வியாழன், 30 ஏப்ரல், 2020

நாம்!!!

இப்படியும் ஒரு நாள் செல்லும்

என்று என்னையும் உணர வைத்த

என் இனியவளே!!!

நாம் அருகிருந்து 

செய்யும் ஒவ்வொரு நன்மையும்

நம்மை மேன்மேலும் 

வளம் பெறச் செய்யும்!!!

இனியபாரதி. 

புதன், 29 ஏப்ரல், 2020

அன்பு...

அன்பு என்ற வார்த்தையும்...

அன்பு என்ற வாழ்க்கையும்...

கடினம் தான்...


மூன்றெழுத்து என்றாலும் இதன் வலு அதிகம்....


கோபத்தைக் குறைக்க...

சண்டை போடாமல் இருக்க...

சந்தேகத்தைத் தவிர்க்க...

அன்பு செய்து வாழ...

கற்றுக் கொடுத்த அன்பு...

இனியபாரதி. 

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

நலம் வாழ...

இந்த நாட்களில் மிகவும் வேதனைப்பட வைக்கும் விசயம்...

குடும்பத்திற்காய் 
தெருத் தெருவாய் சுற்றி
தேநீர் விற்கும் நிலை
ஒரு அப்பாவிற்கு!!!

காரணம்...

அன்றாடக் கூலி வேலை...
இப்போது வேலையும் இல்லை...
பணமும் இல்லை...

குடும்பத்தைக் காப்பாற்ற பெற்றோர் எடுக்கும் சில முடிவுகள்!!!

நாம் நன்றாய் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்பதை இப்போதாவது உணருங்கள் பிள்ளைகளே!!!


இனியபாரதி.  

திங்கள், 27 ஏப்ரல், 2020

தாமரை நிறம்...

அவளின் நிறம் என்னவென்று
என்னால் இன்றுதான்
வரையறை செய்ய முடிகிறது...

அவள் தாமரை மலரின் இதழ் நிறத்தை ஒத்திருப்பாள்..

முழு மலரான அவளைத் தாங்கும் பாதங்கள்
பச்சை பசேலென எங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்கும்...

இனியபாரதி. 

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

கனத்த இதயம்...

இதயத்தின் அளவு நம் ஒரு கைப்பிடியாம்...

இந்த ஒரு கைப்பிடி அளவுள்ள

இதயத்தில்

எத்தனை எத்தனை எண்ணங்கள்???

மனப் போராட்டங்கள்???

கசப்புகள்???

சண்டைகள்???

முரண்பாடுகள்???

இதை எல்லாம் நினைக்காமல் இருக்க

இதயம் இல்லாமல் இருந்தால் தான் முடியும் போல!!!

அல்லது

குட்டி இதயத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விடலாம்...

இனி பிரச்சனையே வராது!!!


இனியபாரதி. 

சனி, 25 ஏப்ரல், 2020

மகிழ்ந்து களிகூரு...

இன்று எனக்காக கொடுக்கப்பட்ட வசனம்... 

யோவேல் 2:21

"ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்."

ஆம்...

அவர் என்றும் நன்மையான காரியங்களை மட்டுமே தன்னை நம்பி இருக்கும் பிள்ளைகளுக்குச் செய்வார்.... 


இன்று எனக்கு....

நாளை உனக்கு....

கஷ்டப்பட்டாலும் கைவிடாமல் காக்கிறார்!!!

இனியபாரதி. 

தலை ஆகும் நேரம்...

நீ வாலாகாமல் தலையாக

மாறப்போகும் நேரம் 

வெகு தொலைவில் இல்லை...

உன் விடாமுயற்சி

உன் வெற்றிக்கு வித்திடும்!!

அத்தோடு நின்று விடாதே!

உன் எல்லை வானத்தைப் போன்றது!

கற்றுக் கொண்டே இரு...

கற்றுக் கொடுத்துக் கொண்டே இரு...

வாழ்த்துகள் பாரதி...

இனியபாரதி. 

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

தாழ்ச்சி, தேடல், மனம் மாறுதல்...

தாழ்ச்சி

மற்றவர்களை விட நான் தான் உயர்ந்தவன், எனக்குத் தான் எல்லாம் தெரியும், நான் சொல்வதை மட்டும் கேளுங்கள், என்னிடம் தான் எல்லாம் உள்ளன என்ற தற்ப்பெருமையை அகற்றுதல்....



தேடல்

நான் போலியானவர்களுக்கும், போலிக்கும் இடம் கொடுக்காமல், மெய்யான ஒன்றிற்குள் மட்டும் என் மனத்தைச் செலுத்துதல், அதன் மீது மட்டும் நாட்டம் கொள்ளுதல்...


மனம் மாறுதல்

என் இயலாமையால் நான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி, அவற்றை விட்டுவிட என் மனதுள் ஒரு தீர்மானம் எடுத்து, அதன்படி வாழ்தல்...

கற்றுத் தந்த ஐயனுக்கு நன்றி!!!


இனியபாரதி. 

கனிவு மனம்...

அவள் மனம் மிகவும் கனிவுடையது...

பூ போல் மென்மையானவள்...

தினமும் குலுங்கிக் கொண்டிருக்கும் அவள் கிளைகள்..

அவள் வேரின் மணம் விலை மதிப்பில்லா வாசனைத் திரவியம்...

அவளின் ஒவ்வொரு உறுப்பும் ஒருவிதம்...

கற்றுக்கொள்ள அவளிடம் பல...

அவளே என்றும் எனக்கானவள்...

இனியபாரதி. 

வியாழன், 23 ஏப்ரல், 2020

இளைப்பாறுதல்‌ தரும் அருமருந்து...

தவிப்புகள் பல இருக்கலாம்

நீ மகிழ்ந்திருக்க ஏதாவது ஒரு வழி இருக்கும்

உன்னைச் சுற்றித் தேடும் மகிழ்ச்சியை 

உன்னில் தேடு

உன்னை விட வேதனையுறும் ஒருவரைப் பார்க்கும் போது

உன் வேதனை ஒன்றும் இல்லை என்று தோன்றும்

உன் மகிழ்ச்சியை உன்னிடம் மட்டும் தேடிப் பெற்றுக் கொள்!!!

இனியபாரதி. 

புதன், 22 ஏப்ரல், 2020

சமுத்திரக் கனியாகு...

எங்கிருந்தோ பிறக்கும் ஊற்றுகள்

நதி கடந்து 

மலை கடந்து

நிலம் கடந்து

தான் சந்திக்கும் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்திச் செல்கின்றன...

அவை பிறப்பு ஒரு சரித்திரம் அல்ல...

அவற்றின் முடிவோ 
அந்தச் சமுத்திரத்தையே பெருமை கொள்ளச் செய்கின்றன!!!

அப்படியே உன் வாழ்வும் அமையட்டும்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மன்னிப்பு, ஒப்புரவு மற்றும் புறக்கணிப்பு

இன்று எப்போதும் போல் நாள் சென்றாலும்... நான் கற்றுக் கொண்ட மூன்று விசயங்கள்...

மன்னிப்பு

ஒப்புரவு

புறக்கணிப்பு

1. நமக்குத் துரோகம் செய்பவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வது.

2. மன்னித்த நம் உறவுகளுடன் ஒப்புரவு ஆவது.

3. நம்மைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசும் போது அவற்றைப் புறக்கணிப்பது.

நன்றி ஐயா!!!


இனியபாரதி. 

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கடல் கடந்து...

கடல் கடந்து வாணிபம் செய்து
பொருள் ஈட்டினான்
அன்றைய தமிழன்...

கடல் கடந்து காதல் செய்து
பொருள் ஈட்டுகிறான்
இன்றைய தமிழன்...

இனியபாரதி. 

சனி, 18 ஏப்ரல், 2020

கருப்பு...

எனக்கும் உனக்கும் பிடித்த ஒரே நிறம்...

நம் அன்பின் அடையாளம்...


இனியபாரதி. 

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

கரையும் நெருப்பு...

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு

கொஞ்ச நேரத்தில்

சுடரொளியை இழந்து விடுகிறது...


அப்படித்தான்...

இப்போது பிரகாசமாய் இருக்கும்

உன் காதலும்

இருக்கும்!!!

அதனால் இப்போதே உசாராகிக் கொள்!!!

இனியபாரதி. 




வியாழன், 16 ஏப்ரல், 2020

அடிக்கடித் திட்டு வாங்கும் அன்பு...

சில நேரங்களில நமக்குப் பிடிக்காத உறவு

பல நேரங்களில் மிகவும் பிடித்த உறவு

அடிக்கடி சண்டைகள் வரும்

நாம் தான் அவரைத் திட்டுவோம்

அவர் வாயில் இருந்து வருவதெல்லாம்

"என் மகன்... என் மகன்..."

பல நேரங்களில் அவ்வன்பை உணராத நான்

கயப்படுத்தினேன்...

மருந்தாக ஒருநாளும் இருந்ததில்லை...

ஆனால்!

எனக்கு ஒரு தலை வலி என்றால்

உடனே மருந்தகம் தேடி ஓடுவது

அவரது கால்கள் மட்டுமே!!!

Love you daddy!!!


இனியபாரதி. 

இதற்காகக் கூட இருக்கலாம்...

ஊரடங்கில் அடங்கிக் கிடக்கும் நம் நட்புகள் 
இன்று வீட்டிற்குள் அனுபவிப்பது
சற்று கவலை தரக்கூடியது தான் என்றாலும்...
சில சுவாரஸ்யங்கள் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன...

கூடிப் பேசிச் சிரிப்பது
விளையாடுவது
சேர்ந்து தண்ணீர் பிடிப்பது
கடைக்குச் செல்வது
ஒன்றாக உறங்குவது

என்று

பல பல அடுக்கலாம்...

நன்றி அரசே!!!

இனியபாரதி. 

புதன், 15 ஏப்ரல், 2020

ஏமாற்றும் அன்பு...

அவள் புரிந்து கொள்வாள் என்று அவனும்...

அவன் புரிந்து கொள்வான் என்று அவளும்...

சண்டையிட்டுப் பிரிந்து இருக்கும் போது தான் தெரியும்!!!

அவளும் அவனைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை...

அவனும் அவளைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று....

"அன்பு அன்பு" என்று சொல்லி
கடைசியில் இருவரும் ஏமாந்தது தான் மிச்சம்!!!

இனியபாரதி. 


செவ்வாய், 14 ஏப்ரல், 2020

ஆதிக்கம்...

அவர்கள் ஆதிக்கம் செய்வதையும் விட மாட்டேன்...

என் சுயமதிப்பையும் விட்டுத் தர மாட்டேன்...

உன்னில் நான் சிறிதளவும் சளைத்தவன் கிடையாது...

காலம் மாறும்....

உன்னைப் போல்...

ஏன் உன்னை விட அதிகமாய் என்னால் செய்ய முடியும்!!!

இனியபாரதி.

திங்கள், 13 ஏப்ரல், 2020

கொடுக்க நினைக்க...

கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் போது கொடுக்க முடியாமல் போவதும்...

கொடுக்க வேண்டாம் என்று நினைக்கும் போது கொடுக்க வேண்டிய கட்டாயம் வருவதும்...

இறைவன் செயல் தான் போல!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

புகைப்படம்...

பல தேடல்களுக்குப் பின்
எனக்குக் கிடைத்த
அவளது புகைப்படம்
என்னைக் கண்ணசைக்க முடியாமல்
செய்துவிட்டது...


இனியபாரதி. 

சனி, 11 ஏப்ரல், 2020

சந்தோச ஓலங்கள்...

நாட்டில்

தெருவில்

வீட்டில்

எல்லோரும் மகிழ்ச்சியால் நிறைந்து

களித்திருக்கும் போது...

உன் காதுக்குள் மட்டும்

மரண ஓலத்தின் சத்தம் கேட்டால்

உன் காதில் கோளாறு என்று அர்த்தம்!!!😜


இனியபாரதி. 

புனித வெள்ளி...

அவருடைய பாடுகள்
நம் கண் முன்னால்...

கடந்து வந்த பாதைகள்
கடக்காமல் நிற்கும் கால்கள்...

என் பாவம் போக்க
அவர் மரணம் ஏற்றார்...

நான் நலமாய் இருக்க
அவர் நலம் இழந்தவர்...

என் இறைவன் ஒருவருக்கே என்றும் புகழ்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

பரியேறும் பெருமாள்

சமீபத்தில்.... இரசித்துப் பார்த்த ஒரு படம்....
வித்தியாசமான கதைக்களம்... இதுவரை யாரும் எடுத்துச் சொல்லாத பல  சிறப்பான காட்சிகள் இடம் பெற்ற படம்...
இயல்பான வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அப்படியே படமாக்கப்பட்டிருந்தன.... 


காதல் என்று சொல்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவை சிறப்பாக வருணித்திருக்கிறார் இயக்குனர். 


ஒரு அநாகரீகப் பாடல் கூட இல்லாத படம்... இந்தப் படம் வந்து பல மாதங்கள் ஆகின்றன போல... இருந்தாலும் இப்போது தான் நான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...


ஆச்சரியப்பட்ட சில விசயங்கள்....

பெற்றோர் எப்படி இருந்தாலும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது.

அன்பை இப்படி எல்லாம் காட்ட முடியும் என்று உணர்த்துவது.

மொத்தத்தில் எல்லாம் அருமை...

நன்றி இயக்குனர் ஐயா!!!

இனியபாரதி. 


வியாழன், 9 ஏப்ரல், 2020

Classwork or Rough note book????

நான் என்ன நீ பத்திரமாக வைத்துக் கொள்ளும் Classwork note ah?
உபயோகித்து விட்டு தூக்கி எறியும் Rough note ah?

நான் உனக்கு Rough Note ஆக இருந்தால் இப்போதே சொல்லிவிடு!!!

நானும் என் தன்மையை மாற்றிக் கொள்கிறேன்...

இனியபாரதி. 

புதன், 8 ஏப்ரல், 2020

தஞ்சம்...

அவன் கருணை 
நம்மை என்றும் வழிநடத்தும்
என்ற நம்பிக்கையில் தான்
நம் வாழ்வில்
ஒவ்வொரு நொடியும்
கடக்கின்றன....

தஞ்சம் புகுவோம் அவன் அடியில்...

இனியபாரதி.
 

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

ஆர்வம் குறைய...

ஆர்வம் குறைய என்ன காரணம்?

இறையே...

உன் கருணை என் பக்கம் திரும்பாததாலா?

நான் உன் பின்னே வருவதாலா?


காரணம் கூறு!!!

அறிய முடியாமல் தவிக்கிறேன்...


இனியபாரதி. 



திங்கள், 6 ஏப்ரல், 2020

கலப்படம் இல்லா...

கலப்படம் இல்லா அன்பில்
நாளும் நனைந்து
அவளது அழகிய ஈரத்தை
அள்ளி இரசிப்பேன்....


இனியபாரதி. 

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

என் தேவை என்ன என்று...

எனக்குத் தேவை என்ன என்று
அவளும்
அவனும்
துடிக்கும் போது தான் புரிகிறது

தாய் தந்தை பாசம்!!!


இனியபாரதி. 

சனி, 4 ஏப்ரல், 2020

ஆண்டவா!!

நீர் எனக்குக் கொடுத்த 
இந்தக் குறுகிய வாழ்க்கையில்

நான் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் பலன் தந்து...

என் தடுமாற்றத்தில் உடன் இருந்து...

என் தவிப்புகளில் தாகம் தீர்த்து...

என் காயங்களுக்கு மருந்திட்டு...

என்னை வழிநடத்தம்
உமக்கு நன்றி!!!

இனியபாரதி. 

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

கனவே...

நம் வாழ்வில் நடக்கும்
நமக்குப் பிடிக்காத விசயங்கள் எல்லாம்
ஒரு கனவாய் இருக்கக் கூடாதா என்ற எண்ணம்
எல்லோருக்கும் உண்டு...

நானும் அதைப் போலத் தான்...

என் ஒவ்வொரு துன்பமும்
என் கனவாய் இருக்க
என் இறைவனை வேண்டுகிறேன்....


இனியபாரதி.

தற்காப்பா? தற்கையளிப்பா?

நான் வீட்டினுள் அமர முடியாமல்
வெளியே செல்கிறேன்...

வெளியே சென்ற நான்
என் இஷ்டப்படி அலைந்து திரிகிறேன்...

அலைந்து திரிந்த நான்
அப்படியே வீட்டிற்குள் நுழைகிறேன்...

வீட்டிற்குள் நுழைந்த நான் 
அனைவரையும் தொடுகிறேன்...

என் குழந்தைகளைக் கொஞ்சி விளையாடுகிறேன்...

அத்தோடு என் வீட்டுப் பொருட்களையும் தொடுகிறேன்...

நான் என் குடும்பத்திற்குக் கொடுக்கப்போ வது
மிகப் பெரிய பரிசு தான்!!
 "கொரோனா" என்ற மரணம்...

சிந்திப்போம்!

செயல்படுவோம்!!!

இனியபாரதி. 

புதன், 1 ஏப்ரல், 2020

ஏமாற்றும் ஏப்ரல்...

நாட்டில் நடக்கும் பல வகைப்
பிரச்சினைகளைப் பார்க்கும் போது...
என் பிரச்சினை அவ்வளவு ஒன்றும்
பெரிதல்ல என்றே தோன்றுகிறது...

நான் நானாக இருக்கிறேன்...
இருப்பேன்...


தீர்வைத் தருபவன் அவன்...

இனியபாரதி.