அனைத்தும் நிரந்தரம் இவ்வுலகில்...
நாம் ஆசைப்படும் பொருட்கள் கூட நிரந்தரம் தான்
நம் வாழ்க்கை மட்டும் தான் நிரந்தரமல்ல...
என்னைப் பொறுத்தவரை அன்பு, சாதனை
இவை இரண்டையும் தான் நிரந்தரம் என்று கூறுவேன்...
அன்பு – கடல் கடந்து சென்றாலும் நிலைத்து நிற்பது
சாதனை – நம் இறப்பிற்குப் பின்னும் நம்மைப் பற்றிப் பேசுவது
அழகான பூவின் மீது விழும் பனித்துளிகளால்
அந்த மரமே அழகாகின்றது!
பனித்துளிகள் சிறிது நேரத்தில் மறைந்துவிடும்!
அந்த மலரும் இரண்டு நாட்களில் உதிர்ந்து விடும்!
இருந்தும் அந்த மரம் மறுபடியும் புன்னகைக்க மறக்கவில்லை!
ஆனால் நான்/நாம்????
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக