அன்பிற்கும் பாசத்திற்கும்
முன்கோபத்தைப் பற்றி நன்றாய்த் தெரியும்
என்று நினைத்து தான் அடிக்கடி
அவனும் கோபப்படுவான்!
ஆனால், அவனைப் பற்றி யாரும்
புரிந்துகொள்வது போல் தெரிவதில்லை!
வெளியில் கோபத்தைக் காட்டினாலும்
உள்ளுக்குள் அழுவது அவனுக்கு மட்டும் தான் தெரியும்!
தானாக முன்வந்து எந்த தவற்றைச்
செய்யாமல் இருந்தாலும்
பழி என்னவோ இவன்மேல்
மட்டும் தான் விழும்!
கோபத்தைக் காட்டும் நேரமும் குறைவு!
அதை மனதில் வைத்திருக்கும் நேரமும் குறைவு!
அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது போல்
உணர்பவன்!
மற்றவரைக் காயப்படுத்தினாலும்
அதிகமாகக் காயப்படுவதென்னவோ
அவனின் மனம் தான்!
பல நாட்கள் யோசித்தும்
புரியாத அவனுக்கு
இன்று தான் புரிந்தது 'அவன் முன்கோபக்காரன்' என்று...
இதை யார் சொல்லியும் அவன் புரிந்து கொள்ளவில்லை
அவனாகவே தெரிந்து கொண்டான்!
அவனின் இந்தப் புரிதலுக்கு அவன் 'தனிமை' தான் காரணம்.
சீக்கிரம் இந்தக் கோப நோய்
அவனை விட்டு நீங்கும்!
நீண்ட நடைப்பயிற்சியால்....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக