இன்று
விவேகானந்தரின் நினைவு நாள்...
காலை எழுந்தவுடன் தினக் காலண்டரில்
அதைப் பார்த்ததும்
மனம் ஏதோ ஒரு சோகத்தை உணர்ந்தது தான்!
விவேகானந்தர் - எனக்குப் பிடித்தவர்களில் ஒருவர்.
அவரைப் பற்றி சிறிது நேரம்
யோசித்துக் கொண்டிருந்தேன்!
அவர் எப்படி இறந்திருப்பார்?
அவர் இறக்கும் தருணத்தில் அவருடன் யார் யாரெல்லாம் இருந்திருப்பார்கள்?
அவர் இறந்தபின் அருகிலிருந்த எத்தனை பேர் அழுதிருப்பார்கள்?
அவர் சாவைத் துணிவுடன் ஏற்றுக் கொண்டாரா?
இன்னும் வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டிருப்பாரா?
அழுதிருப்பாரா?
அருகிருந்தவர்க்கு ஆறுதல் அளித்திருப்பாரா?
என் மடத்துறவிகள் என்னை எப்படி கவனித்துக் கொள்கிறார்கள் என்று யோசித்திருப்பாரா?
ஒருவேளை திருமணம் செய்திருந்தால் என் குழந்தைகள் எல்லாம் என் அருகில் இருந்திருக்கும் என்று யோசித்திருப்பாரா?
துறவியாய் இருப்பதால் இத்தனை பேர் நம் அருகில் இருக்கிறார்கள் என்று யோசித்திருப்பாரா?
தாகமாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பாரா?
உணவு வேண்டுமென்று கேட்டிருப்பாரா?
கடைசியாக நான் அவரை / அவளைக் காண வேண்டுமென்று கூறியிருப்பாரா?
என் கடைசி ஆசை இதுவென்று கூறியிருப்பாரா?
இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன!
அந்தத் தருணம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் போதே பேச்சிழந்து விடுகிறேன்!!!
இறைவனின் அடியில்
அடிகளார் என்றும் இளைப்பாறட்டும்!!!
இனிய இரவு வணக்கங்களுடன்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக