நான் பேசும் பேச்சுக்களை மாற்றிக் கொண்டேன்!
என் உடையலங்காரங்களில் பல செய்து கொண்டேன்!
பள்ளிப் பருவத்து நினைவுகளை மறந்துவிட்டேன்!
நாட்கள் நகர்வதை மறந்துவிட்டேன்!
சாப்பிடும் நிமிடங்கள் கூட உன்னை நினைத்திருந்தேன்!
இரவின் கனாக்களில் நீ மட்டுமே வரவேண்டுமென்றிருந்தேன்!
எப்போது காண்போமென்று ஏங்கிக் கொண்டிருப்பேன்!
உன் இனிய முகத்தை எண்ணிச் சிரித்துக் கொண்டிருப்பேன்!
உன் அழைப்பிற்காய் காத்துக் கொண்டிருப்பேன்!
உன் பேச்சில் மெய்மறந்து போயிருப்பேன்!
இவையெல்லாம் நீ என்னைக் காதலிக்க வேண்டுமென்பதற்காக அல்ல!
நான் உன்னை அன்பு செய்கிறேன் என்பதற்காக!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக