வெள்ளி, 31 ஜூலை, 2020

அதிகப் பற்று...

அவன் மீது பற்று கொள்வதற்கு முன்பே
உன் மீது அவ்வளவு பற்று கொண்டிருந்தேன்!!

எப்படி உன்னை விட்டுப் பிரிந்திருப்பேன்?

நாளை முதல் ஒரு புதுப்பொலிவுடன்...

அன்புத் தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்...

இனியபாரதி.

செவ்வாய், 21 ஜூலை, 2020

குழப்பம் இல்லாமல்...

குழப்பம் குழப்பம் தரலான்

ஆனால்

குழப்பம் தருபவன்

ஒன்றும் தர மாட்டான்!!!!

நீயாக குழம்பிக் கொள்ளாதே...

அருகிருப்பவரையும் குழப்பி விடு...

இனியபாரதி. 


திங்கள், 20 ஜூலை, 2020

உறக்கத்திலும் உறைந்து இருப்பவள்...

இதயம் வெவ்வேறு...

சிந்தனை வெவ்வேறு...

ஆனால் எண்ணம் மட்டும் எப்படி ஒன்று போல் இருக்கும்?

 நாள் முழுவதும் என் அருகிருந்து எனக்குக் கற்றுக் கொடுக்கிறாய்!!

உறக்கத்தில் கூட நீ தான் உறைந்து இருக்கிறாய் என்று எண்ணும் போது,

என்னுள் ஆணிவேராய் மாறிப் போன
உன் அன்பை எண்ணி வியக்கிறேன்!!!

இனியபாரதி.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

ஆசை தீர...

ஆசை தீர அவளை ஆரத்தழுவ வேண்டும்

இன்று மட்டும் அல்ல...

ஆயுள் முடியும் வரை!!!

இனியபாரதி. 

சனி, 18 ஜூலை, 2020

ஒன்றும் இல்லை..

"ஒன்றும் இல்லை" என்பது,

எப்படி ஒரு மனிதனின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்....


"ஒன்றும் இல்லை" என்று
மருத்துவமனைக்குச் சென்ற மூதாட்டியிடம் சொல்லும் போது மகிழ்ச்சி...

"ஒன்றும் இல்லை" என்று
பரிசோதித்து விட்டு கணவனிடம் சொல்லும்
மனைவியின் முகத்தில் வருத்தம்...

"ஒன்றும் இல்லை" என்று
என்று அம்மா சமையல் அறையின் உள்ளே இருந்து குரல் எழுப்பும் போது வேதனை...

ஒன்றும் இல்லை...

தாக்கத்தை ஏற்படுத்தும்!!!!

எனக்கு ஒன்றும் இல்லாத ஒன்று 
உனக்குப் பெரிதாகத் தெரியலாம்...

உனக்குப் பெரிதாய்த் தெரியும் ஒன்று
எனக்கு ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்...

வாழ்க்கையில் பல விசயங்கள் புதிராகவே இருக்கும்...

அதில் இதுவும் ஒன்று...

வாழ்க வளமுடன்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 17 ஜூலை, 2020

அடிமை!

அடிமைப்படுத்த நினைப்பவன் ஒருநாளும் ஆள முடியாது...

அடிமையாக இருப்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது...

இனியபாரதி. 

வியாழன், 16 ஜூலை, 2020

ஒருவழிப்பாதை...

திக்குத் தெரியாத ஒரு வழிப் பாதையில்

தடதட சத்தம் கூட

தவிக்க வைக்கும் சத்தம் தான்!!

இனியபாரதி. 

புதன், 15 ஜூலை, 2020

வேப்பிலைச்சாறு...

எனக்குப் பிடிக்காத ஒன்று

நீ செய்யும் போது

அது மிகவும் பிடிக்கிறது...

இந்த வேப்பிலைச் சாற்றைப் போல்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 14 ஜூலை, 2020

வெண்மை நிறமா? மணமா?

வெண்மை...

என்னை அசத்திய நிறம்...

ஒரு அழகான அடர்ந்த மலைப்பகுதி

மழை பெய்து முடிந்த மாலை வேளை...

ஒரு வெள்ளைப்புறா 

வானுக்கும் மண்ணுக்கும் நடுவில்

உல்லாசமாய் அலைந்து திரிகிறது...

அதைத் தூரத்தில் இருந்து ரசிக்கிறது ஒரு வண்ண மயில்!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 12 ஜூலை, 2020

எதுவும் முடியும்...

தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதென்று

நொந்து கொண்ட உள்ளம்

தவிக்கும் போது

அசரீரியின் குரல் இவ்வாறு.....

உன்னால் மறுபடியும் இணைய முடியும்!!!

இனியபாரதி. 

சனி, 11 ஜூலை, 2020

அருவி போல்...

அருவி போல் கொட்டும் அவன் அன்பு

அவளை நனைத்துச் செல்லும் போது

நனைவது அவள் உடல் மட்டும் அல்ல

அவள் மனமும் தான்...

அவனுக்கு கொட்ட ஆசை...

அவளுக்கு நனைய ஆசை...

விசித்திரமான உறவு இந்தக்காதல்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 10 ஜூலை, 2020

புன்னகை...

கர்வம் கொண்ட அவளின்

புன்னகை மட்டுமே

என்னைக் கர்வம் கொள்ள வைக்கிறது...

அவள் என்னவள் என்பதால்!!!

இனியபாரதி. 

வியாழன், 9 ஜூலை, 2020

அவளுக்குப் பிடித்த அவன்!!!

உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்ட அடுத்த நொடி 
யோசிக்காமல் வந்த பதில் "நீ" என்று...

அடுத்து...

"என்னைப் பிடிக்கும்" என்று சொல்லி விட்டு
அவள் கால் விரல் தரையில் இட்ட கோலம்
அவளைக் கட்டி அணைத்து
நீயும் நானும் வேறல்ல..
இதில் நீ, நான் என்று வேறு பிரிக்கிறாயா
என்று சொல்லத் தோன்றியது...

அடுத்து...

நாம் இருவரைத் தவிர
எனக்குப் பிடித்தவை 
"புத்தகங்கள்" என்றாள்!!!
அந்த நொடி அவளைப் புத்தகம் போலத் தூக்கிப் படிக்க வேண்டும் போல் இருந்தது
தொடக்கம் முதல் இறுதி வரை...

அடுத்து...

என் பக்கத்து ஊர் பெரியவர் என்றாள்...

நான் அந்த ஊரை விட்டே காலி செய்தேன்!!!

இனியபாரதி. 

புதன், 8 ஜூலை, 2020

இருந்தால் என்ன?

உன்னைப் பற்றிய நினைப்பே
இல்லாத போது
என்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாய்!!!

உன்னைப் பற்றி மட்டுமே நினைக்கும் போது
என்னைப் பற்றித் துளி கூட நினைக்காதிருந்தாய்!!!

உன்னைப் பற்றி நினைத்தும் நினைக்காமல் இருப்பது போல் நடிக்கும் போது
என்னைப் பற்றி நீயும் நினைப்பது போல் நடித்து நினைக்காமல் இருந்தாய்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 7 ஜூலை, 2020

ஏணி மட்டும் போதுமா?

ஒரு ஏணிப்படியை மட்டும் பிடித்துக் கொண்டு மேல ஏற நினைத்தது
அவன் முட்டாள்தனம்...

எப்படி ஏணி மட்டும் முக்கியம் என்று நினைத்த அவனால்
நிலத்தின் உறுதியைப்
பார்க்க முடியாமல் போனது?

இனியபாரதி. 

திங்கள், 6 ஜூலை, 2020

கொடை வள்ளல்..

என்றும் என்னால் இயன்ற அளவு

நீரைத் தருகிறேன்.

அதைத் தங்கமென நினைத்து

வீட்டில் சேமித்து வைத்துக் கொள்!!!

வானம்

இனியபாரதி. 


ஞாயிறு, 5 ஜூலை, 2020

அவள் ஒரு நிழல்...

பசுந்தோகை விரித்து

அசைந்தாடிக் கொண்டிருந்த

அவளின் நிழலில்

இளைப்பாறிய அவனும் அவளும் சேர்ந்து பாடிய பாடல்...

"தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணம்மோ!!!"

இனியபாரதி. 




காணாமல் போன கருங்கயிறு...

யாரும் கண் வைக்காமல் இருக்க

பொத்திப் பொத்தி வைத்து...

எங்கு சென்றாலும்

உடன் எடுத்துச் சென்று...

வழிபோக்கனுடன் பணிக்கும் போது

தொலைத்து விட்டான்

அவன் "பொக்கிஷத்தை"!!!

இனியபாரதி. 

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்...

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்"

என்றொரு பழைய பாடல் இருக்கிறது...

அதை ஒத்த இன்றைய எனது தலைப்பு

"கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்..."

நாம் கேட்கும் அனைத்தும்
கிடைத்து விடும் பட்சத்தில்
நாம் ஆண்டவனை நினைக்க மறந்து விடுகிறோம்...

நமக்கு கஷ்டங்களைக் கொடுத்து
உனக்கு நான் மட்டும் தான் இருக்கிறேன் என்று உணரச் செய்கிறார்!!!

கஷ்டங்களையும் நண்பனாய் ஏற்றுக் கொள்கிறேன்... 
என் நண்பனின் பல குணங்கள் என்னில் வெளிப்படும்... 

இனியபாரதி. 

சனி, 4 ஜூலை, 2020

வலித்தாலும் ஏற்றுக் கொள்ளும்...

காவியம் படைக்கும் காதல் கதையைக் கொண்டவன்...

கண் சிமிட்டலில் அவளை அடக்கி வைத்தவன்...

காமம் இல்லாக் காதல் செய்தவன்...

கண்ணீர்த் துளிகளை முத்தக் கரைசல் ஆக்கியவன்...

கவலை இல்லாமல் சுற்றித் திரிந்தவன்...

எல்லா அழகின் உருவாய் இருந்தவன்...

வலி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும்!!!

இனியபாரதி.

வெள்ளி, 3 ஜூலை, 2020

அன்புள்ள!!! மதிப்பிற்குரிய???

யாரும் அன்பாக அழைக்கப்பட ஆசைப்படுவார்களா?

மதிப்பாக நடத்தப்பட ஆசைப்படுவார்களா?

என்னைப் பொறுத்தவரை என்னை அன்பாக நடத்தினால் போதும் என்பது என் எண்ணம்...

இன்று ஒரு நிகழ்வு...

என் கல்லூரி ஆசிரியருக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டும்... நானும் புலனம் மூலமாகத் தகவலைத் தெரிவிக்க முற்பட்டேன்...

அன்பான ஆசிரியர் அவர்களுக்கு... என்று டைப் செய்து அனுப்பியும் விட்டேன்... 

அனுப்பிய இரண்டொரு நிமிடங்களில் அவரிடம் இருந்து ஒரு குரல் பதிவு என்னை வந்தடைந்தது...

அதில் அவர் குறிப்பிட்டிருந்தது...

நீங்கள் ஆசிரியரை "அன்பான" என்று அழைத்தால், ஆசிரியர் மாணவரிடம் அவ்வளவு நெருக்கமாகப் பழகுகிறாரா? என்று எல்லோரும் நினைப்பார்கள்... எப்போதும் மதிப்பிற்குரிய என்று தான் எழுத வேண்டும் என்று அனுப்பி இருந்தார்...

என் கேள்வி என்னவென்றால்!!

ஆசிரியர் மாணவருக்கு இடையே உள்ள உறவு 

மதிப்புள்ளதாக இருக்க வேண்டுமா?

அன்பானதாக இருக்க வேண்டுமா?

நான் புரிந்து கொண்ட விதம் தவறா??

அன்பு தவறென்றால் மாற்றிக் கொள்கிறேன்..

என் ஆசிரியைக்காய்!!!

மதிப்பிற்குரிய!!!

இனியபாரதி. 

உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள...

iniyajeni3@gmail.com

வியாழன், 2 ஜூலை, 2020

கறை நல்லது... குறை நல்லது...

கறை நல்லது விளம்பரம்

மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது

அன்னையர்கள் மத்தியில்!!!

குறை நல்லது என்பது

இந்தக் கறையைப் போலத் தான்!!!

குறை இருக்கும் இடத்தில் தான்

அந்தக் குறையைத் திருத்திக் கொள்ள 

பக்குவம் பிறக்கும்...

குறை நல்லது!!!

குறையை எடுத்துச் சொல்லும்

நல்லவர்கள் இருப்பதும் நல்லது!!!

இனியபாரதி. 

புதன், 1 ஜூலை, 2020

ஜுன் போனால் ஜூலை காற்றே...

ஜுன் மாதம் முடிந்து

ஒருவழியாக ஜூலைக்கு

அடியெடுத்து வைத்தாயிற்று!!!

ஒரு மாதம் கழிவதற்கு

இவ்வளவு நாட்களா என்றே 

எண்ணத் தோன்றி விட்டது!!!

ஜூலை பிறந்த இந்த நன்னாளிலே

நம்மிலும் தீமைகள் குறைந்து

நன்மைகள் உண்டாக 

இறைவனைப் பிரார்த்திப்போம்...

இனியபாரதி.