நலம் தரும் நன்மருந்தாய்
அவள் இருப்பாள் என்று எண்ணி
என் காயங்களை அவளிடம்
காட்டியது என் தவறு தான்...
காயத்தில் எல்லாம்
தீயைப் பற்ற வைத்துச் சென்றுவிட்டாள்...
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நலம் தரும் நன்மருந்தாய்
அவள் இருப்பாள் என்று எண்ணி
என் காயங்களை அவளிடம்
காட்டியது என் தவறு தான்...
காயத்தில் எல்லாம்
தீயைப் பற்ற வைத்துச் சென்றுவிட்டாள்...
இனியபாரதி.
உள்ளங்கள் பிரிந்திருக்கும் போது
உடல் அருகில் இருந்தால் கூட
தனிமையைத் தான் உணரும்....
என் உடல் உன் அருகில்...
உள்ளம் ஏதோ ஒரு நினைவில்...
இந்த ஒரு நிலை நான் தேடிக் கண்டுகொண்டது...
காத்திருப்பேன் என் நிலை மாறும்வரை...
இனியபாரதி.
தேடல் இல்லாமல் கிடைத்துவிடும்
எந்த ஒரு பொருளோ நபரோ தன் மதிப்பை இழந்து விடுவது உண்மை...
அப்படி இல்லாமல்
தேடித் தேடிக் கிடைத்த பொருளை
பத்திரமாக வைத்திருக்கத் தெரியாதவர்கள் இருப்பதும் உண்மை ...
தேடலும் தேடலில் வரும் வலியும் உண்மை தான்...
காத்திருப்பேன்...
என் தேடலின் அருமை புரியும் வரை...
இனியபாரதி.
காதலிப்பதில் தவரொன்றும் இல்லை தான்...
ஆனால்...
அதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன...
பள்ளிபருவம் காதலிப்பதற்கு அல்ல...
என்ன ஒரு முதிர்ச்சி வந்திருக்கும் இந்த வயதில்??
கல்லூரிப் பருவமும் காதலிப்பதற்கு அல்ல...
நல்ல நண்பர்களைக் கண்டறிய ஏற்ற காலம்!!!
அதன்பின்
நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவும்
ஒவ்வொரு பாடம்...
அந்த வயதில் செய் உன் காதலை...
அதுவரை உன் மூலை முடுக்கு காதலை
பெண்களிடம் காட்டி
இம்சை செய்யாதே!!!
இனியபாரதி.
உன்னைப் பற்றிக் கவலை கொள்ளாமல்
நானாக சுற்றித் திரிந்த நாட்களை
என் மனக் கண்முன் கொண்டு வந்து
உன் கஷ்டங்களை எல்லாம்
நினைத்துப் பார்க்கிறேன்...
நான் இல்லாமல் நீ பட்ட துன்பங்கள்...
நான் எங்கே இருக்கிறேன் என்று
நீ அலைந்த தெருக்கள்...
உன் அன்பை நான் உணரச் செய்து
என்னை மறுபடியும் உன்னுடன் சேர்த்து வைத்து விட்டது...
இனியபாரதி.
எனக்கான விடியல் என்று என்று ஏங்கும் ஒவ்வொரு மனமும்...
தளராமல் முயற்சி செய்வதைத் தவிர வேறு வழி இல்லை...
நம் தன்னம்பிக்கை வாழ்வை முன்னேற்றும்....
இனியபாரதி.
கவலை கொள்வதால்
கூடப் போவது ஒரு முழம் கூட இல்லை...
குறையப் போவது நம் நிம்மதியும் உடல் நலனும் தான்...
இதை மனதில் வைத்து கவலை கொள்வதைக் குறைப்போம்...
இனியபாரதி.
அடிக்கடி எழுதிப் பழக்கம் இல்லை என்றாலும்...
என்று தொட்டாலும் எழுத்து அழகாய் வருவது தான் ஆச்சர்யம்..
உன் அன்பைப் போல...
இனியபாரதி.
ஒருபோதும் சண்டை இல்லாமல்
காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில்
நீ இருந்துவிடலாம்...
சில நேரங்களில் சண்டைகள் கூட
அன்பின் இலக்கணமாய் இருப்பது
உனக்கெப்போது புரியும் என்று
நான் கூட தவிக்கிறேன்...
இனியபாரதி.
புல்லில் பனித்துளியும்
வானத்தில் கருமேகமும்
செடியில் மலரும்
கருமையில் வெண்மையும்
அழகில் கர்வமும்
அவளில் நானும்
என்றும் அழகு தான்...
இனியபாரதி.
அவளின் இதயம் துடிக்கும் படபட என்று
என்னைக் காணும் பொழுதெல்லாம்...
என் மனம் அலைபாய்கிறது
அவளின் இருவிழிகளைக் காணும் போது...
இனியபாரதி.
அவளுக்கு மட்டும் நான் சொந்தம் என்று நினைக்கும் அந்த நேரம்
என் வாழ்வில் நுழையும் ஒவ்வொரு பெண்ணும்
எனக்கு இராட்சசியாகவே தெரிகிறாள்...
இனியபாரதி.
அவள் மனதின் எண்ணங்களைக்
கண்டுபிடிக்க எனக்கு ஆகும் காலம்
ஒரு யுகம் என்றாலும்
அதற்காகக் காத்திருக்கும்
என் 'காதல் காலம்'
இனியபாரதி.
என்றாவது ஒருநாள் விடியும் என்ற எண்ணம்
எனக்கு மட்டும் அல்ல...
எல்லோருக்கும் இருப்பதால் தான்
இன்று வரை நம் வாழ்க்கை
நகர்ந்துகொண்டு இருக்கின்றது...
இனியபாரதி.
அந்த நேரத்தில் அவளின் மனத்துடிப்பை அறிந்தபின்னும்
ஆறுதல் கூறாமல் இருக்க முடியவில்லை என்று எண்ணி தான்
அவளை அணைத்துக் கொள்ள ஆசைப்பட்டேன்....
இனியபாரதி.