வியாழன், 4 ஜனவரி, 2018

கண்ணீர்த் துளிகள்...

மற்றவர் உன்னை அடிமைப்படுத்தும் போது...
உன் பெற்றோர் உன்னை நம்பாத போது...
உன் உடன்பிறப்பு உன்னை ஏளனமாய் பேசும் போது...
நண்பர்கள் உன்னைக் கைவிடும் போது...
உறவுகள் உன்னை வெறுத்து ஒதுக்கும் போது...
பணத்திற்காக மற்றவர் கையை எதிர்பார்த்து நிற்கும் போது...
உன் சொந்த வீட்டில் உண்ண பலர் முகத்தைப் பார்க்கும் போது...
உன் அன்பை உணராமல் பலர் உன்னை கேவலப்படுத்தும் போது...
உன்னை எள்ளி நகையாடும் போது...
உன் அழகைப் பற்றிக் குறை கூறும் போது...
உன் வசதிக்குறைச்சலைச் சுட்டிக் காட்டும் போது...
உன் கள்ளம் கபடமற்ற உள்ளத்தை காயப்படுத்தும் போது...
எழும் கண்ணீர்த்துளிகளை வீணடித்து விடாதே!
சேர்த்து வைத்து அந்த வைராக்கியத்தை
உன் வாழ்வை முன்னேற்றுவதில் காட்டு!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: