செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

விடியலை நோக்கியொரு விரதம்!... கவிதைகள்

இந்தப் புத்தகத்திலிருந்து நான் இரசித்த சில வரிகள்...
வேட்கை உள்ள விவேக இளைஞனே
வேங்கை நீ
உன்னிடமிருப்பது வெறுங்கையல்ல...
நினைத்தாலே நிறைவேறும்
நீ
நிஜமாக்க வேண்டிய திருவாசகம்.
சில தோல்விகள்
உனை உசுப்பும்
பெரும் வெற்றிக்கான சிறு வலிகள்
நீ
கலங்கி மட்டும் கண்ணீர் விடாதே.
அது
கோழைகளின் ஆயுதம்.
வெறிகொண்டு கற்றலும்
வீறு கொண்டு உழைத்தலும்
உன்னை வெளிக்கொணரும் கருவிகள்
உண்டு உறங்கி விழித்து
வாழ்க்கை உருண்டோடினால்
மனிதனுக்கும் மலைப்பாம்புக்கும்
வித்தியாசமென்ன?
மனிதர்கள்
காசு பணத்தின் பக்கம்
கடவுள்
நல்லவர்களின் வர்க்கம்
ஆசா னுரையால் அறிவை வளர்க்காமல்
பேசுவதால் உண்டோ பயன்
நீ நினைத்தால் வான வில்லைக்கூட
வளைத்து வில்லாக்கி விடுவாய்!
தேடி அடைபவை:
1. செல்வச் சிறப்பும்
2. நல்லோர் உறவும்
3. நோயிலா வாழ்வும்
தேடக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: