வெள்ளி, 7 ஜூலை, 2017

அவளை நினையாத பொழுதுகள்....

அவளை நினையாத பொழுதுகள்
முக்காலத்திலும் இருக்க வாய்ப்பில்லை!
பிற மகளிரிலும் அவளே தெரிகிறாள்!
அவளைக் காணும் போதும் மெய்சிலிர்க்க வைக்கிறாள்!
தூரத்தில் பார்த்தாலும் துடிப்புடன் இருக்கிறாள்!
அவளருகில் சென்று எனதன்பை உணர்த்தத்துடிக்கும் நேரம்
பறந்து சென்று விடுகிறாள்!
நான் மட்டுமே உன்மீது உரிமை கொண்டாட
வேண்டுமென்று துடிக்கிறாள்!
பிறர் என்னை நோக்கும் போது
கோபத்தில் சிவக்கிறாள்!
நான் பேசவில்லையெனில்
வருத்தத்தில் வாடுகிறாள்!
அன்புப் பரிசளித்து ஆச்சரியப்படுத்துகிறாள்!
இவ்வளவும் எனக்குத் தெரிந்தும்...
காட்டிக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்...
எப்போது
அவள் அருகில் சென்று
அவள் கன்னங்களை என் கைகளில் தாங்கி
அவதிரு கண்களும் என்னை நோக்க
அவளைப் பார்த்து
அவள் தான்
'என் உலகம்'
என்று சொல்லப்போகிறேனோ???

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: