திங்கள், 11 பிப்ரவரி, 2019

எங்கே இருந்தாய்???

உன்னைப் பற்றிக் கவலை கொள்ளாமல்
நானாக சுற்றித் திரிந்த நாட்களை
என் மனக் கண்முன் கொண்டு வந்து
உன் கஷ்டங்களை எல்லாம்
நினைத்துப் பார்க்கிறேன்...

நான் இல்லாமல் நீ பட்ட துன்பங்கள்...
நான் எங்கே இருக்கிறேன் என்று
நீ அலைந்த தெருக்கள்...
உன் அன்பை நான் உணரச் செய்து
என்னை மறுபடியும் உன்னுடன் சேர்த்து வைத்து விட்டது...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

ஒருவரிடம் நிலையான அன்பு ஆனது தமக்கு ஏற்படும் துன்பத்தை மனத்தில் நினைக்க தோன்றது அதன் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக.....