புதன், 31 ஜனவரி, 2018

பணம் பத்தாயிரமும் செய்யும்...

வாழ்க்கையே வேண்டாம் என்று
வெறுத்து ஒதுக்கும் நேரத்தில் கூட
பணமிருந்தால்
வாழத் தோன்றும்!!!
பெற்றோர்கள்...
குழந்தைகள்...
மாமனார் மாமியார்...
என்று இல்லாத குறைறைக் கூட
பணம் தீர்க்கும் போல!!!
தாயன்பைப் பணம் கொடுத்துப்
பெற்றிடலாம் போல!!!
அழகற்றவளைக் கூட
அழகாய் மாற்றும் தன்மை
பணத்திற்கு உண்டு போல!!!
பாசம் கூட பாசாங்கு பண்ணும் வேளையில்
பணம் உதவும் போல!!!
இப்படி
எல்லா இடங்களிலும்
பணம் மட்டுமே பேசுகின்றது!!!
வாழ்க இந்த வையகம்!!!

இனியபாரதி.

செவ்வாய், 30 ஜனவரி, 2018

உன்னன்பை உணர்ந்து...

இருவரும் சண்டையிட்டு மட்டுமே
அதிகமாய் பார்த்த நாங்கள்
நினைத்ததென்னவோ
'நீங்கள் இருவரும் எப்போதும்
இப்படித்தான் சண்டை போட்டுக்கொண்டே
இருப்பவர்களென்று'
உங்கள் சண்டைகள் தான்
இருவர் அன்பின் அடையாளம்
என்பதை உணர்ந்தோம் பின்னர்!!!
என்ன தான் சண்டையிட்டுக் கொண்டாலும்
அன்றிரவே சமரசம் செய்துகொள்வது
உங்களின் சிறப்பன்றோ?
இருவரும் மனமும்
ஒன்றையே நினைத்து
ஒன்றேயே செய்து
என்றும் இன்று போல் வாழ
'இனிய திருமண நாள் வாழ்த்துகள் - அம்மா, அப்பா'

இனியபாரதி.

திங்கள், 29 ஜனவரி, 2018

அந்த நேரம்...

நண்பர்களுடன் செலவிட்ட நேரங்களை
நினைக்கும் போது
புன்னகையுடன் கண்ணீரும்
சேர்ந்து வருவது
இயல்பு தான்!
அப்படி ஒரு
ஆனந்தத்தைத் தருவது 'நட்பு மட்டுமே!!!'

இனியபாரதி.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

அறியேன் அல்லேன்...

நீ பார்த்துவிட்ட உடன்
என் கண்களை உன்னை விட்டு நீக்க
முற்படும் அத்தருணம்...
உன் கை உரச வேண்டுமென்று
உனதருகில் தெரிந்தே நடந்துவரும் அந்நேரம்...
நான் கோபப்பட வேண்டுமென்றே
என் அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணை விமர்சிக்கும் உன் பேச்சு...
என்னையறியாமல் உன்னை அதிகதிகமாய் அன்பு செய்ய வைக்கிறது!!!
இனியபாரதி.

சனி, 27 ஜனவரி, 2018

திணிக்கப்பட்ட பொறுப்பு....

ஆணாய் இருப்பதால்
என் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்
பெண்ணாய் இருப்பதால்
வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும்
மூத்த பிள்ளையாய் இருப்பதால்
வீட்டின் கடன் கணக்குகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்
மருமகனாய் இருப்பதால்
மாமனார் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்
தங்கையாய் இருப்பதால்
தன் சகோதரனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
பணம் இல்லாதிருப்பதால்
மற்றவர்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்
அழகு இல்லாதிருப்பதால்
பொது இடங்களில் ஒதுங்கி நிற்க வேண்டும்
அறிவு இல்லாதிருப்பதால்
கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்
கலைநயம் இல்லாதிருப்பதால்
கலையைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும்
கல்வி ஞானம் இல்லாதிருப்பதால்
மற்றவர்களுக்கு அறிவுரை கூறாமல் இருக்க வேண்டும்
இப்படி பல நிலைகள்
நம் வாழ்க்கையில் அனுதினமும்
திணிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன!!!

இனியபாரதி.

வெள்ளி, 26 ஜனவரி, 2018

உயிர் கொடுக்க முடியா...

நீ கண்சிமிட்டும் அழகைக்
காண இயலா எனக்கு
கிடைத்ததென்னவோ
உன் வறுவல் மட்டும் தான் 'மீன்'

ஆசையாய் அழைத்து வந்த
என் மணமகளைக்
காப்பாற்ற முடியாமல்
தவிக்கும் நான் 'நாட்டுக்கோழி-சேவல்'

தாவிக்குதித்து ஆடிப்பாடிய
உன்னைத் தலைகீழாய்க்
கட்டிவைத்து கழுத்தறுக்கும்
ஒரே இனம் : மனித இனம் 'ஆடு'

இனியபாரதி.

வியாழன், 25 ஜனவரி, 2018

தனித்திருந்து...

உன்னை நீயே
அன்பு செய்வது கடினமென்றால்...
மற்றவரை
அன்பு செய்வது
அதை விடக் கடினம்....

இனிய பாரதி.

புதன், 24 ஜனவரி, 2018

படித்ததில் ரசித்தது...

கிச்சுகிச்சு மூட்டும்  போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...

கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு

மொட்டமாடி தூக்கம் ..

திருப்தியான ஏப்பம்...

கூட்டமான பஸ்ல ,  நா அடுத்த stoppingல எறங்கிருவேன்,   நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...  

நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும்  குழந்தை..

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி.. ....

தாகம் தணித்த bore well  pipe தண்ணி ..

பத்து ரூவா change  குடுங்கனு,  கடைக்காரன்  மூஞ்சிய காட்டும்போது , எப்பவோ purse ல வெச்ச இத்து போன பத்து ரூவா...

Notebookன்  கடைசிப்பக்கம்...

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...

தூங்க தோள் கொடுத்த சக பயணி ....

பாய் வீட்டு பிரியாணி ..

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..

இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...

கோபம் மறந்த அப்பா..

சட்டையை ஆட்டய போடும் தம்பி..

அக்கறை காட்டும் அண்ணன்..

அதட்டும் அக்கா ...

மாட்டி விடாத தங்கை ..

சமையல் பழகும் மனைவி ...

Sareekku fleets எடுத்துவிடும் கணவன்..

இதுவரை பார்த்திராத  பேப்பர் போடும் சிறுவன்..

Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...

வழிவிடும் ஆட்டோ காரர்...
.

ஊசி போடாத doctor..

சில்லறை கேட்காத conductor..

சிரிக்கும்  police...

உப்பு தொட்ட மாங்கா..

அரை மூடி தேங்கா..

12மணி குல்பி..

Atm a / c ..

sunday சாலை ...

மரத்தடி அரட்டை...

தூங்க விடாத குறட்டை...

புது நோட் வாசம்..

மார்கழி மாசம்..

ஜன்னல் இருக்கை..

தும்மும் குழந்தை..

கோவில் தெப்பகுளம்..

Exhibition அப்பளம்.. ..

எதிரியின் பாராட்டு..

தோசைக்கல் சத்தம் ....

பிஞ்சு பாதம்..

இதை எழுதும் நான்..

படிக்கும் நீங்கள்..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

வாழ்க்கைய வெறுக்க  high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்

அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..

அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ...

water  packet  அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....

கவலை காலி ஆயிரும்
வாழ்க்கை ஜாலி ஆயிரும்
Face fresh ஆயிரும்

...SO...

வாங்க ... வாங்க..
வாழ்க்கைய ரசிங்க .. !                                                        😎😍🤓😊

செவ்வாய், 23 ஜனவரி, 2018

இனியவள் இனியவனுக்கு...

நீ பார்க்கும் நேரமெல்லாம்
நானும் உன்னைப் பார்க்க
ஆவலாய் என் முகம் நிமிரும் நேரத்தில்
வெட்கத் திரை
என் விழிகளை மூடுகின்றது!!!
அருகருகில் அமர்ந்து கொண்டு
உன் மூச்சுக் காற்று என்மீது
படும் போது ஏற்படும் உஷ்ணம்
என்னையறியாமல்
என் இதயக்கதவைத் திறந்து
என் காதலை உன்னிடம்
சொல்லத் துடிக்கின்றது!!!

இனியபாரதி.

திங்கள், 22 ஜனவரி, 2018

பஞ்சுமிட்டாய்...

பார்த்துப் பழகி
பன்னிரு திங்களும் ஆகவில்லை!
பேசிப் பழகி
பல வருடங்களும் ஆகவில்லை!
இருந்தும்
உனக்காகக்
காத்திருக்கிறேன்...
தினமும் மாலை 'வீட்டிற்கு வெளியில்'!!!
பஞ்சுமிட்டாய்காரருக்கு...

இனியபாரதி.

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

மழலை...

கருமை அறையிலிருந்து வெளிவந்த
விலைமதிப்பில்லா முத்து நீ!
உன் பிஞ்சு விரல் நகங்கள்
பளபளக்கும் பவளங்கள்!
உன் உள்ளங்கை ரேகைகள்
பாய்ந்தோடும் அருவிகள்!
உன் உள்ளங்கால்கள் இரண்டும்
தனித்திருக்கும் கண்டங்கள்!
உன் மேனி முழுதும்
ரோஜா இதழின் வாசம்!
கண்ணிரண்டும் கன்னமிடும்
பால் வண்ணக் கிண்ணங்கள்!!
உன் பேச்சில் மயங்க தவிக்கின்றேன்!
இனியபாரதி.

சனி, 20 ஜனவரி, 2018

என் சிறுகவிதைகள்...

பேச முடிந்தது...

என்னால் எது வேண்டுமானாலும்
பேச முடியும் என்பதற்காக
எதையும் பேசத் துடித்தால்
அதன் பெயர் துணிவு அல்ல... திமிர்!!!

சமத்துவம்...

சமத்துவம் என்பது ஜாதியிலோ மதத்திலோ மட்டும் அல்ல...
சில நேரங்களில்...
தம்பதிகளுக்கு இடையில்...
நண்பர்களுக்கு இடையில்...
உறவுகளுக்கு இடையில்...
அண்டைவீட்டாருக்கு இடையில்...
என்று 'சமத்துவம்'  தன் மேன்மையை உணர்த்துகிறது!!!

பிசாசு...

'பிசாசு குட்டி' என்று செல்லமாய் கொஞ்சும்
உன் இன்பக்குரல் கேட்கக் காத்திருக்கிறேன்!!!
உன் குட்டிப் பிசாசாய்!!!

இனியபாரதி.

வெள்ளி, 19 ஜனவரி, 2018

உன்னைப் பற்றி...

உன் அழகை வருணிக்க வார்த்தைகளைத்
தேடிக் கண்டுபிடிப்பதில்
என் நாட்கள் வீணாகிவிடுமோ
என்ற பயத்தில் தான்
உன்னைப் பற்றி எழுத யோசிக்கிறேன்!!
உன் அழகை இரசிக்கிறேன்!!!
இனியபாரதி. 

வியாழன், 18 ஜனவரி, 2018

மட்டும் அல்ல...

என்றும் அழகாய் இருப்பது
பூக்கள் மட்டும் அல்ல...
உன் புன்னகையும் தான்!!!
என்றும் அழியாமல் இருப்பது
கல்வெட்டுகள் மட்டும் அல்ல...
உன் நேர்மையும் தான்!!!
என்றும் சுவையைத் தருவது
உணவு வகைகள் மட்டும் அல்ல...
உன் இனிமையான பேச்சும் தான்!!!
என்றும் காத்திருக்க வைப்பது
காதல் மட்டும் அல்ல...
உன் மௌனமும் தான்!!!

இனியபாரதி.

புதன், 17 ஜனவரி, 2018

நானும் தான்...

அதிகமாக அன்பு செய்யப்பட
வேண்டும் என்று நீ
நினைக்கும் அந்த நொடி
சற்று யோசித்துப் பார்...
நானும் அதிகமாக
அன்பு செய்யப்பட
வேண்டும் என்று
அவளும் நினைக்கலாம் அல்லவா?

செவ்வாய், 16 ஜனவரி, 2018

கவலை மறக்கும்...

காதலித்து பார்த்தேன்...
கை பிடித்துப் பார்த்தேன்...
குழந்தைகளைப் பார்த்தேன்...
முதிர் வயதில் பார்த்தேன்...
தூக்கத்தைத் தவிர
கவலையை மறக்க வைக்கும்
நல்ல மருந்து இல்லை....

இனியபாரதி.

திங்கள், 15 ஜனவரி, 2018

அழகான வரிகள்....

வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே

ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நான் இழந்தேன்  
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி
வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

யானை பலம் இங்கே - சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்க்கை திரும்புதே

தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன்
காலமெனும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன்
மணல் ஊரும் மழையாய் மடி மீது விழ வா வா
அணை மீறும் புனலாய் மார் சாய்ந்து அழ வா

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

யானை பலம் இங்கே - சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்க்கை திரும்புதே..

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

நட்பு...

அன்பால் இணைந்து...
அன்பை பகிர்ந்து...
அன்பை நுகர்ந்து...
அன்பை பரப்பி...
அன்பினால் வாழும்
ஒரே உறவு....
நட்பு.

இனியபாரதி.

வெள்ளி, 12 ஜனவரி, 2018

உம் அழகான கண்கள் என்னை....

கேட்கும் போதே இனிமையைத் தரும்
இந்தப் பாடல்
நீ பாடிக் கேட்கும் போது
மனதில் ஒரு உற்சாகத்தைத் தருகிறது...

இனியபாரதி.

வியாழன், 11 ஜனவரி, 2018

என் நெஞ்சில்...

வானத்து நட்சத்திரம் கேட்கிறது!!!
உன் இனிய இரவை
அழகாய் ஆக்க
அம்சமாய் வானில் அமர்ந்திருக்கும்
என்னைச் சற்றும் பார்க்காமல்
உன் படுக்கைக்குச் செல்ல
எப்படி மனம் வந்தது?

இனியபாரதி.

புதன், 10 ஜனவரி, 2018

கனிவான உன் பேச்சு...

பல நேரங்களில் புன்னகைக்க மறந்த
அந்த நிமிடங்கள்
எனக்குள் தோன்றிய மனக்குழப்பங்கள்
என் வாழ்வை வாழ விடாமல்
தடுத்து
எனக்குள் இருந்த அந்த அழகான முகம்
வெளியே தெரியாமல்
மறைத்துவிட்டது!!!
என் அன்பால்
என் பாசத்தால்
என் பண்பால்
என் குணத்தால்
என் வார்த்தைகளால்
என் இனிய முகத்தால்
என் கனிவான பேச்சால்
மற்றவர் மனதைக் கட்டிப்போட
மறந்துவிட்டேன்!!!

இனியபாரதி.

திங்கள், 8 ஜனவரி, 2018

ஆட்சி நடத்த...

படிக்கப் பிடித்தது...

உன் அரசாங்க வீட்டில்
நானும் குடிபுகுந்து
மாமியார் நாத்தனார்
என்ற அமைச்சர்களைச்
சமாளித்து
உன் அரண்மணைக் கோவிலில்
உன்னைத் தரிசிக்க
எந்தச் சின்னத்திற்கு
வாக்களிக்க வேண்டுமோ?

இனியபாரதி.

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

உன்னைப் பற்றி எனக்கே...

உன்னைப் பற்றி எல்லாவற்றையும்
இந்த உலகில்
நான் மட்டுமே அறிந்திருக்கிறேன்
என்று நீ சொல்லக் கேட்கும்
அந்த ஒரு நொடிக்காய்
காத்திருந்த
அந்த அன்பு 'நிறைவு பெற்று விட்டது'.

இனியபாரதி.

வெள்ளி, 5 ஜனவரி, 2018

படித்ததில் பிடித்தது....

*ஒரு உடைந்த டீ கோப்பையும் கொஞ்சம் பக்குவமும்!*

ஒரு அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்திற்குப் போகிறார்கள்.

விருந்திற்கு முன்பாக தேநீர் வழங்கப்படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. அந்த சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதை பார்த்து, “அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது ?” என ஆதங்கமாகக் கேட்டார்.

“எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது”, என அப்பா வருத்தமான குரலில் சொல்லவே நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார்.

இதைக்கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான்… “உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்?”

“உண்மைதான். தேநீர் கோப்பையைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள். அவள் கவனமாக மேஜைமீது அதை வைக்கவில்லை. ஆகவே தவறி விழுந்து விட்டது. இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக செய்யாத குற்றத்தை நான் ஏற்றுக் கொண்டுவிடுவதே சரி என நினைத்தேன்.

ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கி சொல்லியிருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார். அதன்பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும். மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும். உறவுகளை உடைபடாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப்படவே செய்கின்றன”.

அப்பாவின் முப்பது ஆண்டுகால அனுபவம் தான் அவரை இந்த முடிவு எடுக்க செய்திருக்கிறது. வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே!

இதற்கு மாறாக சிலர் தங்களது சுயநலத்திற்காக குடும்ப உறவுகளை சிதைத்து கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள் .உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிது. காப்பாற்றிக்கொள்வது எளிதல்ல. வீட்டுக் கொடுத்தலும், புரிதலும், அரவணைத்துப் போதலும் அத்தியாவசமானது.
நாம் யார் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன.

சிறியதோ, பெரியதோ எப்படியிருப்பினும், ஒரு செயலின் பின்னுள்ள எண்ணம் முக்கியமானது. நற்செயல்கள் புரிவதற்கு நல்லெண்ணங்களே முதற்படி. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு வழிமுறைகளை நாம் அறிவோம். ஆனால் நல்லெண்ணெங்களை உருவாக்கிக் கொள்ளவும் கடை பிடிக்கவும் என்ன வழிமுறைகள் இருக்கின்றன? அதை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள்?

நல்ல எண்ணங்கள் மனதில் பதிய வேண்டுமென்று நம் முந்தைய தலைமுறை பெற்றோர்கள், ஒரே விஷயத்தை பலமுறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்போது மனதில் அது ஆழமாக பதிந்து விடும். நாம் எல்லோரும் அப்படியிருக்கிறோமா என்று நம்மையே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அடுத்தவருக்கு இடையூறு செய்கிறோம் என்று தெரிந்தும் அதை பற்றி துளிக்கூட குற்ற உணர்ச்சி கொள்ளாத இளம் தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.

மேலே ஒரு இடத்தில் குறிப்பிட்டது போல விட்டுக் கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலும், அரவணைத்துப்போக முயல்வதும் தான் உறவுகளை காப்பாற்ற வழிவகுக்கும். இச்செயல்களை அடுத்த தலைமுறையினர்க்கு புரிய வைப்பது நம் தலைமுறையின் கடமை ஆகும்..

வியாழன், 4 ஜனவரி, 2018

கண்ணீர்த் துளிகள்...

மற்றவர் உன்னை அடிமைப்படுத்தும் போது...
உன் பெற்றோர் உன்னை நம்பாத போது...
உன் உடன்பிறப்பு உன்னை ஏளனமாய் பேசும் போது...
நண்பர்கள் உன்னைக் கைவிடும் போது...
உறவுகள் உன்னை வெறுத்து ஒதுக்கும் போது...
பணத்திற்காக மற்றவர் கையை எதிர்பார்த்து நிற்கும் போது...
உன் சொந்த வீட்டில் உண்ண பலர் முகத்தைப் பார்க்கும் போது...
உன் அன்பை உணராமல் பலர் உன்னை கேவலப்படுத்தும் போது...
உன்னை எள்ளி நகையாடும் போது...
உன் அழகைப் பற்றிக் குறை கூறும் போது...
உன் வசதிக்குறைச்சலைச் சுட்டிக் காட்டும் போது...
உன் கள்ளம் கபடமற்ற உள்ளத்தை காயப்படுத்தும் போது...
எழும் கண்ணீர்த்துளிகளை வீணடித்து விடாதே!
சேர்த்து வைத்து அந்த வைராக்கியத்தை
உன் வாழ்வை முன்னேற்றுவதில் காட்டு!!!

இனியபாரதி.

செவ்வாய், 2 ஜனவரி, 2018

ஆண்டு முழுவதும் என்னை...

என்னைத் தாங்கி வழிநடத்தும் இறைவா!
உமக்கு நன்றி!
கோடான கோடி மக்கள் வாழும் இவ்வுலகில்
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும்
கிடைக்காத
அன்பான தாய்...
அரவணைக்கும் தந்தை...
பாசமழை பொழியும் தங்கை...
அறிவான குழந்தை...
என்று
என்னை இந்நாள் வரை
அழகான குடும்பத்திற்குள் வைத்துக் காத்ததற்காய்
உம்மைப் போற்றிப் புகழ்கிறேன்!
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும்
கஷ்டப்பட்டு
காயப்பட்டு
வேதனைப்பட்டு
வெட்கப்பட்டு
எங்களுக்காய் எல்லாவற்றையும் தாங்கி
உம் சார்பாக இருந்து என்னை காத்து வழிநடத்தி வருகின்ற
என் 'மம்மி, டாடிக்கு' என்றும் நல்ல மகளாக, மகனாக இருந்து
அவர்களைப் பார்த்துக் கொள்ள எனக்கு உடல், மன தைரியத்தைக் கொடுத்து
இந்த வருடம் முழுவதும் என்னை வழிநடத்த உம்மை வேண்டுகிறேன்!!!

இனியபாரதி.

திங்கள், 1 ஜனவரி, 2018

முதல் நாளின் வலைப்பதிவு!

இனிய புத்தாண்டு தின வாழ்த்துகளுடன் தொடங்குகிறேன்...
இனி வரும் நாட்களில்
ஒன்றை நான் கடைபிடித்தால்
எனக்கும் எந்தக் கவலையும் இல்லை!
மற்றவர்களிடமும் ஒருவரைப் பற்றிக்
குறை சொல்லத் தேவையும் இல்லை
என்று யோசித்தேன்!
அதுதான்....
'ஒருவரிடம் எனக்கு ஏதாவது
மனத்தாங்கல் வரும் போது
நேரடியாக அவரிடமே பேசிவிட வேண்டுமென்று'
தேவையில்லாமல் ஒருவரைப் பற்றி
மற்றவரிடம் குறைசொல்லி
அவர் மனதில் மற்றவரைப் பற்றிய தவறான
எண்ணங்களை விதைத்து...
இதுபோன்ற பல தேவையற்ற நடத்தைகளுக்கு
நான் காரணமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்!
முடிந்த அளவு பின்பற்றவும் ஆசைப்படுகிறேன்!

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு தின வாழ்த்துகளுடன்...

இனியபாரதி.