திங்கள், 10 ஆகஸ்ட், 2015

நம்பிக்கை

இன்று மாலைத் திருப்பலிக்கு ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். இன்று 'இறைவன் மீது நம்பிக்கை வைப்பது' பற்றிய வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. எப்போதும் மறையுரை என்றால்இ எனக்கு இது தான் வழக்கம். சாமியார் உரை நிகழ்த்தும் போது நாம் அவருக்குத் தெரியாமல் மறைவாகத் தூங்குவது. இன்றும் அப்படித் தான் என்று நினைத்து அமர்ந்தேன். எடுத்ததும் நிர்வாணச் சாமியார் என்று ஆரம்பித்தார். என்னடா இது? இன்றைய வாசகத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லையே என்று நினைத்துஇ சரி என்னதான் சொல்கிறார் என்று கேட்கலாம் என்று கொஞ்சம் கவனித்தேன். ஓவ்வொருவரும் தன்னைக் கடவுள் என்று அழைத்துக் கொண்டு தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அலைகிறார்கள். காமத்தின் வழியாக இறைவனைக் காணலாம்; என்கிறான் ஒருவன். நான் தான் கடவுளின் அவதாரம் என்கிறான் ஒருவன். ஒருவன் படுத்திருந்த இடமெல்லாம் தங்கம். ஒருவன் படுக்கையறை தொலைக்காட்சிப் பெட்டியில் காலையிலிருந்து மாலை வரை ஒளிபரப்பப்படுகிறது. இவ்வாறு சற்று ஆவேசமாகவே பேசிக் கொண்டிருந்தார். எனக்கு சிரிப்பு ஒரு பக்கம். இவர் என்ன தான் சொல்ல வர்றார்... பார்க்கலாம். என்ற எண்ணம் மறு பக்கம். ஒருவழியாக 'Homosexual' வரைக்கும் இழுத்து மறையுரையை நிறைவு செய்தார்.
இவ்வளவு எடுத்துக் காட்டுகள் இவர் கூறியதுஇ ஒரே ஒரு விசயத்திற்காகத் தான். 'என் மீது நம்பிக்கை வையுங்கள். என்னை நம்புகிறவர் என்னை உண்டாக்கியவரையே நம்புகிறவர் ஆவார்'. இவ்வளவு தான். இதற்குக் கூற உதாரணங்கள் ஆயிரம் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விடுத்து தேவையில்லாமல் அவருடைய சக்தியையும் இழந்துஇ இவ்வளவு பேச்சுகள் தேவையா?
எங்கள் ஆலயத்தில் ஒரு சாமியார் இருந்தார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம். அவ்வளவு அழகாக ஒவ்வொன்றையும் எடுத்துக் கூறுவார். அனைவரும் பாராட்டுவார்கள். ஆனால் நான் ஒரு முறை கூட அவரை நேரில் பாராட்டியதேயில்லை. இப்பொழுது அவரைப் பாராட்ட வேண்டும் போல் தோன்றுகிறது.ஒன்று இல்லாத போது தான் அதன் அருமை தெரியும் போல... நீங்களும் யாரையாவது பாராட்ட வேண்டுமென்று நினைத்தால் உடனே பாராட்டி விடுங்கள். மகிழ்ச்சி பாராட்டுபவருக்கும் கிடைக்கும். பாராட்டப்படுபவருக்கும் கிடைக்கும். அந்த அருட்தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இ நானும் கண்டிப்பாக பாராட்டுவேன்.

கருத்துகள் இல்லை: