும் உலகம் தான் இது...
இனியபாரதி.
1 கருத்து:
உப்பு,சர்க்கரை இரண்டும் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து அமைகிறது அளவுகளில் அன்பு அவ்வாறு இல்லை திகட்டாலுக்கு அடுத்து தித்திப்பை ஏற்படுத்தும் அதலால் தான் அன்பின் பெறுமையை அன்னை தெராசவும் வான் புகழ் கொண்ட வள்ளுவனும் கூறிஉள்ளனர்.,,
கருத்துரையிடுக