எனக்கு விவேகானந்தர் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடைய சில வாசகங்களை என் அறையில் எழுதி ஒட்டி வைத்திருக்கிறேன். அதனால் தினமும் அதை வாசிக்க வாய்ப்பு கிடைத்துவிடும். 'இந்த தேசத்தில் பிறந்த ஒரு புழு கூட உண்மைக்காகவே உயிர் விட வேண்டும்' என்பது தான் அந்த வாசகம். இதே போல் அவருடைய பல வாசகங்களை என் குறிப்பேட்டில் குறித்து வைத்திருக்கிறேன்.
அவரது காலத்தில் நான் வாழவில்லையே என்ற ஏக்கம் எனக்குண்டு.
இரண்டு நாட்களுக்கு முன் பாரதி(தமிழ் படம்) பார்த்தேன். பாரதி கதாப்பாத்திரத்தின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த இரண்டு நாட்களாக என் எண்ண ஓட்டங்களெல்லாம் அந்தப் பாரதி படத்தைப் பற்றித்தான்.
பாரதியாரால் எப்படி இ;வ்வளவு எளிமையாக வாழ முடிந்தது? 'மகாகவி' பட்டம் கிடைத்த பின் கூட தன் சமுதாயத்திற்காக உழைக்க வேண்டுமென்ற ஏக்கம்.... தன் குடும்பத்தின் வறுமையைக் காணாமல் அடுத்தவர் குடும்பத்தின் பசியைத் தீர்க்க உதவிய இவரது பரந்த மனம்...கீழ்சாதிஇ மேல் சாதி என்று பாராமல் அனைவரையும் சமமாக மதிக்கும் சமத்துவப் பண்பு...இப்படி பல பண்புகளுக்குச் சொந்தக்காரரான இவர் இறந்த பொழுது அழுதது... சொற்பம் 20 பேர் மட்டும் தான். இவருக்கே இந்த நிலை என்றால்!!!! எனக்கு!!!!!
சிந்தனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. எனக்குஇ இந்தச் செல்லம்மா பாத்திரம் மிகவும் பிடித்தது. 'செல்லம்மா'– அவரின் மனைவி. இன்றைய காலக்கட்டத்தின் பெண்களை இந்தச் செல்லம்மாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். தன் கணவன்இ ஒரு நாள் ஒரு பொழுது பணம் தரவில்லை என்றால் கூட, அன்று காளி பூஜை, அந்த வீட்டில் தான் நடக்கும். ஆனால் , தன் கணவன் பித்துப் பிடித்தவன் என்று மற்றவர் சொல்வதைக் கேட்டும் கூட தன் கணவனை, ஒரு நாளும் விட்டுக் கொடுக்காத பெண் தான், நம் செல்லம்மா...
செல்லமா கூப்பிடுவது தான் எனக்குப் பிடிக்கும்...
ஆனால்.... இப்போது என்னைச் செல்லம்மா என்று கூப்பிட ஆசைப்படுகிறேன்.
இப்படி ஒரு மகாகவியின் செல்லம்மா(செல்லமா)க நான் இல்லாத நிலையை எண்ணி வருந்துகிறேன்.
தமிழின் அருமையை எனக்கு உணர்த்திய என் கவி 'பாரதிக்கும்'....
பெண்மையின் பெருமையை உணர்த்திய 'செல்லம்மாவிற்கும்'...
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக