இனிய சொற்கள் இருக்கும் போது
கடுமையான சொற்களை ஏன் பேச வேண்டும்?
அருமையான வள்ளுவரின் குறள்...
பெரும்பாலும் நமக்குத் தெரியாதவர்களிடம்
இனிமையாகப் பேசத் தெரிந்த நமக்கு
நம் அன்புக்குரியவர்களிடம்
பேசத் தெரிவது இல்லை...
மற்றவர்களை உபசரிக்கும் அளவுக்கு
நம் உறவுகளை உபசரிக்கத் தவறி விடுகிறோம்...
அது ஏன் என்று நம் மனதிற்கு மட்டும் தான் தெரியும்...
இனிய சொற்களைப் பாகுபாடு இல்லாமல் பேசப் பழகுவோம்...
இனியபாரதி.
1 கருத்து:
சித்திரமும் கை பழக்கம்!
செந்தமிழ் நா பழக்கம்!
அன்புக்குரியவர்களிடம் பேசும் பேச்சு,
உறவினர் உபசரிப்பு இரண்டும் உள்ளத்தில் எழும் எண்ணங்களை பொறுத்து அமைகின்றன....
கருத்துரையிடுக