ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

கருணை...

அயலான் மீதும் என்னால்
உண்மையான அன்பு காட்ட முடிகிறதா?

ஆம் என்று பதில் வந்தால் அது கருணை...

பகைவருக்கும் உதவும் பக்குவம் இருக்கிறதா?

ஆம் என்று பதில் வந்தால் அது கருணை...

நோயுற்றவரைப் பார்த்துக் கொள்ளும்
பொறுமை இருக்கிறதா?

ஆம் என்று பதில் வந்தால் அது கருணை...

செல்வத்திலும் மற்றவரின் வறுமை அறிய முடிகிறதா?

ஆம் என்று பதில் வந்தால் அது கருணை...

நானும் கேள்விக்கான பதில்களை
என்னிடம் கேட்டுக் கொள்கிறேன்!!!

இனியபாரதி.

சனி, 29 செப்டம்பர், 2018

அழகி...

சிற்பிக்குள் இருந்து முத்துக்கள்
எட்டிப் பார்க்கும்
உன் முத்துப்பல் சிரிப்பு
என்றும் அழகு!!!

இனியபாரதி.

தணியாத தாகம்...

நேற்றுவரை உன்னிடம் மட்டும் இருந்த தாகம்
இன்று வேறொரு பக்கம் திரும்புவது
உனக்கு மட்டும் அல்ல
எனக்கும் வருத்தம் தான்!!!

ஆனால் உன் மீது கொண்டிருந்த தணியாத தாகம்
ஒருநாள் உன்னை மீண்டும்
திரும்பிப் பார்க்க வைககும்!!!

அப்போது காட்டு உன் பெருமிதத்தை!!!

- நல்ல நூல்கள்

இனியபாரதி.

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

நேரம் ஒதுக்கி...

அடிக்கடி அவள் கண்ணசைவைப் பார்க்கிறேன் ..

அடிக்கடி அவள் இதழோரப் புன்னகையை ரசிக்கிறேன்....

அடிக்கடி அவள் கண்ணோரத் தூக்கத்தைக் கண்டு வியக்கிறேன் ...

அடிக்கடி அவள் சிரிப்பு சத்தத்தில் ஸ்தம்பிக்கிறேன்....

இவற்றுக்கெல்லாம் நேரம் ஒதுக்கிப் பார்க்கத் தெரிந்த நான்

அவள் மனத்தில் என்ன இருக்கும் என்று
பார்க்கத் தவறிவிட்டேன்...

இனியபாரதி.

வியாழன், 27 செப்டம்பர், 2018

மிகுதியாகக் கொடுத்தவரிடம்...

மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம்
மிகுதியாக எதிர்பார்க்கப்படும்....

எல்லாம் மிகுதியாகக் கிடைத்ததால்
கண் மூடிக் கொண்டு
அதை மட்டும் இரசித்துவிட்டுச்
செல்லலாம் என்று நினைக்காதே!

காலத்திற்கு நீ கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்!!!

இனியபாரதி.

புதன், 26 செப்டம்பர், 2018

ஆய்வு செய்ய...

என் எண்ணங்கள் எப்போதும்  ஒன்றாக இருக்க ஆசைப்படுகிறேன்...

மற்றவரைக் குறை சொல்லும் முன்
என்னை நானே சுயபரிசோதனை செய்து கொள்வது!!!

இனியபாரதி.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

என்னதான் சுகமோ...

அவளுக்குப் பிடிக்கும் என்று
இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது கூட சுகம் தான்!!!

அவளுக்குப் பிடிக்கும் என்று
மழையில் நனைவது கூட சுகம் தான்!!!

அவளுக்குப் பிடிக்கும் என்று
அவளை விட்டுப் பிரிந்திருப்பது கூட
சுகம் தான்!!!

அவள் என் மனத்தை அறியும் வரை!!!

இனியபாரதி.

திங்கள், 24 செப்டம்பர், 2018

தாங்கிச் செல்ல...

யார் என்று கூட முழுமையாக
அறிந்து கொள்ளாத அந்த நேரம்...

யாரை எல்லாம் வணங்கச் சொல்கிறார்களோ
வணங்கியாக வேண்டும்....

யாரைப் பார்த்து சிரிக்கச் சொல்கிறார்களோ
சிரித்தாக வேண்டும் ...

யாருக்கெல்லாம் சமைக்கச் சொல்கிறார்களோ
சமைத்தாக வேண்டும்...

கேள்வி கேட்கவே வாய்ப்பில்லை...

அப்படி மீறிக் கேட்டால்
வாயாடி என்கிறார்கள்....

சரி... கொஞ்ச நாள் தானே என்று
மனதைத் தேற்றிக் கொள்ளும் போது தான் உணர்வோம்...

இந்த நிலை தான் கடைசி வரைத் தொடரும், நாம் வாய் திறக்காவிட்டால் என்று!!!

இவற்றை எல்லாம் தாங்கிக் கொள்ளும் பக்குவம் அவளுக்கு மட்டுமே உரியது என்றும்!!!!

இனியபாரதி.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மயக்கம் என்ன???

அள்ளிப் பருகும் அமுதம்...
ஆசையாய் கிடைக்கும் முத்தம்...
பருவமழையில் குட்டிக் குளியல்...
ரோட்டோரம் சாப்பாடு...
கல்யாண வீட்டு விருந்து...
நீண்ட தூர தனிமைப் பயணம்...
காதோர மெல்லிசை...
இவற்றின் மீது என்றும் மயக்கமே!!!

இனியபாரதி.

சனி, 22 செப்டம்பர், 2018

கண்ணசைவில்...

உன் கண்ணசைவில்
என் மெய் மறந்து
ஆழ்ந்துகொண்டு இருக்கையில்
பின்னிருந்து அழைக்கும்
ஒரு குரல்
என் செவிகளில் படாமல்
நானாக சிரித்துக் கொண்டு
இருக்கையில்
என்னைப் பார்த்துப் பைத்தியம் என்று
சிரித்து விட்டுச் செல்லும் நபர்கள் ஏராளம்!!!

இனியபாரதி.

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

உன்னைப் போல் என்னால்...

அறிவுத் தெளிவோடு யோசித்து
நிதானமாய் நான் எடுக்கும் முடிவுகள் கூட
என் மகிழ்ச்சியை கலைப்பதாய் இருப்பது
வருத்தம் தருகிறது தான்...

உன்னைப் போல் நானும்
அவ்வளவு எளிதாய் எதையும் விட்டுவிட முடியவில்லை...

இனியபாரதி.

வியாழன், 20 செப்டம்பர், 2018

கடமையே கண்...

கடமையே கண் என்று நினைத்து
அனைத்தையும் செய்து முடிக்கும் நேரத்தில் தான்
புதிதாய் இன்னொன்று முளைக்கும்...

கடமைகள் முடியும் நேரம் இருக்கா? என்ன??

இனியபாரதி.

புதன், 19 செப்டம்பர், 2018

என்ன நினைத்தேன்!!!

என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை...

நானாகவே திருந்தி
நல்ல வாழ்க்கை வாழ்கிறேன்...

இது இப்படியே தொடரவும் ஆசைப்படுகிறேன்....

அப்படித் தொடரும் போது
புதிய உறவுகளுக்கு இடம் கொடுக்கவும் நினைக்கிறேன்...

இப்படி நான் ஆசைப்படும்
நினைவுகள் எல்லாம்
கடைசியில் கனவாய்ப் போனது தான் மிச்சம்...

இனியபாரதி.

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

விழுந்த பழம்...

அழகிய பழம் மரத்தில் இருந்து விழுந்தவுடன்
மதிப்புப் பெறுகிறது!?!

அதுவே விழுந்த சில நாட்களில்
மதிப்பு குறைந்து விடுகிறது...

அதுபோல்...
வாழ்க்கையில் நம் நட்பு கிடைக்காதா
என்று ஏங்குபவர்கள்

நம் நட்பு கிடைத்த சில நாட்களில்
அதை உதாசினப்படுத்த
ஆரம்பித்து விடுவார்கள்....

இனியபாரதி.

திங்கள், 17 செப்டம்பர், 2018

கரடிக்குட்டி...

கரடியின் அருகில் நின்று
அதனுடன் கை குலுக்க ஆசை...

அதன் அழகில் மயங்கி
கொஞ்ச நேரம் அதனுடன் உரையாட ஆசை....

இனியபாரதி.

ஏதாவது...

ஏதாவது செய்துகொண்டே இரு...

உன் மகிழ்ச்சியின் தருணங்களை
எண்ணிக் கொண்டே இரு...

உன் துன்பங்களை மறந்து கொண்டே இரு...

உன் வெற்றிகளை பெருக்கிக் கொண்டே இரு...

உன் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டே இரு...

வாழ்வில் நிலையான இன்பத்தை அடைவாய்!!!

இனியபாரதி.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

மனமிருக்கு...

உன்னை அழகாக படமெடுக்க
எனக்கும் மனமிருக்கு...

ஆனால் புகைப்படக் கருவி வாங்க
என்னிடம் பணம் இல்லை ...

இனியபாரதி.

சனி, 15 செப்டம்பர், 2018

கருப்பு தினம்...

கருப்பு நாள் ....
எல்லோரும் எதிர்ப்பது...
வெறுப்பது...
எனக்கு மட்டும் பிடிக்கும்
இந்த கருப்பு தினம்...

அந்த நிறத்திற்காக!!!

இனியபாரதி.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

பிரிவேது???

காலம் கடந்து
கால் கடுத்து நிற்கிறேன்...

கால் வலி கூட
பெரிதாய்த் தெரியவில்லை...

அவள் விட்டுச் சென்ற
கால்ச் சுவடுகளைக் காத்துக் கொண்டு நிற்க்கையில்!!!

இனியபாரதி.

வியாழன், 13 செப்டம்பர், 2018

எனக்கென ஏற்கனவே...

அவளுக்கும் தெரியும்
எனக்கென தெரிந்து கொள்ளப்பட்டவள்
அவள் என்று!!!

அவள் கண்களில் அதை உணர்ந்த
தருணங்கள் அதிகம்...

என்னை ஏற்க மறுக்கும்
அவள் மனம் மட்டும்
நான் வாங்க நினைக்கும் அமிர்தம்!!!

இனியபாரதி.

புதன், 12 செப்டம்பர், 2018

விழிகளின் அருகினில்...

உன் விழிகளின் அருகினில்
நான் இல்லாவிட்டாலும்
என் விழிகளின் உன்னை என்றும்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்....

இனியபாரதி.

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

ஒருபடி...

உன்னை விட ஒருபடி
மேலிருந்திருந்தால் கூட
இன்று வரை உன்னை
இப்படிக் கஷ்டப்பட விட்டிருக்க மாட்டேன்....

இனியபாரதி.

திங்கள், 10 செப்டம்பர், 2018

நான் ஒரு தொடர்கதை...

என்னைப் பற்றியும்
என் நாட்கள் பற்றிய உண்மைகளையும்
அறிந்த நீ
இந்தத் தொடர்கதை
எனக்குப் பிடித்திருக்கிறது
என்று எழுதுவதில்
சந்தேகம் இல்லை....

இனியபாரதி.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

கோபத்தின் உட்சத்தில்...

யாரிடமும் காட்ட முடியாத
கோபத்தை உன்னிடம் காட்டி
கடைசியில் கண் கலங்கி நிற்கிறேன்!!!

இனியபாரதி.

சனி, 8 செப்டம்பர், 2018

புன்னகையுடன்...

தன்னடக்கத்துடன்
யார் சண்டைக்கும் செல்லாமல்
தன் வேலையைச் செய்யும்
அந்த இளவளுக்குக் கூட
இப்படிப்பட்ட பிரச்சனைகள்
வரும்போது
அவள் எதிர்கொண்டு இருக்க வேண்டியது
"புன்னகை பூத்த முகம்" ஒன்று தான்...

இனியபாரதி.

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

நேரம் கொஞ்சம் குறைவு...

அவளுடன் செலவிடும் நேரங்கள் குறைவு...
அவளைப் பற்றி நினைக்கும் நேரங்கள் அதிகம்...
என்னைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் திட்டித் தீர்க்கிறாள் அவள்...
என்று தான் என் மனம் அவளுக்குப் புரியும் என்ற ஏக்கத்தில்...

இனியபாரதி.

வியாழன், 6 செப்டம்பர், 2018

தனிமையின் தாலாட்டில்...

அடிக்கடி நெடும் பயணம் மேற்கொள்கிறேன்...
என் வேலை நிமித்தம் அல்ல...
உன்னை மறக்க வேண்டும் என்று...

இனியபாரதி.

புதன், 5 செப்டம்பர், 2018

முன்னேறிச் செல்ல...

நான் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் என்னிடம் இருக்கின்றது ....

அதற்காக எனக்கு முன்னால் செல்பவரை இடித்துத் தள்ளி விட்டுத் தான் செல்ல வேண்டும் என்றால்...

நான் அவர் பின்னால் மெதுவாகச் செல்வதே நலம்...

இனியபாரதி.

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அறிவின் நிழலில்...

காண்பதெல்லாம் என்ன என்று ஒரு காலத்தில் கேட்டுக் கொண்டு இருந்தோம்...

காண முடியாதவை எல்லாம் என்ன என்று இத்தலைமுறை கேட்டுக் கொண்டு இருக்கிறது...

காணக் கூடியவை இவை மட்டுமே என்று வருங்காலத் தலைமுறை தீர்மானிக்கும்...

இனியபாரதி.

திங்கள், 3 செப்டம்பர், 2018

உயிரின் மொழி...

காத்திருத்தலிலும்...
கனவு காண்பதிலும்...
இயற்கையை நேசிப்பதிலும்...
வெளியில் சுற்றித் திரிவதிலும்...
நிஜங்களைப் படமெடுப்பதிலும்...
நினைவுகளை அசைபோடுவதிலும்...

என் உயிரின் மொழி அறிந்தேன்...

இனியபாரதி.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

அலை மோதும்...

அங்கும் இங்கும் நோட்டமிட்டு
கடைசியாய் நான் கண்டுபிடித்த உண்மை...

நீ என்னைத் தான் தேடிக் கொண்டிருந்தாய் என்று!!!

இனியபாரதி.

சனி, 1 செப்டம்பர், 2018

கற்க கற்க...

புத்தகங்கள் படிக்கிறேன்
இணையம் பார்க்கிறேன்
அனுபவம் மூலம் கற்கிறேன்
அறிவுரை கூறுகிறேன்
பாடம் நடத்துகிறேன்

உன் முன்னால் மட்டும்
முட்டாளாய் இருக்கிறேன்!!!

இனியபாரதி.