வியாழன், 28 மார்ச், 2019

கணிப்பு...

என் கணிப்பு சரி என்றால்
நான் உம் மீது கொண்டுள்ள அன்பு உண்மை...

நீர் என்னை அன்பு செய்யும் அளவு
நானும் உம்மை அன்பு செய்கிறேன்...

நீர் என்னுடன் சண்டையிடும் அளவு
நானும் உம்முடன் சண்டை இடுவேன்...

இதுவல்லவே அன்பு...

என்னை நீரும்...
உம்மை நானும் மனதில் புரிந்து கொண்டு வாழ்கிறோமே அதுவே போதும்...

இனியபாரதி.

புதன், 27 மார்ச், 2019

உன் வார்த்தை கேட்டு...

நீ கூறும் ஒவ்வொன்றும்
என் செவிகளில் சத்தமாய் விழ....
அதை நான் மெளனமாய்
என் மனதில் வைத்து இரசிக்க
ஏற்ற நேரம் அன்றோ
இந்த அதிகாலை என்று என்னை உணர வைத்தாய்....

இனியபாரதி.

செவ்வாய், 26 மார்ச், 2019

என் மொழி...

நானும் நீயும்
பேசும் மொழி
என் மொழியாக இருக்க வேண்டும் என்று
ஆசைப்படுவது தவறுதான் என்றாலும்

என் மொழி
உன் மொழியாகவும்
உன் மொழி
என் மொழியாகவும்
என்றும் இருக்கும் பட்சத்தில்
நமக்குள் பிரிவு ஏது???

என்றும் உன் பாதம் சரணடைவேன் இறையே!!!

இனியபாரதி.

திங்கள், 25 மார்ச், 2019

உம்மைப் பற்றிக்கொள்ள...

நீதியிலும்
உண்மையிலும்
கஷ்டங்களிலும்
கவலைகளிலும்
உம்மை மட்டுமே
நான் பற்றிக் கொண்டு வாழ
வரம் தா இறைவா!!!

இனியபாரதி.

ஞாயிறு, 24 மார்ச், 2019

காணற்கரிய...

காணர்கரிய இடங்கள் அருகிருந்தும்
உன் மனத்தறையில் குடி இருக்கும்
என் நிலையை அறியத் தான் ஆசை ...

இனியபாரதி.

சனி, 23 மார்ச், 2019

காரணம் தெரியாமல்...

உழைத்து உழைத்து
முன்னேறியது என்றாலும்...

அடி வாங்கி வாங்கி
சுரணை அற்றுப் போனது என்றாலும்...

அழுது அழுது
மனம் வலியதாய் மாறியது என்றாலும்...

ஒரு நொடிப் பொழுது...
யாரும் இல்லா நிலை
வலிக்கத் தான் செய்கின்றது...

இனியபாரதி.

வெள்ளி, 22 மார்ச், 2019

ஏற்றுக் கொள்ள...

என்னை என்னவனாக
ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
அவளுக்கு வரும் போது...

அவளை அவளாக
ஏற்றுக் கொள்ள என் மனம் தயங்கவில்லை...

இனியபாரதி.

வியாழன், 21 மார்ச், 2019

களவும் கற்று...

கற்க வேண்டியது
எவ்வளவு இருந்தாலும்
இந்தக் களவைக்
கற்று அறிந்தவன்
உண்மையில் ஞானியாகிறான்.

இனியபாரதி.

புதன், 20 மார்ச், 2019

தேவைக்கு அதிகமானால்...

தேவைக்கு அதிகமாகும் போது
உப்பும் தன் மதிப்பை இழக்கிறது...
சர்க்கரையும் அப்படித் தான்...

நமக்கு அத்தியாவசியம் என்றாலும்
அதிகமான நிலையில்
உதறித் தள்ளப்படும் நிலை தான்
இந்த அன்பிற்கும்...

அதிகமாய் கொடுத்துவிடும் போது
திகட்டிவிடுகிறது...

திகட்டக் கொடுப்பது நம் பழக்கம் என்றாலும்
அதைப் பெறத் தகுதி இல்லாதவர்கள்
வாழும் உலகம் தான் இது...

இனியபாரதி.

செவ்வாய், 19 மார்ச், 2019

நான் வரைந்த ஓவியம்...

அப்படி ஒன்றும் எடுப்பாய் இல்லை என்றாலும்
என் ரசனையில் அடிக்கடி சுவை சேர்ப்பது
நான் அவளை நினைத்து
அவளுக்காய் வரைந்து கொடுத்த ஓவியம் தான்...

அது வெறும் ஓவியம் மட்டும் அல்ல...
என் கலைத்திறனின் மொத்த உருவம்...

அதை எப்படி சுலபமாக மறந்து விடுவேன்???

இனியபாரதி.

திங்கள், 18 மார்ச், 2019

அன்பு கொண்ட நெஞ்சம்...

அவள் அன்பு முழுவதையும்
எடுத்துக் கொள்ளும் உரிமை
எனக்கு இல்லாமல் இருக்கலாம்...

ஆனால்...
என் அன்பு முழுவதையும்
அவளுக்குக் கொடுக்கும்
சுதந்திரம் எனக்கு இருக்கின்றது...

இனியபாரதி.

ஞாயிறு, 17 மார்ச், 2019

உன்னை அறிந்தால்...

உன்னிடம் இருக்கும் திறமைகளை...
உன் தியாகங்களை...
உன் பொறுமையை...
உன் போற்றுதலை...
உன் உணர்வுகளை...
உன் எண்ணங்களை...
நீ மதிக்கக் கற்றுக் கொள்ளும் போது
தானாகவே
எல்லோராலும் மதிக்கப்படும்...

இனியபாரதி.

சனி, 16 மார்ச், 2019

முயற்சி உடையார்...

முயன்று முயன்று
தோற்றுப் போவதில் கூட
எனக்கு மகிழ்ச்சி தான்...

முயற்சிக்காமல்
அடுத்தவர் உழைப்பில்
வாழ்வதை விட...

என் உழைப்பில்
நான் உண்ணும்
ஒரு வேளை உணவு கூட
அமிர்தம் தான்...

என் முயற்சியில்
உன்னைப் பயிரிடுகின்றேன்...
உன் முயற்சியால் விளைந்து
எனக்குப் பலனைத் தா!!!

விவசாயி பயிரிடம்...

இனியபாரதி.

வெள்ளி, 15 மார்ச், 2019

காரிருள் பள்ளத்தாக்கின் நடுவினிலும்...

காரிருள் சூழ்ந்து நிற்கும்
ஒரு பள்ளத்தாக்கின் நடுவில்
நான் நிற்க நேர்ந்தாலும்
நீர் என்னோடு இருப்பதால்
எதைக் கண்டும் பயப்படாமல்
முன்னேறிச் செல்வேன்...

இனியபாரதி.

வியாழன், 14 மார்ச், 2019

எப்போதும் போல்...

எப்போதும் போல்
மனமகிழ்ச்சியாக இருக்க
ஆசைப்பட்டு
முழுதுமாக அன்பு செய்த பின்...
அவன் இழந்த மகிழ்ச்சியை
யாராலும் திருப்பித்தர முடியாததால்
தன்னிலை மறந்து அலைகிறான்...

இனியபாரதி.

புதன், 13 மார்ச், 2019

என் இனிய பொன் நிலாவே...

என் இனிய இந்த வாழ்க்கையில்
ஒரு அழகிய நிலவாய் வந்து
என்றும் அற்புதங்கள் செய்யக் கூடியவள் நீ...

உன்னில் கலங்கம் வர
நான் ஒரு காரணமாய் இருக்க மாட்டேன்...

இனியபாரதி.

செவ்வாய், 12 மார்ச், 2019

இனிய உளவாக இன்னாத கூறல்....

இனிய சொற்கள் இருக்கும் போது
கடுமையான சொற்களை ஏன் பேச வேண்டும்?

அருமையான வள்ளுவரின் குறள்...

பெரும்பாலும் நமக்குத் தெரியாதவர்களிடம்
இனிமையாகப் பேசத் தெரிந்த நமக்கு
நம் அன்புக்குரியவர்களிடம்
பேசத் தெரிவது இல்லை...

மற்றவர்களை உபசரிக்கும் அளவுக்கு
நம் உறவுகளை உபசரிக்கத் தவறி விடுகிறோம்...

அது ஏன் என்று நம் மனதிற்கு மட்டும் தான் தெரியும்...

இனிய சொற்களைப் பாகுபாடு இல்லாமல் பேசப் பழகுவோம்...

இனியபாரதி.

திங்கள், 11 மார்ச், 2019

நான் வழி அறிந்தேன்...

நான் செல்லும் வழிகள்
முள்ளும்
கரடும்
முரடும்
காரிருளும்
கசப்புகளும்
சோகங்களும்
நிறைந்து இருந்தாலும்
நான் அடையும் இடம்
புனிதமாக இருக்கும் என்ற ஆசையில்
தினமும் தொடர்கிறேன்...

இனியபாரதி.

ஞாயிறு, 10 மார்ச், 2019

தனித்து நில்... துணிந்து செல்...

நீ பெண் என்பதால்
உன்னை நடத்தும் விதம் மாறும் இடத்திற்கு
நீ எதற்காகவும் செல்லாதே...

உன் மனம் விரும்புவதை செய்யத் துடிக்கும் போது
உன்னைத் தடுக்கத் துடிக்கும்
ஆண் வர்கத்திடம்
உன் உறவைத் தொடராதே...

உன் இனம், மதம், நிறம் பற்றி
யோசிக்காதே...

உனக்கு எல்லாம் ஒன்று தான்...
நீ ஒரு பெண்....

உலகை ஆட்டிப் படைக்கப் பிறந்தவள்...

உன்னால் முடியாதென்று ஒன்றுண்டோ??

இனியபாரதி.

புதன், 6 மார்ச், 2019

இடைவெளி இல்லா...

சிறிது கூட இடைவெளி இல்லாமல்
நெருங்கி இருக்கும் அவள்...
அவளின் மணம்...
இரண்டும் என்னை விட்டுச் சென்றுவிட்டன...

நான் மட்டும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்...
அவளின் நினைவால்...

இனியபாரதி.

செவ்வாய், 5 மார்ச், 2019

கருணையின் வடிவு...

அவளின் கலங்கமில்லாத் தன்மை
என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது...

உண்மைக்கும்
பொய்க்கும்
ஒரே முகத்தைக் காட்டுகிறாள்...

நன்மையோ
தீமையோ
புன்முறுவலுடன் இருக்கிறாள்...

அவளின் பால் மனது தான்
அவளின் இத்தகைய தன்மைகளுக்குக் காரணம்...

நானும் உன்னைப் போல...
மாற வேண்டும் என் இனிய சந்திரனே!!!

இனியபாரதி.

திங்கள், 4 மார்ச், 2019

வெள்ளி ரதம்...

அன்பின் ஆணிவேராய்
அவள் இருக்கும் அந்த நிமிடங்கள் எல்லாம்
தங்கத்தால் வணையப்பட்ட அவளை
வெள்ளி ரதத்தில் வைத்து
தெருத்தெருவாய் அழைத்து வந்து
இவள் என்னவள் என்று
பாட ஆசை தான்...

இனியபாரதி.

ஞாயிறு, 3 மார்ச், 2019

ஏன் இந்த தடுமாற்றம்?

இச்சூழல் என்னை ஏதாவது ஒரு குழியில் விழத் தாட்டி விடுமோ என்று
பயமாகத்தான் உள்ளது...

தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசை தான்...

தெளிவாக இல்லாவிட்டாலும் உள்ளம் பாரமாகத் தான் இருக்கும்...

ஏற்கவும் முடியாமல்...
இழக்கவும் முடியாமல்...
தவிக்கும் மனது...

இனியபாரதி.

சனி, 2 மார்ச், 2019

கொடுத்து வைத்தது...

அவள் கொடுத்து வைத்தது
அவ்வளவு தான் என்று
அவளை விட்டுப்பிரிந்து வாழ எண்ணித்தான்
தனிமையைத் தேர்ந்தெடுத்தேன்...

இப்போது அந்தத் தனிமை
என்னை விட்டுச் சென்று விடாதே
என்று என்னைத் துரத்துகிறது...

இனியபாரதி.

வெள்ளி, 1 மார்ச், 2019

எல்லாம் கடந்து போகும்...

நேற்றைய தினம் ஒரு கனவாய்...
இன்றைய தினம் ஒரு போர்க்களமாய்...

நாளைய தினம் ஒரு நந்தவனமாய்
இருக்குமோ என்ற ஏக்கத்தில்
தூங்கச் செல்லும்
ஒவ்வொரு உயிரும்
அடுத்த நாள் அனுபவிப்பதும்
போர்க்களம் தான்...

என்னே இந்த வாழ்க்கை என்று கூட நொந்துகொள்ள முடியாத நிலையில் நான்!!!

இனியபாரதி.