திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கருவிழியும் கதை பேசும்...

அவள் சொல்லைக் கேட்டுக் கொண்டே

அவள் கண்கள் என்னை நோக்கும் அழகை

நான் ரசிக்கும் போது

என்னுள் எழும் சிலிர்ப்பு

என்றும் அடங்காது...

அவள் கண்களே கதை பேசும்....

இனியபாரதி. 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

என்ன நிறமோ?

அவளுக்குப் பிடித்ததெல்லாம்
கருமை நிறம் என்பதால்
எல்லாவற்றையும் கருப்பாய் மாற்றினேன்...

என் இதயத்தையும் சேர்த்து...

இனியபாரதி. 

சனி, 29 ஆகஸ்ட், 2020

அந்தக் குழி...

அந்தக் கன்னக் குழியில் விழுந்த நான்

எழவே இல்லை...

காரணம்...

அது ஆழமான படுகுழி...

இனியபாரதி. 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

காரணமறியா புன்னகை....

வழக்கம் போல் எல்லாம் நடக்கும்...

ஆனால்...

பேச்சில் ஒரு மாற்றம்...

நடையில் ஒரு மாற்றம்...

சிந்தனையில் ஒரு மாற்றம்...

அழகில் ஒரு மாற்றம்...

சிரிப்பில் ஒரு மாற்றம்....

இது தான் காதல் போல...

இனியபாரதி. 

புதன், 26 ஆகஸ்ட், 2020

கனவு கலையாமல் இருக்க...

அவள் கனவு கண்டாள்...

அவன் அதை நிறைவேற்றினான்...

கனவு காண்பதும் சுகம்...

அதை நிறைவேற்றி வைப்பது அதைவிட சுகம்...

ஒருவேளை...

காலம் மாறலாம்...

எல்லாம் மாறலாம்...

அவள் அன்பு மட்டும் என்றும் மாறாது...

இனியபாரதி. 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

எதிர்நோக்கு...

நம்பிக்கை 

எதிர்நோக்கு

என்று பல வார்த்தைகள்

நம் காதில் விழுந்தாலும்

ஏதோ ஒரு திசையை நோக்கி

நம் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது

என்று நினைக்கும் போது

சற்று வருத்தமாகத் தான் உள்ளது...

இனியபாரதி. 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

காலம் ஒரு கோலம்...

எப்படியோ கடத்தி விடலாம் 
என்று நினைத்தாலும்
நான் இப்படித்தான் நகர்வேன் என்று
அன்னநடை போடும்
இந்தக் காலம்
ஏன் சித்திரவதை செய்கிறது
என்று தெரியவில்லை...

இனியபாரதி. 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

அவசியம் எனில்...

மிகவும் அவசியம் எனில்
என்னை அழை...

நான் உனக்காக நேரம் செலவழிக்க அல்ல...
என் வாழ்க்கையை செலவழிக்க...

இனியபாரதி. 

சனி, 22 ஆகஸ்ட், 2020

கிளிப் பிள்ளை...

சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை...

அது எப்படி?

தனக்குப் பிடித்தவர் எது சொன்னாலும் செய்வதைப் போல்...

இனியபாரதி. 

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

அவன் மட்டும் போதுமே...

ஒன்றும் இல்லை என்று சொன்னாலும்
அவள் முகத்தைப் பார்த்தே
அவள் மனம் அறியும் அவன்
அவளை எப்போதும் காயப்படுத்தாமல்
இருக்கத் தான் நினைப்பான்!!!

இனியபாரதி. 

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

என்ன என்று?

யாருக்கும் சந்தேகம் வராமல்

ஒருவரை அன்பு செய்வதும்...

யாரும் அறியாத படி

ஒருவரை அன்பு செய்வதும்...

யார் முன்பும் அன்பு செய்வதைக்

காட்டிக் கொள்ளாமல் இருப்பதும்...

யாரை அன்பு செய்கிறோம் என்பதையே

சில நேரங்களில் மறந்து விடுவதும்...

மனித குணம் என்று தான் நினைக்கிறேன்...

இனியபாரதி. 

புதன், 19 ஆகஸ்ட், 2020

கவிதை சொல்லும் கண்கள்...

கண்கள் மட்டும் பேசும் மொழி காதல்... 

அது யாரோ இருவருக்கு வருவது அல்ல...

ஜென்மம் பல கடந்தாலும் 
அந்த ஒரு உணர்வு வரும் இருவர் மட்டுமே
என்றும் சேர்ந்து வாழ முடியும்...

இனியபாரதி.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கொஞ்சம் பொறு...

கொஞ்சம் பொறு...

கொஞ்சம் பொறு...

என்று எல்லாவற்றிலும் பொறுமையாய் இருந்தது போதும்...

உனக்கான நேரம் இது...

புகுந்து விளையாடு...

இனியபாரதி. 

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

சாபம் பலிக்குமா?

பிறர் நமக்கு இட்ட சாபம் பலிக்காது என்று நாமே முடிவு செய்துவிடுகிறோம்....

காரணங்கள் கூட பல கூறலாம்...

என்னைச் சொல்ல அவன் என்ன யோக்கியனா?

நான் நல்லவன்...எனக்கு எந்த சாபமும் பலிக்காது...

இவை பொய்யோ உண்மையோ... 

சில நேரங்களில் அந்த அயோக்கியன்கள் கூறும் வார்த்தைகள் கூட பலித்து விடுகின்றன...

இனியபாரதி. 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தனிமைக் காதலி...

செல்லும் இடத்திற்கு எல்லாம்

எல்லோரையும் அழைத்துச் செல்ல முடியாது.

ஏதோ ஒரு இடத்தில் அவர் நம்மைப் பிரிந்து தான் ஆக வேண்டும்...

அப்படி ஒரு சூழலில்,
நாம் தனிமைப்படுத்தப்படும் உணர்வு
மேலோங்கி நிற்கும்...

அதற்கு... 
தனிமையைப் பழக்கி வைத்துக்கொள்வது நல்லது...

இனியபாரதி. 

சனி, 15 ஆகஸ்ட், 2020

உறக்கம் தேவையோ?

இன்றைய நாட்களில் பெரும் கொடுமையாய் இருப்பது

இந்த உறக்கம் இன்மை தான்...

ஆனால்...

இரவு நேர விழிப்புகள் மனதிற்கு ஒரு அமைதியையே தருகின்றன...

பின் ஏன் இதை யாரும் விரும்புவதில்லை???

மெளனமான நேரம்...

பலவற்றை எண்ணி எண்ணி குழம்பிய
மனதை ஆற்றவே இந்த இரவு நேரம்... 

சகா பாடலுடன்...

இனியபாரதி. 

சமையல் ஒரு கலை அல்ல... வரம்...

யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதைப் போல்...

யார் வேண்டுமானாலும் சமைக்கலாம் என்ற என் எண்ணம் தவறானது...

அது ஒரு வரம்...

என் அம்மாவின் சமையல் கண்டு வியந்ததுண்டு...

கேரளாவின்  பல வகை உணவுவகைகளின் பெயர்களைக் கேட்டே வியந்ததுண்டு...

இவை எல்லாம் சுலபமாக எனக்கும் வந்து விடும் என்றிருந்தேன்...

ஆனால்... இந்த வரத்தைப் பெற
பொறுமை மிகவும் அவசியம் போல!!!

சரிபடுமா? 

மனைவிகளின் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் போல???

இனியபாரதி. 

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

காதல் மட்டுமே...

தன் செல்லம்மா மீது மட்டுமே

காதல் கொண்டு

தன் மனைவி, தன் பிள்ளைகள்

என்று நினைத்திருந்தால்

பாரதி எப்படி சுதந்திர உணர்ச்சி பொங்கும்

பாடல்களைப் பாடி இருப்பார்??

அன்பு.. அருகிருந்து கொடுப்பதில்லை என்று நினைத்துவிட்டான் போல!!!

மேலே சென்றதும் வருந்தி இருப்பான்...
எதையும் அனுபவிக்காமல் 
வந்துவிட்டேனே என்று!!!

இனியபாரதி. 

திருப்தியில்...

கடற்கரை ஓரம்

அவர்களின் அன்புப் பரிமாற்றத்தை

இரசித்தபடி

தூங்கச் சென்றது

நடுநிசி நிலா!!!


இனியபாரதி. 


வியாழன், 13 ஆகஸ்ட், 2020

இருக்கலாம்...

வைரமாகவே இருந்தாலும்

ஜொலிப்பதும்

ஜொலிக்காமல் இருப்பதும்

வாங்கித்தந்தவரின்

மனத்தைப் பொருத்துத் தான்...

இனியபாரதி. 

ஊதா...

ஊதா நிறம் எனக்குப் பிடிக்கும்...

காரணம் உனக்குத் தெரியாது...

ஏனென்றால்

நீ இரசித்தது நிறத்தை அல்ல....

அதற்குள் ஒளிந்திருந்த மகரந்தத்தை!!!

இனியபாரதி.


அழகிய இம்சை...

கொட்டிக் கொண்டிருக்கும் 

மழையின் சாரல்

முழுதாய் முகத்தில் படவில்லை என்றாலும்

அதன் ஈரப்பதம் 

அவள் முகத்தில் ஏற்படுத்திய

சிறு சிறு திவலைகள்

அவள் முகத்தை முத்தமிடவே அழைக்கின்றன!!!

இனியபாரதி. 

புதன், 12 ஆகஸ்ட், 2020

யார் குற்றம்?

தென்றல் காற்றடித்து வலிக்கிறதென்றால்

குழந்தையின் குற்றமா?

தென்றலின் குற்றமா?

இனியபாரதி. 

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

இனி இடமில்லை...

என் வழிப் பயணத்தில்
நேராக நான் சென்று கொண்டிருக்கும் போது...
என்னை வழியிலேயே நிறுத்துபவரோ,
என் மீது மோதும்படி வருபவரோ
என் இலக்கு அல்ல...

என் குறிக்கோள்
என் லட்சியம்
என் நினைப்பு
எல்லாமே
நேராக இருந்தால் 
நான் அடைய வேண்டிய இடத்தை
அவரே காட்டுவார்!!!

இனியபாரதி. 

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

எதிர்பார்ப்பு...

களைத்து ஓய்ந்தவள்

எதிர்பார்ப்பு

அவளின் ஓய்விற்காக அல்ல...

அவளின் அடுத்த முயற்சிக்காக!!!

இனியபாரதி.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

பரவசம் பலவிதம்....

நான் ஆரம்பத்தில் இருந்து எழுதியவற்றை வாசித்துக் கொண்டிருந்தேன்... இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள 'பரவசம்' கவிதை ஏப்ரல் 2014 அன்று நான் எழுதியது... 

நான் எழுதியதில் இரசித்தது... 


உங்களுக்காக... 


பரவசம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பார்த்தாலே பரவசம் படம் தான் உடனே ஞாபகத்திற்கு வரும். அந்தப்படத்தில் நாயகனும், நாயகியும் பார்வையாலேயே பேசிக்கொள்வார்கள்.  இதனால் தான் படத்தின் தலைப்பு, "பார்த்தாலே பரவசம்".

சிலருக்கு சிலரது குரலைக் கேட்டால் பரவசம். 

சிலருக்கு மழையில் நனைந்தால் பரவசம்.

சிலருக்கு ரயிலில் பயணம் செய்தால் பரவசம்.

சிலருக்கு சன்னல் ஓரம் பரவசம்.

சிலருக்கு காலைத் தூக்கம் பரவசம்.

சிலருக்கு மாலை நடைப்பயிற்சி பரவசம்.

சிலருக்கு வானவில் பரவசம்.

சிலருக்கு பாடும் போது பரவசம்.

சிலருக்கு ஆடும் போது பரவசம்.

சிலருக்கு சிரிக்கும் போது பரவசம்.

சிலருக்கு காதலி/காதலனைப் பார்க்கும் போது பரவசம்.

சிலருக்கு பிரிந்து சென்ற மகனை/மகளைப் பார்க்கும் போது பரவசம்.

சிலருக்கு இரவில் நிலவைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்குப் பணத்தைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்கு நகைகளைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்குப் பாடல் கேட்டால் பரவசம்.

சிலருக்கு பாடம் படித்து முடித்ததில் பரவசம்.

சிலருக்குத் தேர்வு முடிந்ததில் பரவசம்.

சிலருக்குத் தோழனை/தோழியை நீண்ட நாள் கழித்து சந்தித்ததில் பரவசம்.

சிலருக்குப் புத்தகம் வாங்குவதில் பரவசம்.

சிலருக்கு காதலைச் சொல்லி விட்டதில் பரவசம். 

சிலருக்கு நடிகர்/நடிகையைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்கு வேலை கிடைத்ததில் பரவசம்.

சிலருக்கு வெளிநாடு சென்றால் பரவசம்.

சிலருக்கு உணவைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்கு மழையைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்கு சுற்றுலா சென்றால் பரவசம்.

சிலருக்கு பொம்மை வாங்குவதில் பரவசம்.

பரவசம் பலவிதம்....

நானும் பரவசப்பட்டேன், 'தெருவில் விற்ற கோழிக்குஞ்சுகளில் இரண்டை வாங்கி என் கைகளில் ஏந்திக் கொண்டு நடந்தபோது...'
நீங்கள் எப்போது பரவசப்பட்டீர்கள்?
பகிரவும்...

இனியபாரதி.

ஆசை இல்லை...

பணம் சேர்க்க ஆசை இல்லை...

பொருள் சேர்க்க ஆசை இல்லை...

அழகுபடுத்திக் கொள்ள ஆசை இல்லை...

ஆடைகள் வாங்கிக் குவிக்க ஆசை இல்லை...

நெடும்பயணம் ஆசை இல்லை...

அழகிய மாளிகை ஆசை இல்லை...

வேற்று இன்பம் ஆசை இல்லை...

உன் "அன்பு மழையில் நனையும் ஆசை" மட்டும் இன்னும் தணியவில்லை...

இனியபாரதி. 

சனி, 8 ஆகஸ்ட், 2020

புதிரானவள்...

ஒருநாள் ஆசீர்வாதமாய் இருந்தவள்
மறுநாள் சாபமாய் மாறிப் போகிறாள்...

ஒருநாள் பேரழகியாய் தெரிந்தவள்
மறுநாள் அசிங்கமாய் தெரிகிறாள்

ஒருநாள் காதலியாய் தெரிந்தவள்
மறுநாள் யாரோ ஒருவர் போல் ஆகிறாள்

ஒருநாள் என்னவள் என்று சொல்லத் தூண்டியவள்
மறுநாள் எனக்கு நீ வேண்டவே வேண்டாம் என்றாகிறாள்

ஒருநாள் நீ இல்லாமல் நான் இல்லை என்று எண்ண வைத்தவள்
மறுநாள் நீ இல்லாமலே கடைசி வரை என்னால் வாழ முடியும் என்றாகிறாள்

"அவள்"

என்றும் ஒரு புதிரானவள்...

இனியபாரதி. 

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வேண்டாம் என்றால் விட்டுவிடு...

சில நாட்களிலோ

சில மாதங்களிலோ

ஒரு நட்பில் விரிசல் விழும் போது

அதைச் சரிசெய்ய பாடுபடத் தேவை இல்லை!!!!

ஒன்று நமக்கு வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால்
மீண்டும் அதன் பின்னால் சென்று வீணாக நேரத்தை வீணடிக்காதே!!

உன்னுடைய எதிர்காலம் உனக்கானது!
அதை நீ தான் உருவாக்க வேண்டும் என்று ஜெய் சொன்னார்...

அவர் சொன்னால் எல்லாம் நன்றாய்த் தான் தெரிகிறது!!

வாழ்க்கையில் பயன்படுத்துவது தான் கடினமாக உள்ளது!

இனியபாரதி.

புதன், 5 ஆகஸ்ட், 2020

எல்லாம் எனதே...

அவனுக்கான

நேரம்...

அன்பு...

அக்கறை...

பாசம்...

பகிர்வு...

பரஸ்பரம்...

பரிசுப் பொருட்கள்...

இரசிக்க வேண்டிய விசயங்கள்...

பயணங்கள்...

அறுசுவை உணவுகள்...

எல்லாம் எனதே....

இனியபாரதி. 


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கூண்டுக்குள் அடைபடா பறவை...

கூண்டுக்குள் இருக்கும் பறவையை விட
வெளியில் அலைந்து திரியும் பறவைக்கு
பொறுப்பு அதிகம்...

இனியபாரதி. 

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

கருவிழி இரண்டும்....

கருவிழிகள் இரண்டும் என்றும் பொய் சொல்லியதில்லை...
உன் பயம் எனக்குத் தெரியக்கூடாது என்பதற்காகத் தான் முக்காடிட்டுக் கொண்டுள்ளாய் போல!!!

கண்கள் பேசும் வார்த்தைகள் சீக்கிரம் புரிய வைத்துவிடும்
நமக்குண்டான சுபாவத்தை!!!

இதற்காக எந்தக் கல்லூரிக்கும் சென்றுப் பயிலத் தேவையில்லை!!!!


இனியபாரதி. 

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

மயில் இறகு போல...

அவனுடனான உறவு மயில் இறகு போல...

மயிலுடன் இருந்தாலும் சரி...

கீழே விழுந்தாலும் சரி...

அழகு தான்!!!

இனியபாரதி. 

சனி, 1 ஆகஸ்ட், 2020

புதுக் கதை....

அன்பு நண்பர்களே....

வணக்கம்....

நான், நாளை முதல் ஒரு தொடர்கதை எழுத முடிவு செய்தேன்...

என்ன தலைப்பு எடுத்து எழுதலாம் என்று யோசித்த போது, பெரும்பாலும் காதல் கதைகள் தான் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால், அதையே என் கதையின் மூலமாகக் கொண்டு உள்ளேன்...

இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்!

பொன்னி மற்றும் வண்டு... 

மேலும் அறிய என் blog யைத் தவறாமல் படிக்கவும்...


இனியபாரதி.