திங்கள், 24 செப்டம்பர், 2018

தாங்கிச் செல்ல...

யார் என்று கூட முழுமையாக
அறிந்து கொள்ளாத அந்த நேரம்...

யாரை எல்லாம் வணங்கச் சொல்கிறார்களோ
வணங்கியாக வேண்டும்....

யாரைப் பார்த்து சிரிக்கச் சொல்கிறார்களோ
சிரித்தாக வேண்டும் ...

யாருக்கெல்லாம் சமைக்கச் சொல்கிறார்களோ
சமைத்தாக வேண்டும்...

கேள்வி கேட்கவே வாய்ப்பில்லை...

அப்படி மீறிக் கேட்டால்
வாயாடி என்கிறார்கள்....

சரி... கொஞ்ச நாள் தானே என்று
மனதைத் தேற்றிக் கொள்ளும் போது தான் உணர்வோம்...

இந்த நிலை தான் கடைசி வரைத் தொடரும், நாம் வாய் திறக்காவிட்டால் என்று!!!

இவற்றை எல்லாம் தாங்கிக் கொள்ளும் பக்குவம் அவளுக்கு மட்டுமே உரியது என்றும்!!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: