செவ்வாய், 31 மார்ச், 2020

தாகம்...

அவள் தாகம் தணிய எண்ணி
என் நீரை எல்லாம் கொடுத்தேன்...

வீணாய்ச் செலவழித்த பின்
என்னிடமே மீண்டும் வருகிறாள்...

நான் என்ன செய்வேன்!!!

என் தாகமும் தணியா நிலையில்
அவளின் தாகத்தை எப்படித் தணிப்பேன்...

இனியபாரதி.

திங்கள், 30 மார்ச், 2020

தெளிவு இல்லா...

அவளிடம் குறைவு படுவது
அவள் அழகோ
அறிவோ
சொத்தோ
சுகமோ அல்ல...

எதிலும் தெளிவு இல்லா நிலை மட்டும் தான்....

காத்திருக்கிறேன் மாற்றத்திற்காய்!!!


இனியபாரதி. 

ஞாயிறு, 29 மார்ச், 2020

அர்ப்பணம்...

கொடுப்பதில் இன்பம் 
பெறுவதில் இல்லை...

இனிதொரு நிலையாய்
எல்லாம் எதிர் பார்த்து...

காத்திருந்து அர்ப்பணம் செய்ய..

இனியபாரதி. 

சனி, 28 மார்ச், 2020

எதிர்பார்ப்பு...

நடக்கும் என்று நம்பினால் 
அது நடக்கும்...

நடக்காது என்று நம்பு...
அது நடக்கவே நடக்காது...


கிடைக்கும் என்று இருந்தால்
அது கிடைக்கும்...

கிடைக்காது என்று இருந்தால்..
அது கிடைக்கவே கிடைக்காது...


இனியபாரதி. 

வெள்ளி, 27 மார்ச், 2020

பயத்தால் அல்ல...

அவள் செய்யும் ஒவ்வொன்றுக்கும்
அவள் அவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பது
புரியாதவளாய் அவள் செய்யும் செயல்கள்
உறவை முறித்து விடும் என்று
அவள் யோசிக்கவில்லை போல!!!

இனியபாரதி. 

வியாழன், 26 மார்ச், 2020

அடக்க முடியாதது...

அடக்க முடியா அவன் அன்பை
எப்படிச் சொல்லிப் புரிய வைப்பான் அவளுக்கு....


தேவை பணமோ பொருளோ அல்ல...
அவளின் பார்வை மட்டுமே...

இனியபாரதி. 

புதன், 25 மார்ச், 2020

தங்கத்தாமரை...

அவள் குடி கொண்டிருப்பது
அவள் வீட்டரையினுள் மட்டும் அல்ல...

என் இதயக் கோவிலிலும் தான்...

அனு தினமும் தரிசனம் செய்ய
அவளை தங்கத் தாமரையாய் வடிவமைத்து
என் அறையில் வைத்துள்ளேன்....


இனியபாரதி. 

செவ்வாய், 24 மார்ச், 2020

திகட்டும் தேன்...

பரந்து விரிந்த
இந்த உலகில்
என் அன்பு அவளுக்கு மட்டும்
அவள் அன்பு எனக்கு மட்டும்
என்று வாழ முடியா சூழலில்..

அவளின் அன்பு குறைவது போல் எனக்கும்
என் அன்பு குறைவது போல் அவளுக்கும் தோன்றும்.

காரணம் அறிய மனம் துடிக்கும்..
அறிய முடியா நிலையில் காரியங்கள் நடக்கும்..

கடையில்...

எல்லாம் திகட்டி விடும்...

இனியபாரதி. 

திங்கள், 23 மார்ச், 2020

ஏன் இந்த குழப்பம்...

கண்டு கொள்ள யாரும் இல்லை...

கருணை காட்ட யாரும் இல்லை...

உணவு கொடுக்க யாரும் இல்லை...

உறவாட யாரும் இல்லை...

தங்கி இருக்க வீடு இல்லை...

தங்க அழைக்க யாரும் இல்லை...

இந்நிலையிலும் நான் நம்பி இருப்பது

உம்மை மட்டுமே!!!


இனியபாரதி. 

ஞாயிறு, 22 மார்ச், 2020

தாக்கம் குறைவு...

புயலுக்குப் பின் அமைதி...
எனக்கு அமைதியைக் கொடுத்து
பின் புயலைக் கொடுப்பது ஏன் என்று
யாரிடம் கேட்பது என்று தான் புரியவில்லை...!!!

இனியபாரதி. 

சனி, 21 மார்ச், 2020

என்ன தவம்...

என்ன தவம் செய்தேன்
இத்தாய் திருநாட்டில் வாழ
என்ன தவம் செய்தேன்...

காவல் நான் தான் எனக்கு
கணக்கும் நான் தான் எனக்கு
கட்டுப்பாடும் நான் தான் எனக்கு
கருணையும் நான் தான் எனக்கு

நான் வாழக் கற்றுக் கொடுத்த
என் தந்தை 'என் நாடு...'

வாழ்க பாரதம்!!!


இனியபாரதி. 

வெள்ளி, 20 மார்ச், 2020

யாரும் அறியா...

யாரும் அறியா அந்த நேரத்தில்
அவள் வரும் பாக்கியம்
எனக்குக் கிடைத்த வரம் தான்...

இனியபாரதி.

வியாழன், 19 மார்ச், 2020

வைரஸாகும் அவனின் அன்பு...

என்ன கொண்டு அளப்பேன்
அவள் அன்பை
என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

எபோலா கொரொனா 
என்று பல பல வைரஸ்
பெயர்களைச் சொல்லி

அதன் பரவல் போல என் அன்பு என்று சொல்ல நினைக்கிறேன்.... 


இனியபாரதி. 

புதன், 18 மார்ச், 2020

கருணை கொண்டு...

அவளைக் கருணையுடன் நோக்கும் தருணம்
என் கண்களின் ஓரம் நீர்த்துளிகள்...

காரணம் ஆராய மனம் விரும்பவில்லை....

தெரிந்தாலும் அலசிப் பார்க்கத் துணிவு இல்லை...

அவள் என்னவளாக இருக்கும் போது
இனி என்ன கவலை?


இனியபாரதி.


செவ்வாய், 17 மார்ச், 2020

காப்பேன் என்று...

அவள் கொடுத்த தைரியத்தால்
என்னால் எல்லாம் முடியும் என்று சொல்லி முயன்றேன்...

என்னை மூழ்கடிக்க அவளே
காத்திருப்பாள் என்பதை
நான் கனவில் கூட நினைக்கவில்லை...

அவள் என்னைக் காக்கும் கடவுளாக வர வேண்டாம்...
என்னைக் கைபிடித்து அழைத்துச் செல்லவும் வேண்டாம்...
என் வழியில் உள்ள பூக்களை நான் உணர விடாமல்
தடுக்காமல் இருந்தால் சரி..


இனியபாரதி. 


திங்கள், 16 மார்ச், 2020

புரிந்து கொண்ட புதிர்...

ஒரு நாள் அவள் திரும்பி வருவாள் என்று
அவன் காத்திருந்த நாட்கள் கழிந்து...
அவள் வரவே வேண்டாம் என்று எண்ணும்
அளவுக்கு மனதில் நெருடலை ஏற்படுத்த
அவளால் மட்டும் தான் முடிந்தது....


இனியபாரதி. 

ஞாயிறு, 15 மார்ச், 2020

தாங்க முடியும்...

என்னால் தாங்க முடியும் 
என்ற நம்பிக்கையில் தான்
எனக்கு துன்பம் கொடுக்கிறார் இறைவன்...

நானும் வலிக்காதது போல் நடிக்கிறேன்...
ஒன்றிரண்டு முறை அல்ல...
ஓராயிரம் முறை....


இனியபாரதி. 

சனி, 14 மார்ச், 2020

வேலையின் பளு...

என் வேலையின் பளு
உன்னில் எந்தவொரு பாதிப்பையும்
ஏற்படுத்தக் கூடாது
என்பதற்காக மட்டும் தான்
இன்னும் நடிக்கிறேன்
என் வேலையின் கடினத்தை
உனக்குச் சொல்லாமல்....


இனியபாரதி. 

வெள்ளி, 13 மார்ச், 2020

வரம் வேண்டும்...

கொடுக்கிறான் அளவுக்கு அதிகமாய்
நினைத்துப் பார்க்கா நேரத்தில்....

ரசிக்கிறேன் உன் ஒவ்வொரு வரத்தையும்...

நான் தேடிச் சென்று பெற்றுக் கொள்ளாமல் 
இருந்தாலும்
தானாகத் தேடி வந்த இந்த வரம் எப்போதும் என்னிடமே இருக்கட்டும்....


இனியபாரதி. 

வியாழன், 12 மார்ச், 2020

நேரம் கிடைக்க...

கிடைத்த நேரத்தை
வீணாக்காமல்
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்
வெற்றியைத் தரும்...


இனியபாரதி. 

புதன், 11 மார்ச், 2020

சுகம் தானம்மா...

நீ பேசாமல் விலகிச் செல்லும்
அப் பொழுது கூட
சுகமாய் இருந்தது
நான் உன்னவனாக இல்லாத போது...

இப்போது
நீ பேசிச் சென்றாலும்
மனம் அலைகிறது
உன் அடுத்த வருகைக்காய்....

இனியபாரதி. 

செவ்வாய், 10 மார்ச், 2020

கண்ணுக்குள்...

ஆள் ஆறடி என்றாலும்
நீ எனக்கு மகன் தான்
என்பது போல்
என்னை நீ நிமிர்ந்து பார்க்கும்
அந்தப் பார்வை மட்டும் தான்
என் கண்ணுக்குள் உள்ளது...

இறுதியாக...

இனியபாரதி. 

திங்கள், 9 மார்ச், 2020

குளிர் காலத்தில்...

குளிர் காலத்தில்
அவள் கொடுத்த ஒரு குடை...

வெயில் காலத்திலும்
எனக்கு நிழல் தருகின்றது...

அது தான் அவளின் மகத்துவம்...

இனியபாரதி. 

ஞாயிறு, 8 மார்ச், 2020

தவிக்காத பொழுதென்று...

அவள் தவிக்கக் கூடாது
என்பதற்காக தனது தவிப்பையும்
தாங்கிக் கொண்டு
நிர்கதியாய் நிற்பாள்
கண்டு கொள்ள யாரும் இல்லாமல்...

ஆனால்
அவளின் எண்ணம் எல்லாம்
வேறாகத் தான் இருக்கும்...

இனியபாரதி. 

சனி, 7 மார்ச், 2020

காணாமல் போன..

காணாமல் போன வாழ்க்கை ஒருநாள்...

கிடைத்துவிட்ட வாழ்க்கை ஒருநாள்...


இனியபாரதி.

வெள்ளி, 6 மார்ச், 2020

வியாழன், 5 மார்ச், 2020

நான் குறிப்பிடும் அவள்..

நான் குறிப்பிடும் அவள் என்னவள்!
அவள் இருப்பதால் தான் 
நான் இன்னும் இவ்வுலகில் இருக்கிறேன்...

அவள் இல்லா என் உலகம் வெறுமை...

அவள் இல்லா என் சிரிப்பு பொய்...

அவள் இல்லா என் சாதனை வெறும் களிமண்...

அவள் இல்லா என் எல்லாம் வீணே!!!

அவள் தான் நான்!!!

நான் அவள்!!! அவளான நான்!!!


இனியபாரதி.

புதன், 4 மார்ச், 2020

எல்லை அற்ற...

எல்லை அற்ற அவள் அன்பிற்கு
ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தான்
அடிக்கடி அவள் சண்டையிடுகிறாள் போல...

அன்பும் குறையாமல்
கோபமும் குறையாமல்
அனுதினமும் 
அணைய நெருப்பில் நடக்கிறாள்!!!

இனியபாரதி.

செவ்வாய், 3 மார்ச், 2020

அறிந்த அருமைகள்...

அதன் அருமை தெரியாமல்
சிதறவிட்ட நேரங்கள்
பல இருந்தாலும்...
அதன் அருமை தெரிந்து
பத்திரப்படுத்தி வாழ நினைக்கும் போது
சுரண்ட பல வண்டுகள்
என்னைச் சூழ்ந்து நிற்பது ஏனோ?


இனியபாரதி. 

திங்கள், 2 மார்ச், 2020

ஆறுவது போல் ஆறாத...

அவள் தரும் காயங்கள் சுலபமாய் ஆறாவிட்டாலும்...

அவற்றால் நான் படித்த பாடங்கள் மிகப் பல...

என்றும் என் நெஞ்சில் நீங்காமல்
அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே‌ இருக்கின்றன...


இனியபாரதி.




ஞாயிறு, 1 மார்ச், 2020

கண்ணே கலைமானே...

அவள் கொஞ்சல்களும் கெஞ்சல்களும்
மட்டும் தான் எனக்கு மிச்சம் என்று
வாழ்ந்திட முடியவில்லை...

அவளே எனக்கானவளாக இல்லாத போது
அவள் கொஞ்சல் இருந்து என்ன பயன்???

நானும் தவித்தேன்
தத்தளித்தேன
தாங்கிக் கொள்ள முடிவு செய்தேன்...


அவள் நினைவலைகளை மட்டும்!!!


இனியபாரதி.