ஆணாய் இருப்பதால்
என் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்
பெண்ணாய் இருப்பதால்
வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும்
மூத்த பிள்ளையாய் இருப்பதால்
வீட்டின் கடன் கணக்குகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்
மருமகனாய் இருப்பதால்
மாமனார் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்
தங்கையாய் இருப்பதால்
தன் சகோதரனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
பணம் இல்லாதிருப்பதால்
மற்றவர்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்
அழகு இல்லாதிருப்பதால்
பொது இடங்களில் ஒதுங்கி நிற்க வேண்டும்
அறிவு இல்லாதிருப்பதால்
கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்
கலைநயம் இல்லாதிருப்பதால்
கலையைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும்
கல்வி ஞானம் இல்லாதிருப்பதால்
மற்றவர்களுக்கு அறிவுரை கூறாமல் இருக்க வேண்டும்
இப்படி பல நிலைகள்
நம் வாழ்க்கையில் அனுதினமும்
திணிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக