ஞாயிறு, 9 ஜூலை, 2017

இனிய கனவுகள்...

இரவு நேரம் நீண்டிருக்கவும்
பகல் சீக்கிரம் முடியவேண்டுமென்றும்
அதிகாலை நினைப்பது மட்டும் என் கனவல்ல!
என் கற்பனைகள் எழுத்துருவாக்கப்பட வேண்டும்
என் கவிதைகள் பேசப்பட வேண்டும்
என் படத்தொகுப்புகள் பிரபலமாக்கப்பட வேண்டும்
என் சிந்தனை மற்றவரை எட்ட வேண்டும்
என் சொல் பலருக்கு மகிழ்வளிக்க வேண்டும்
என் கரங்கள் பலருக்கு உதவ வேண்டும்
உண்மைகள் உரைக்கப்பட வேண்டும்
நேர்மைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்
இதை என்னிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்
இன்றே ஆரம்பிக்க வேண்டும்!

இவை கூட என் கனவுகள் தாம்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: