திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தேடல்...

இன்பத்தைத் தேடி அலைந்தேன் - ஆனால்
இன்பமும் துன்பமும் கலந்த சந்தோஷஇ சமாதான
வாழ்க்கை கிடைத்தது.
புகழைத் தேடி அலைந்தேன் - ஆனால்
என் செயல்கள் என் வாழ்க்கைக்குச்
சான்றாய் இருந்தது.
பணத்தைத் தேடி அலைந்தேன் - ஆனால்
என் தேவைக்கேற்பஇ நிறைவான
செல்வம் கிடைத்தது.
உறவுகளைத் தேடி அலைந்தேன் - ஆனால்
என்றும் என்னை விட்டுப் பிரியாத
உறவாக நீ கிடைத்தாய்...
'என் இறைவா'
என் தேடல் என்றும் நீயாக....
உன்னை மட்டும் தேடும் மனம் வேண்டுகிறேன்.
இப்படிக்கு...
தேடகி.

கருத்துகள் இல்லை: